காலத்தை வென்ற கவி
பேராசிரியர் சு.பசுபதி
வெண்டளை
வேதம், விரிபொருள் உள்ளடங்கும்
முண்டகம் என்றுதிகழ் முப்பாலில் – தண்டமிழில்
சீலமிக நன்னெறிகள் செப்பிய வள்ளுவர்
காலத்தை வென்ற கவி.
முந்து
தமிழினில் முத்தமிழ் காப்பியம்
சிந்தை கவரும் சிலம்பெனும் – செந்தமிழ்
மாலிகை நூலை வடித்தவிளங் கோவடிகள்
காலத்தை வென்ற கவி.
தந்தைசொல்
மீறாத் தனயனாய்ச் சூர்யகுலச்
சந்திரனாய் மானுடனாய்த் தாரணியில் – வந்துதித்த
மாலவனின் காதைசொல்லி வான்புகழ் பெற்றகம்பன்
காலத்தை வென்ற கவி.
தேசியம்
செந்தமிழ் தெய்வமென மூன்றையும்
காசினியில் என்றும் கடைப்பிடித்துத் – தேசுடனே
கோலமிகு பாக்கள் கொடுத்தநம் பாரதி
காலத்தை வென்ற கவி.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்