பூக்காடே வாபக்கம் பூத்து

கவிஞர் அச்சுவேலியூர் கு.கணேசன்

நோக்காடு உற்றபோதும் நோகாது பெற்றதாயை
நாக்கூசும் வார்த்தைபேசும் நன்றியிலா - நாக்கினானை
வேக்காடு கொள்ளாது வந்து வரவேற்றாள்
பூக்காடே வாபக்கம் பூத்து

ண்ணின் மணிகளே கண்கண்ட தெய்வங்களே
மண்ணின் மழலைகளே மாண்டிரே - மண்ணுக்காய்
சாக்காடு சென்றாலும் சந்நிதிப் புஷ்பங்காள்
பூக்காடே வாபக்கம் பூத்து

முள்ளிவாய்க்கால் சோகமதை முன்மொழிய வார்த்தையிலை
குள்ளநரிக் கூட்டத்தின் குண்டுமழை - நள்ளிரவில்
சாக்காட்டில் செங்குருதி சண்பகப்பூஞ் சோலையதாய்
பூக்காடே வாபக்கம் பூத்து

ண்ணீரும் ஆறாய்க் கதறியழும் தாய்முகங்கள்
அண்ணாந்து பார்த்தழுது ஆண்டவனை - விண்நோக்கி
வாக்குத் தடுமாறும் வாழ்விழந்த ஏதைகள்முன்
பூக்காடே வாபக்கம் பூத்து

பூக்காடாயப் பூமியிலே புன்முறுவல் செய்தாளே
நோக்கு மிடமெலாம் நோன்பிருந்தாள் - பூக்குவித்து
ஏக்கமுடன் ஏனொ இடிவிழுந் தேங்கிநின்றாள்
பூக்காடே வாபக்கம் பூத்து




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்