பூங்கா!
அகரம்.அமுதா
நரகத்
திடையே
துறக்கம்
போல
நகரத்
திடையே
பூங்காக்கள்
-அதில்
சிரிக்கும்
பூக்களைத்
திருடா
திருக்கத்
திறனுடன்
காக்கும்
கூர்க்காக்கள்!
(1)
சின்னப்
பூக்கள்
சிரிக்கும்
அழகில்
சிந்தும்
தேனின்
சுவைகண்டு
-மிகக்
கன்னம்
வைத்துக்
கவின்மலர்த்
தேனைக்
கவர்ந்து
போகும்
பொன்வண்டு!
(2)
திங்கள்
தவழும்
தென்றல்
உலவும்
சிவந்த
மாலைப்
பொழுதினிலே
-மணம்
தங்கும்
பூங்கா
தன்னைச்
சார்ந்து
தங்கிக்
களிப்பார்
தனிமையிலே!
(3)
விரித்த
பாய்போல்
விளங்கும்
பாதை
விளிம்பில்
இருக்கை
நிறைந்திருக்கும்
-அதில்
இருக்கும்
மனம்விடுத்(து)
இடையிடை
மறைவில்
இருக்கும்
வகையால்
உளமுவக்கும்!
(4)
அமைதி
தேடி
அலையும்
கூட்டம்
அமர்ந்து
பொழுதைக்
கழிக்கிறது
-அதில்
அமைதி
தேட
அமைத்த
பூங்கா
அமைதி
இழந்து
தவிக்கிறது!
(5)
மாலை
வந்தால்
மக்கள்
வந்து
மலிவார்
அமைதி
பறிபோகும்
-சிலர்
மாலை
வந்தால்
மனத்துயர்
விடுத்து
மறுபடி
கிளப்ப
இரவாகும்!
(6)
பின்னல்
தலையில்
பிஞ்சுப்
பூக்கள்
பிறங்கப்
பூங்கா
சிரிக்கிறது
-அட
புன்னகை
சிந்தும்
பூக்களை
மெல்லப்
பூவிரல்
நாடிப்
பறிக்கிறது!
(7)
சிரித்து
மகிழ்ந்து
சிலபொழு
திருந்து
செலவே
சிலபேர்
வருகின்றார்
-உளம்
வருத்தும்
நினைவின்
வளர்முளை
கிள்ளி
மறக்கச்
சிலபேர்
வருகின்றார்!
(8)
போகாப்
பொழுதைப்
போக்கித்
தொலைக்கப்
பூங்கா
சேரும்
சிலருண்டு
-உடல்
வாகாய்
விளங்க
வடிநற்
காற்று
வாங்க
வருவார்
சிலருண்டு!
(9)
முந்தியை
விரித்து
மூலையில்
படுத்து
மூழ்கிடும்
கனவில்
ஒருகூட்டம்
-அட
குந்திய
இடத்திற்
கொஞ்சிக்
குலவிக்
குடித்தனம்
நடத்தும்
ஒருகூட்டம்!
(10)
ஓவ்வொரு
மரமும்
ஓவ்வொரு
கல்லென
உணர்ந்து
மரச்சிலை
அவர்வடித்தால்
-அதில்
அவ்வவர்
துணையொடு
அண்டிக்
களித்து
அனைத்துக்
கலைகளும்
இவர்படிப்பார்!
(11)
கொணர்ந்த
பொருளைக்
குதப்பித்
தின்றுக்
குப்பை
யாக்கச்
சிலர்வருவார்
-மலர்
மணக்கும்
பூங்கா
மணத்தைக்
குளைக்க
வாயிற்
புகையொடு
சிலர்வருவார்!
(12)
நகைக்கும்
பூங்கா
நாடி
மகிழ்ந்து
நடையைக்
கட்டல்
பீடாகும்
-சுருள்
புகைக்கும்
அரங்கெனப்
புகைத்தாற்
ப+ங்கா
புகழ்தனை
இழந்து
காடாகும்!
(13)
விழுப்ப
மெல்லாம்
விளங்கும்
ஒழுக்கம்
வீரிட்
டழுவுது
பூங்காவில்
-இவ்
ஒழுக்கக்
குறைகள்
ஒழித்து
விழுப்பம்
உயர்ந்து
விளங்க
யார்காவல்?
(14)
சீருடை
அணிந்த
சிறார்கள்
போலச்
சிரிக்கும்
பூங்கா
வெடிக்கிறது
-பெரும்
பேருடை
தன்னின்
பெரும்புகழ்
குறைத்தல்
பிழையெனச்
சாடி
முடிக்கிறது!
(15)
agramamutha08@gmail.com
|