பூக்காடே வாபக்கம் பூத்து

தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்

ற்றோரம் மீனாகி அள்ளுண்ட போதும்யான்
காற்றோடு போகாமற் கட்டுண்டேன் - தேக்கோடும்
மாக்காடு பற்றும் மரணம் இனியின்றிப்
பூக்காடே வாபக்கம் பூத்து!

ண்ணுக் கிரையாகி மாற்றான் கணக்காகித்
தெண்ணீர் வயலோடும் தீயாகிக் - கண்ணீரின்
நோக்கோடு சாயும் நுழைவாயில் இல்லாமல்
பூக்காடே வாபக்கம் பூத்து!

ருந்த வயலின் இறைமை அழிக்கும்
பருந்துச் சிறகோடும் பட்டோம் - பொருந்தாத
சாக்காடு வந்து சடலங்கள் வீழாமல்
பூக்காடே வாபக்கம் பூத்து!

ழிந்த மனிதர் அதர்வாய்க் குழியில்
பழியின் சதிராகிப் பட்டோம் - சுழியாகித்
தீக்காடு பற்றித் திரும்பத் தெறிக்காமல்
பூக்காடே வாபக்கம் பூத்து!

ங்கண் மரணத்தின் யாப்பிற் கருக்குலைந்து
போங்கண் நெருப்பாகிப் போனவர்கள் - ரீங்காரம்
மீக்காகும் பொன்வண்டு மேவும் திருநிலமாய்ப்
பூக்காடே வாபக்கம் பூத்து!





 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்