புதியதோர் புலர்வுக்காய்.....

மானியூர் மைந்தன்

வாழ்வின் வட்டத்தின்
உள்விளிம்பில்
ஊமையாய் ஓர் இனம்
உண்மைகளின் வலியோடு
கண்ணீர் வடிக்கிறது

அங்கே எழும்பும்
அழுகை ஓலம் கேட்டு
இருவிழி நீர் உதிர்க்கிறது
இரக்கமில்லா அரக்கனே
வென்று குவித்தாயென்று
வீரமுழக்கமிடாதே

இன்றும்-நீ
கொன்று குவித்தெல்லாம்
அப்பாவித் தமிழனையே
வயிறெரிய என்இனம்
வதங்கி விழிக்கிறது
வேதனையின் விம்மல்களோடு
இயலாமையின் அந்தரிப்போடும்
துவண்டு துடிக்கிறது
கண்ணீர் வடிக்கிறது
என்தமிழினம்

காலக்கரைவுக்கும்
கரையாத
கனத்த நினைவொடு
கரைதேடிக் காத்துக்கிடக்குது
புதியதோர் புலர்வுக்காய்




navaas06@yahoo.de