காலத்தை வென்ற கவி
கவிஞர்
சபா.அருள்சுப்பிரமணியம்
கற்றவர்கள்
மட்டும் கருத்தில் எடுத்துவந்த
சொற்களைக் கூட்டிக் சுவையூட்டி - அற்புதமாய்
ஞாலத்தில் யாத்திட்ட நற்கவியே என்றென்றும்
காலத்தை வெல்லும் கவி.
எத்தனையோ
பாவலர்தாம் இப்புவியிற் கண்டவற்றை
சித்திரமாய்ப் பாவுருவிற் தீட்டிவைத்தார் - பத்திரமாய்
காலத்திற் கேற்பக் கவிதைகளாய்ப் பாடியதே
காலத்தை வென்ற கவி.
பாடும்
கவியெல்லாம் பார்மீது வாழ்ந்திடுமா?
நீடுபுகழ் சேர்த்து நிலைத்திருந்து – பீடுபெற்று
சாலச் சிறந்ததெனச் சான்றோர்கள் ஏத்துவதே
காலத்தை வெல்லும் கவி.
பண்டைத் தமிழரது பண்பாட்டில்,
வாழ்வியலிற்
கண்டவற்றைச் சொன்ன கவிச்சான்றோர் - மண்டலத்தில்
பாலம்போல் நின்றெமக்குப் பைந்தமிழை தந்தவர்கள்
காலத்தை வென்ற கவி.
பட்டிதொட்டி
எல்லாம் பவனிவரும் பாட்டுகளை
விட்டகன்ற பாரதியே விந்தைநிறை பாவலனாம்
காலத்தை வென்றிங்கே காலமெலாம் வாழுமவன்
காலத்தை வென்ற கவி.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்