ஹைபுன் கவிதை

ந.க.துறைவன்

இடி பலத்தக் காற்று. மழையின்னும் ஆரம்பிக்கவில்லை. காற்றில் மரங்கள் பேயாட்டம் போட்டன. முருங்கைகள் பலமிழந்து முறிந்து விழுந்து விட்டன. அதில் உள்ள காய்களைக் கீரைகளைப் பறித்துக் கொள்ளஇ அருகில் வாழும் பெண்கள் ஓடிவந்து மடமடவென்று ஒடித்து எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் முகங்களில் ஓசியில் ஒருநாள் சமையலுக்கு காய்கள் கிடைத்ததென்று பெரும் மகிழ்ச்சி. மரத்தின் வீட்டுக்குச் சொந்தக்காரர் விரைந்து வந்து அவர்களை விரட்டியடித்தார். கிடைத்தவரை லாபமென்றுபெண்கள் ஒதுங்கிப் போய்விட்டார்கள். காற்று அடங்கி பலத்த மழைத் தொடங்கியது.

அருகில் யாருமில்லை.
அனாதைப் பிணமாய் கிடந்தது
முருங்கை மரம்.


  

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்