காலத்தை வென்ற கவி
பாவலர் கருமலைத்தமிழாழன்
சங்கத்துப்
பாக்கள்தம் சாறெடுத்துச் சிந்துகளாய்
இங்கிருக்கும் பாமரர்க்கே ஈந்திட்டான் ! - தாங்கியவர்
சீலமுடன் இன்றும் சிரம்கொள்ளக் கண்ணதாசன்
காலத்தை வென்ற கவி !
ஆட்டனத்தி ஆதிமந்தி
ஆன்றசுவை மாங்கனியை
நாட்டிற் களித்த நறுங்கவிஞன் ! - பாட்டினிலே
கோலத்தை மாற்றிக் கொடுத்ததனால் கண்ணதாசன்
காலத்தை வென்ற கவி !
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்