பூக்காடே வாபக்கம் பூத்து!

கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா

போர்க்காடு மூடியதே பொங்கும் தமிழினத்தைத்
தேர்க்காலின் கீழ்ப்பட்ட தேரைகள்போல் - சாக்காடும்
நோக்காடும் கண்டே நொடிந்ததெலாம் போதுமினிப்
பூக்காடே வாபக்கம் பூத்து!

பேயாட்சி செய்யப் பிணந்தின்னும் சாத்திரமென்(று)
ஓயாது நீளுகின்ற ஓரவலம் - தேயாதே
தீக்காடாய் மாறிவிட்ட தீந்தமிழர் தாய்நிலமேல்
பூக்காடே வாபக்கம் பூத்து!



 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்