நாந்தான்
சட்டிபுட்டியைத் தூக்கிக்கிட்டு
வீடுவிடா அலைஞ்சேன்
அந்தக்காலத்திலே!
தன் பிள்ளையாவது நல்லாயிருக்கட்டுமேனு
நாலுகாச சேத்துவச்சா
ரத்தமும்சதையுமா
இரத்தத்தை வேர்வையா சிந்தி
ரவும்பகலும் பாராது
கடனஉடன வாங்கி
எலி
வளை ஆனாலும் தனி
வளை
வேணும்னு
தனக்குனு ஒரு குடிசையைப் போட்டா
ஒருவேளைக்
கஞ்சி குடிச்சாலும்
ஊருக்கு மத்தியிலே வீடு போட்டத
நினச்சி மனசு முழுசும்
நிறஞ்சதா
திருப்தியடைவா
வேல செஞ்ச களைப்பிலும்
வீட்டப் பாத்துபாத்து நிம்மதியாஉறங்குவா
எல்லாமும் கிடச்ச சந்தோசம் அவளுக்கு
அந்த சந்தோசம்கூட நிலைக்கல ரொம்பநாளக்கி
குடில்
மேல இல்லாத பிரியம்
குடிமேல அதிகம் மகனுக்கு
வாய்த்த புருசந்தான் குடிச்சிகுடிச்சி
ஒன்னுமில்லாம போயிட்டான்
பெத்தவனும் சரியில்லாம போயிட்டானேனு
புலம்பி தவிப்பா பெத்தவ பாவி
குடிச்ச கடனுக்கு வீட்ட எழுதி வாங்க
கடன்காரன் நிப்பான் வாசலுல
மானம்,
ரோசத்துக்குக்
கட்டுப்பட்டவ
மறுபடியும் பிறப்பெடுப்பா
பெத்த கடனைத் தீர்க்க!
எத்தனைப் பிறப்பெடுத்தாலும்
தீராது இந்தக்கணக்கு!
மாளாது இவ பொழப்பும்…..
உயிரா நினைச்ச வீடு
உயிரையே எடுத்தது.
மறுபிறவி இல்லையென்று
யார்சொன்னது
-
தினம்
தினம்
செத்துப் பிழைப்பவர்களுக்குப்
பல பிறவிகளுண்டு