கவித  

இளைய அப்துல்லாஹ்

நேரம் சரி
நேரம்
இரவு 8.30
இரவு
வேலைக்கு போவதற்காக
பெரும்
வாசல் கதவை திறக்கிறேன்
ஒற்றைப்
பல்லி நிலையில் இருந்து
இச்
...இச்... சொல்லியது.

செக்கிங், ஆமிக்காரன், பேலிய கொடை,
களனிப்பாலம்
எல்லாம் என்
நினைவுக்குள்
வாழுதல்
துஆ
செய்கிறாள்.

பல்லி யெல்லாம் பார்த்தால்
வேலை
செய்ய முடியுமே! அது ஹராம்.
மாவீரர்
உரைக்கு முந்திய நாளென்றும்
மனைவி
நினைவு படுத்தினாள்

உயிர் எந்த இடத்தில் எப்பொழுது
எடுக்கப்படும்
என்று இஸ்ராஈலுக்குத்தானே
தெரியும்
.

பயம் சுமையாய்த்தான் இருக்கிறது
தைரியம்
எங்கிருந்து தான்
வரும்
துப்பாக்கிகள்
தீர்ப்புகளை எழுதும் போது

எல்லாம் ஹராம் எல்லாம் ஹராம்.
இவை
பற்றி எண்ணுதலுட்பட
வாழ்தல்
என்பதே ஒரு வேள்வி தானே
நான்
போகவும் எனது பத்திரிகை காரியாலயம்
முன்பு
குண்டு வெடிக்கவும் சரியாகத்தான்
நேரமிருந்தது


anasnawas@yahoo.com