தூக்கம்
புதுவைப்பிரபா
முதலில்
தூக்கத்தை
குச்சிமிட்டாய்போல
சப்பியது
வீட்டுப்பாட
தொல்லைகள்தான்
தொடர்ந்து
கல்லூரியில்
கால்
பதிப்பதற்கும்
படித்ததும்
வேலை
கிடைப்பதற்குமான
தயாரிப்புகளில்
புத்தக
பூச்சிகளுக்கு
உணவாகிப்போனது
உறக்கம்.
வாலிப
ஜாடியில்
வயது
முளைத்தபோது
காதல்
தொல்லைகள்
அதன்
பங்கிற்கு
கற்பனை
கைகளை
நீட்டி
தூக்க
பழங்களை
பரித்து
பசி
தீர்த்துக்கொண்டது
கல்யாணத்திற்குப்பின்
காமம்
ஸ்வீட்
காரம்
காப்பிபோல
இரவுகளைத்
திண்றது.
பின்
வாரிசு
வளர்ப்பு
லொட்டு
லொசுக்குவென
இன்னபிற
இத்தியாதிகளும்
நிம்மதியான
உறக்கத்தை
மென்று
முழுங்கி
தண்ணீர்
குடித்தது.
அறுவதின்
கடைசியில்
கயிற்றுக்கட்டிலில்
கால்
நீட்டி
படுத்திருந்தபோது
இம்மியளவு
கூட
கடமையையொட்டிய
கவலைகள்
இல்லாமலிருந்தது.
அப்பாடா!
அந்த
இரவிலேனும்
நிம்மதியாய்
உறங்கலாமென
முற்பட்டபோது
முட்டுக்கட்டை
போட்டது
இதுபோல்
இன்னுமொரு
இரவு
கிடைக்காமல்
போய்விடுமோ!
என்ற
சந்தேகம்.
puthuvaipraba@gmail.com
|