காலத்தை வென்ற கவி

கவிஞர் அச்சுவேலியூர் கு.கணேசன்

பாரத தேசமதின் பைந்தமிழ் பாவலரில்
பாரதிக்கு ஈடிங்கே பாரதியே - சோரமற்ற
கோலத்தில் கொள்கையில் குன்றா நெறிகளில்
காலத்தை வென்ற கவி

தீர்க்க தரிசியாய் தீமைகண்டு அஞ்சாத
போர்க்குணப் பாரதியைப் போற்றிடுவோம் - நோக்குங்கால்
சீலத்தில் சிந்தைகவர் செந்தமிழ் பாவலன்
காலத்தை வென்ற கவி

க்கினிக் குஞ்சவன் ஆருக்கும் அஞ்சாதான்
வக்கற்றுப் போனாலும் வாழ்க்கையில் - துக்கமிலான்
வேலொத்த வீச்சருவாள் பேச்சழகன் பாரதி
காலத்தை வென்ற கவி





 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்