காலக் கணக்கனின்
கட்டுடைத்த நீள்வெளிகள்
மோனத் தவமிருக்கும்
முற்றுப் புள்ளிகள்
ககனப் பெருவெளியின்
கலையாத மௌனத்தில்
காணக் கடைத்திடும்
கடைசி அரூபம்
உன்னைத் தின்று
உலகத்தின் சாரமெலாம்
மெல்ல விழுங்கி
மேலெழும் பிம்பங்கள்
கோட்பாடுகள் உடைபடுகின்றன
கோலோச்சுகின்றன நடைமுறைகள்
விடையின்றித் தவிக்கும்
அழிந்துபட்ட விழுமியங்கள்
வீழும் முன்னுரைகள்
வீழும் எழும் ஓர் நாள்! – அன்றோ
அழிந்து படும் இந்த
ஆழ்நிலை மௌனங்கள்!!