கவிதைகளால்
அளந்துபார்
கவிஞர் புகாரி
கவிதைகளால்
முகர்ந்துபார்
உலகம்
பூப்போலே
கவிதைகளால்
உறங்கிப்பார்
கனவும்
நிஜம்போலே
கவிதைகளால்
தொட்டுப்பார்
பரிசம்
சொர்க்கத்திலே
கவிதைகளால்
வளைத்துப்பார்
இதயம்
முயல்போலே
கவிதைகளால்
தேடிப்பார்
வாழ்க்கை
கைக்குள்ளே
கவிதைகளால்
திறந்துபார்
கதவும்
காற்றாலே
கவிதைகளால்
வைதுபார்
பகையும்
நிலையாதே
கவிதைகளால்
நிமிர்ந்துபார்
வானம்
சிறுதுகளே
கவிதைகளால்
அளந்துபார்
காலம்
குறுகியதே
anbudanbuhari@gmail.com
|