காலத்தை வென்ற கவி

புலவர் முருகேசு மயில்வாகனன்

லம் விழுதாய் அமைகின்ற ஆக்கங்கள்
சீலத்தைக் காக்கின்ற சிற்பங்கள் – பாலமாம்
வாலறிவன் நற்றாள் தொழுதெழுதும் பாக்களே
காலத்தை வென்ற கவி.

க்கள் கவிஞர்கள் மாசகற்றும் சொத்துக்கள்
பக்க பலமாகப் பாடுபடும் – தக்கோரின்
சீலத்தைக் காக்கின்ற சிங்காரப் பாக்களே
காலத்தை வென்ற கவி.

ம்பனைப்போல் பாரதியாய்க் கற்பனையில் வல்லவரே
நம்பிக்கை நட்சதிரம் நாட்டிற்குத் – தம்திறனைச்
சீலமுடன் காட்டுகின்ற சிந்தனைச் சிற்பிகளே
காலத்தை வென்ற கவி.

ள்ளுவர் போன்ற வலிமைசேர் பாவலர்கள்
தெள்ளுதமிழ் தேர்ந்தறிந்தே தெய்வ நெறிமுறையில்
மூலம் அறியும் முறையான பாக்களே
காலத்தை வென்ற கவி.

முக்காலத்திற் கேற்ற முழுநிறைவு பெற்றவரே
சிக்கல் அகற்றுகின்ற சிற்பிகளாம் – தக்கதந்த
சாலச் சிறந்தவரின் சாதனையாய் வந்தவையே
காலத்தை வென்ற கவி



 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்