பூக்காடே வாபக்கம் பூத்து

கவிஞர் இனியன், கரூர்

நெல்லாகிப் புல்லாகி நீண்ட கமுகாகி
நல்லார்க் குதவிடும் நல்லமுதே! - வெல்லமே!
பாக்கனியே! பார்போற்றும் பாவியமே! காவிரியாம்
பூக்காடே வாபக்கம் பூத்து.

முக்கிளையாய் மூண்டெழுந்த முத்தமிழே! இப்போது
சிக்கலிலே நீஇருக் கின்றாய்கொல்! - தெக்கணத்தார்
நாக்கில் நடம்பயிலும் நற்றமிழே! தேனார்ந்த
பூக்காடே வாபக்கம் பூத்து.

துன்பம் துடைக்கின்ற தூமணியே! வற்றாத
இன்பம் தருமோர் இனிப்பகமே! – குன்றாத
ஆக்கம் நிறைக்கும் அருமருந்தே! அன்பெனும்
பூக்காடே வாபக்கம் பூத்து.


 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்