சிங்கப்பூர் ஆங்கிலக் கவிதைகள்

தமிழில்: ஜெயந்தி சங்கர்

அன்றாட வாழ்வின் அனைத்து வேர்களும் ஆழமாக
 
                                                          - ப்ராண்டன் லீ

அன்றாட வாழ்வின்
அனைத்து வேர்களும்
ஆழமாகப் புதைந்திருக்க
திரும்பி வராதபடி
மறைந்து போனோமென்றால் கூட
உணர மாட்டோமா நாம்
அது இழுப்பதை
 
முதன் முதலில்
அஸ்திவாரம் தோண்டிய
இந்த வீட்டுக்கு
தவிர்க்க முடியாது
கைகள் அறியும்
காலையின் குளிர்ச்சிமிகு
ஒளியில்
 
கண்கள் காணுமுன்னரே
மற்றவரின் காலைக்கடன்களுடன்
போட்டியைத் தவிர்க்க
உணரமாட்டேனா
தெளிவற்ற அந்தக் கூடாரத்திற்குள்
புகுந்த திருப்தியை
 
காதலர்களின்
தனிமை
நம் எதிர்காலத்தின்
ஒவ்வொரு பார்வையிலும்
வெள்ளி விளம்பை
உடைத்து
 
வீட்டுச்சாமான்களின்
பக்கவாட்டு அமைப்பு
கவனிப்பற்ற மூங்கில்
அமைதியாக
காபி இயந்திரம்
 
நிச்சயம்
எழுதப்பட்டுள்ளன
இந்த வேர்களில்
ஆழமாய்
உலர்ந்தும்
உப்பியும்
மீண்டும் மீண்டும்
கடந்தகாலத்தின்
அழிக்கப்பட்ட
தொகுப்புகளின் மேல்
 
இப்போது தான்,
முதன்முதலில்
அறிகிறேன்
இரு நாடுகளின் வரலாற்றை
பிளவுபட்டும்
வரவேற்கும்
எல்லையுடன்
 
கடக்கும்போது
சட்டவிரோத
குடியேறிகள்
சுடப்படுவதில்லை
அங்கே
அதற்கு
பதிலாக
அவரறியாமலே
துரத்துவோரை
மிகமிக ரகசிய
தூரங்களுக்கு
இட்டுச் செல்கின்றனர்
 
 
பொது நீச்சல் குளத்தில் முன்னாள் சிறைக்கைதி
 
                                        -- ஜில்பெர்ட் க்கோ
 
ஆண்களுக்கான
குளியலறையில்,
ஆழ்அடர்
பழுப்பாய்
ஈரமுதுகும்
தோளும்
முரண்பட்டன,
பிருட்டத்தின்
திடுக்கிடும்
வெண்மையுடன்.
அங்கு நான்கு வரிகள்
உலர்ந்த கடின
சதை
விரலளவு தடிமனில்
அணைக்கட்டுகளைப் போல
கிழிந்த தோலினால் ஆன
காலை அகட்டி நிற்கும்
சந்தியடிகளைப் போல.
 
குளிர்
நீரில்,
அவன் உரக்கப்
பாடுகிறான்,
சுத்தமாக்க
கடுமையாகத்
தன்னைத் தேய்த்தபடி.
பல நீண்ட
ஓரப்பார்வைகளையும்
வெளிப்படையான
முறைப்புகளையும்
நிராகரித்தபடி.
அவனின் வடுக்கள்
வெளிப்படையாக
கடந்தகாலத்தை
அவன் மறைக்க மாட்டான்,
அவை மன்னிக்கவோ
கழுவியகற்றவோ
ஒருபோதும் முடியாதென்று
அறிந்தபடியால்.

 
 

jeyanthisankar@gmail.com