பெண் (ஆங்கிலத்தில்
- மிர்தாதித்)
தமிழில் - முனைவர்
செ.இராஜேஸ்வரி
பெண்ணை
மகிமைப்படுத்துங்கள்
புனிதமானவள் என்று போற்றுங்கள்
மனித குலத்தின் தாய் என்றோ
மனைவி என்றோ
காதலி என்றோ அல்ல
மனிதனின் இரட்டைப் பிறவி என்பதாலும்
சம பங்கு கொண்டவள் என்பதாலும்
நீண்ட கால உழைப்பாளி என்பதாலும்
இருமை வாழ்வில் அல்லல்படுபவள் என்பதாலும்
அவளை போற்றி புனிதப்படுத்துங்கள்
காலப்போக்கில் இரட்டையர் இணைந்து ஒன்றாவர்
வெற்றியாளர் ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல
அவர் பரிபூரண மனிதம்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்