காலத்தை
வென்ற கவி!
கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா
(இன்னிசைப் பஃறொடை வெண்பா)
கற்பனைகள்
காட்டாறாய்க் கட்டுடைத்துப் பொங்கிவரச்
செற்பதங்கள் கூடிச் சொரிமழையாய்க் கொட்டிநிற்கப்
பற்பலவாம் பாவணிகள் பாவோசைச் சந்தங்கள்
அற்புதமாய் நெஞ்சமதை அள்ளும் வகைசேர்த்துத்
தெய்வத் திருமகனின் தேர்ந்த வரலாற்றின்
மெய்யுணர்த்தும் காவியத்தை மேதினிக்குத் தந்தாலும்
பைந்தமிழர் பண்பாட்டைப் பண்டைத் தமிழகத்தை
ஐந்திணயிற் கண்ட அகவொழுக்க நீதிகளைக்
கானிடத்து நட்பைக் கைகோத்த நல்லுறவை
மானிடத்தைப் பாடிவைத்து மாற்றத்தை ஏற்றிவைத்து
ஞாலத்தை வென்ற நற்கவிஞன் கம்பனென்றும்
காலத்தை வென்ற கவி!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்