பூக்காடே வாபக்கம் பூத்து

கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்

ன்னையும் தந்தையும் ஆர்வமுடன் பேணுபவர்
இன்னல்கள் தோன்றிடினும் இச்சையுடன் - என்றுமே
தாங்கி அரவணைக்கும் தன்மை உடையவர்க்கு
பூக்காடே வாபக்கம் பூத்து.

பெரும்தலைவர் காமராஐர் போலவே தொண்டை
விருப்புடன் செய்யும் வலிமை - உரியவர்க்கு
வாக்குகள் போட்டு வளமாக்கும் நல்லோர்க்கு
பூக்காடே வாபக்கம் பூத்து.

ப்பாமல் வாக்குறுதி தாராள மாய்யளித்து
நம்புகின்ற மக்களுக்கு நன்மைகள் - எப்போதும்
ஆக்கமுடன் செய்யும் அரசியல் வாதிக்கு
பூக்காடே வாபக்கம் பூத்து.

தாயகத்தில் எம்மவரை தாக்கி அளித்திட்ட
ஆயுதம் உள்ள அரக்கநாடே - தூயமன
நோக்குடன் சர்வதேசம் நம்மவர்க்கு சேவைசெய்யின்
பூக்காடே வாபக்கம் பூத்து.

ண்டுகள் ஒன்பது ஆகியும் இன்னுமா
நீண்டுபோகும் நீதி நிலைத்திடுமா - வேண்டுகின்றோம்
காக்கின்ற நாடுகளே காத்திரமாய் தீர்த்துவைப்பின்
பூக்காடே வாபக்கம் பூத்து.





 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்