தமிழாசான் சபா அருள்சுப்பிரமணியம் அவர்களுக்கு
எம்கண்ணீர் அஞ்சலி !


விருத்தக்கவி வே.இராசலிங்கம்





மலரெனும் இதயம் போல்வான்
மழலையின் இனிமை போல்வான்
நலமெனும் உறவே கொண்டான்
நம்முயர் அருளே அம்மா !

கருணையும் அறமும் போற்றும்
கடவுளின் உருவம் கொண்டான்
அருள்சுப்பிர மணியன் என்றே
அகிலமும் உருகக் கண்டான்

தமிழினிற் செறிந்த பற்று
தாரகம் அறிவின் ஊற்று
அமிழ்தினும் இனிய செஞ்சொல்
ஆற்றிடும் உழைப்பின் ஏந்தல்

மானிடம் மனிதம் மாண்பு
மகத்துவம் சமுதா யத்தின்
நூனிடைப் பதிந்த செம்மல்
நூலிடும் மோலோன் காணீர்

நண்பனாய் உறவைப் போலே
நயந்தவன் மறைந்தான் அம்மா
விண்தொட அருளே சென்றான்
விரைகழல் சாந்தி சாந்தி !




       

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்