நூல் : 'உடைந்த கண்ணாடிக்குள் மறைந்திருக்கும் குருவி.'
நூல் ஆசிரியர் : ஓட்டமாவடி அரபாத்
நூல் ஆய்வு: கிண்ணியா எஸ்.பாயிஸா அலி

வரலாறு திரும்பிச் செல்வதில்லையென்பதைத் தன் நுட்பமான மொழிநடையினூடே நிரூபித்திருக்கிறார் அறபாத்.

'
டைப்புத்தான் படைப்பாளியின் முழுமையான அடையாளம்.' என்கிறார் யூங். ஈழத்திலக்கியப் பரப்பில் அறிமுகம் தேவையற்ற ஒரு படைப்பாளி சகோதரர் ஓட்டமாவடி அரபாத்.'ஆண்மரம்' 'நினைந்தழுதல்' தொகுப்புகள் நல்ல கதைசொல்லியாகவும் எரிநெருப்பிலிருந்து வேட்டைக்குப்பின் கவிதைத் தொகுப்புகள் தேர்ந்த சமூகக் கவிஞனாகவும் ஏலவே இவரை அடையாளப் படுத்தி விட்டது.இது தவிர இவரின் காத்திரமான விமர்சனங்களும்திறனாய்வுகளும் கூடப் பரவலாக அறியப்ப் பட்டவை.

இரண்டு சாகித்திய விருதுகளுக்குத் தேர்வான அறபாத்தின் புதிய சிறுகதைத்தொகுதியே 'உடைந்த கண்ணாடிக்குள் மறைந்திருக்கும் குருவி.' கோணங்கியின் 'உப்புக் கத்தியில் மறையும் சிறுத்தை'யை ஞாபகமூட்டும் வித்தியாச மகுடம்.மேலும் சிந்தனையைப் பல கோணங்களுக்கும் விரிக்கும் அட்டைப் படம். நேர்த்தியான வடிவமைப்பு என 'அடையாளம் ' பதிப்பகத்தின் கனதியான வெளியீடு. முஸ்லிம் சமூக முன்னோடி 'வாப்புச்சி மரைக்காயருக்கு' சமர்ப்பணம் செய்திருக்கிறார்.உள்ளே 'இன்பமும் நிம்மதியும் நிறைந்த வாழ்விற்காய் ஏதாவதொரு வகையில் போராடும் மனிதர்களின் அவலங்களை ஒரு தேர்ந்த கவிஞனுக்கு மட்டுமே சாத்தியமான கவிதன்மையோடு கூடிய களிநடையில்
32 சிறுகதைகளாய் படைத்தளித்திருக்கிறார்.

யுத்தத்தின் பேரழிவுமும் அரசியல் சமூக அவலங்களுமாய் ஒரு கணம் கனலாய் தீய்த்தாலும் இடையிடையே எள்ளலும் நையாண்டியும் மென்னுணர்வுகளின் பரவசமுமாய் கொஞ்சம் குளிர் பரப்பவும் தவறவில்லை.

அதீத எதிர்பார்ப்புடன் கூடிய உள்வீட்டுஅரசியல் சில காலம் தனித்துவம் பேணியதும் புனிதப் போராய் அடையாளம் கொண்டதுமான நிலை மாறி மெல்லமெல்ல உருக்குலைந்ததில் ஒரு பொதுமகனாய் தானடைந்த அவமானங்களும் ஏமாற்றமும் அறபாத்தை 'தேர்தல் காலக் குறிப்பு ஓணான் கழுதைகளின் விஜயம் ஆண்மரம் அரங்கம் போன்ற பிரதிகளை எழுத்த் தூண்டியிருக்கவேண்டும். நேர்மையும் ஓர்மமும் மிக்க ஒரு இலக்கியவாதிக்கே சாத்தியமான விடயமிது.

மூன்று தசாப்தங்களாய்தின்று தீர்த்த இனவன்முறையின் கொடூரஅவலங்கள் பற்றி முழுமையாய் பேசுகிறது வெண்தாமரை வன்மம்,ரயில்வேஸ்ரேசன் மறுபடியும் வெள்ளைக்கொடி மண்ணோடுபோய் பேயாட்சி விருட்சம் காத்திருப்பு நினைந்தழுதல் வேட்டை போர்நிறுத்தம் நிகழ்வுகள் கப்பம் போன்ற பிரதிகள். ஏனைய கதைகளில் கூட போரின் வலிகளைத் தொட்டுச்n;சல்லத்தவறவில்லை.

நிகழ்வுகள் கதையில் வரும் எப்போதும் இந்த மனம் பதுங்குவ ஓடித்தப்புவது குறித்தே சிந்தனை செய்துபழகி விட்டது. எனும் வரிகளும்

யுகங்ளுக்கப்பால் தரிசிக்கவிருந்த மரணம் இவ்வளவு விரைவாக அண்மித்து விட்டதே என்ற பரிதவிப்பு வாழ்வின் மீதான அPதபிடிப்பு அவனுள் சுழன்றடித்தது.இன்னும்சில நாழிகைகள் வாழக்கிடைத்தால் வாழ்வின் பல விடயங்களைச் சாதிக்கலாம். எனும் நப்பாசை துன்பங்களையும்மீறி எழுந்தது.வாழ்க்கை நூழிலையில் தொங்கும்போதுதான் வாழவேண்டுமென்ற ஆசையே வருகிறது.

போன்ற வரிகள் அகாலமரணத்திற்கு மிக அண்மைய கணங்களினாலான கையறுமனதின் பதைப்பைச் சொல்கிறது.

மூதூரவலத்தில் சிதைந்துபோன அபலைப்பெண்ணின் கண்ணீர்காவியம் முற்றுகை.

இதேபோல மண்ணோடுபோய் கதையில்வரும் 'நான்வரமாட்டன்....இந்த மண்ணத்தவிர வேறொன்றையும் தெரியாதடா மகனே! இதவுட்டுப்போறதவிட இதில மவுத்தாகிப்போறன்டா.....' எமது மண்ணை மட்டுமன்றி யுத்தபூமிகள் சகலதையுமே ஞாபகமூட்டிச்செல்லும் இது போன்ற உணர்வுபூர்வரிகள் ஏராளமுண்டு இத்தொகுப்பினுள்.

காலம் இடம் சாதி மதமென சகலதையும் நீக்கிவிட்டுப்பார்க்கையில் எஞ்சுகிற போர்காலப்பொதுமொழி இது.
ஒவ்வோரெழுத்தும் திடீரென ஊசிபோலே மேலெழுந்து உணர்வுகளைக் குத்திக் குதறுகிறது. கிழித்தவாறே உள்ளிறங்குகிறது. கண்களுக்குள் நீர்முட்டிக் கேவலில் நெஞ்சம் அதிருகிறது. அறபாத்தின் இப்போர்க்காலப் பதிவுகள் காலத்தின் சாட்சியாய்இவரலாற்றுப் பதிவாய் நிலைத்திருக்கக் கூடியவை.

அடுத்துவரும் மூத்தம்மா பாசமும் ஓர்மமும் செறிந்த கிராமத்துப் பெண்ணாளுமைக்கான தனித்த அடையாளம். மேலும் இதில் வருகிற 'மஞ்சோனா மரம்' செங்கைஆழியானின் 'புளியமரத்துமுனி' களில் வரும் புளியமரம் சார் நிகழ்வுகளைக் கொஞ்சமாய் நினைவோரத்தில் நிறுத்திப்போகிறது.

2006இல் வீரகேசரியில் வெளியானபோது நவீனபிரதியாய் மொழிநடையில் முக்கியத்துவப் படுத்தப்பட்டதோடு பல எதிர்வினைகளையும் சந்தித்த கதைதான் துறவிகளின் அந்தப்புரம். இதில் வரும் முதன்மைப்பாத்திரமான 'லைலா'வினை மறுவார்ப்புச் செய்து எதிர்க்கதைகூட அப்பத்திரிகையில் வெளியானது.

இந்திய சஞ்சிகையொன்றில் வெளியான  ஜெயகாந்தனின் சிறுகதையொன்றில் வரும்ஒரு பெண்பாத்திரம் கூட சர்ச்சைக்குரியதாய் பெரிதும் பேசப்பட்டு பின்னர் அதன் எதிர்வினையாய் மறுவடிவத்தில் மேலுமொரு படைப்பு அந்நாளில் வெளியானது இவ்விடத்தில் நினைவுக்கு வருகிறது.

உண்மையி;ல் காத்திரமான பிரதியொன்றினால் மட்டுமே அது சார்ந்து மேலும் பல பிரதிகளை உருவாக்க முடியும். ஆனாலும் துறவிகளின் அந்தப்புரத்தின் இறுதிக் கணங்களுக்குள் சடாரென மாறிப்போகும் 'லைலா' நிஜத்தில் நாம் பார்க்கிற பழகிக் கொண்டிருக்கின்ற அயல்வீட்டு லைலாக்களுக்கு முற்றிலும் நேர்மாறானவள்.

இதேபோல் 'மோட்சம்' 'ஜின்' 'தனிமை' 'சோமாவின்தனிமை' போன்றவைகள் அன்றாடம் நாம் அருகிலிருந்தும், காணத்தவறிய கொடுமைகளின் வௌ;வேறு துயர்மிகு வடிவங்கள். சமூகத்தின் சாதாரணக் கண்கள் காணமறந்த அல்லது மறுத்த புனிதங்களின் இருட்புதர்களுக்குள்ளே இவர் பீய்ச்சியடித்த ஒளியில் நெளியும் அருவருப்பும் அசிங்கங்களும,; அச்சத்தையும் அவமானங்களையுமே விழிகளில் நிறைக்கின்றன.

பார்வைக்குத்தப்பிய களைகளையும் பசுமை பூசிய மயிர்கொட்டிகளையும் சிவப்புப்பேனாவினால் வட்டம்போட்டு விட்டு அவைகளைக் களைய வேண்டிய பெரும்பணியை எம்மிடமல்லவா ஒப்படைத்திருக்கிறார.; தவிப்பும் படபடப்பும் மாத்திரமே எமக்குள் எஞ்சுகிறது. உணர்வுக்குள் உறைந்து போகிறது.

ஒரு விமர்சகனாய் நின்று இவர் உரைத்திருக்கும் உடனடி மீள்பரிசீலனைக்கான பலவிடயங்களும் உரியவர்களுக்கும் உறைக்க வேண்டுமே.

அடுத்து பால்ய பருவத்தின் பசுமையான நினைவுகளை மீட்டுத்தரும் மூத்தப்பாவின் மாட்டுவண்டி பலமுறை படிக்கத்தூண்டிய மிகஅருமையான கிராமியமணங்கமழும் சிறுகதை.

மாட்டுவண்டி தொடர்பான வர்ணனை,காவல்பரணுல.... பாடல், புலிவேட்டை எனப் படிப்போரைத் தன் வரிகளை விட்டும் விலகவிடாது ஈர்க்கிறது. 'வாகனேரிக்குளம்,அணைக்கட்டு,மில்க்போர்ட்சந்தி;, உச்சவடக்கல்,அவ்லியாகபுறடி'எனப் பயணிக்கும் அறபாத்தின் ஈரப்பதிவுகள் யாவுமே நமக்கும் பலகாலம் பார்த்துப் பழகியவைகளாய் பரிச்சயமாகிப்போகிறது.

மனிதஇரத்தம் குடித்துப்பார்க்காத,அன்பை மாத்திரமே பொழிகிற மூத்தப்பாவின் துப்பாக்கிமீது நமக்கும் கருணை வழிகிறது.நிகழ்வில் துப்பாக்கி தொடர்பான புனிதமான பார்வை. இளந்தலைமுறைக்கு இது விசித்திரமான பார்வையுங்கூட. இனிய வசந்தகாலக்கனவுகளும் ஏக்கங்களுமாய் பரவசங்களுக்குள் எமை அழைத்துப்போகிறது. முகங்கள் பிரமை ஆகியவைகள்.

அடுத்து, மனைவி சிறுகதை.அழகும் அருமையுமான வரிகளால் வார்க்கப்பட்டிருக்கும் தளர்வேயில்லாத 'மனைவி'கதைக்குள் இடைச்செருகலாய் திணிக்கப் பட்டிருக்கும் ஆத்மாவின் கவிதைவரிகள் தேவையற்ற முட்டுக்கம்பாய் துருத்தி நிற்கிறது. நட்பின் அல்லது நன்றியுணர்வின் வெளிப்பாடோ என்னவோ.

பின்னவீனத்துவ சாயலில் ஒரு ரகசியக்கனவின் மொழிபெயர்ப்பாயும், மொழிநடையில் முதன்மைப் படுத்தியும் விசேடித்தும் வைக்கப்படவேண்டிய ஒன்றாயும் இறுதியாய் வருகிறது 'ஏவாளின் தோட்டத்தில் கனிகள் இன்னும் மிச்சமிருக்கின்றன'.

இப்போதெல்லாம் தீவிர இலக்கியத்திற்கான சிற்றிதழ்களின் புனைவுகளுக்குள் அடிக்கடி பாம்பு வந்து போகிறது. பாம்பு எதற்கான குறியீடென்று புரிந்து கொள்ள முடியவில்லை. இப்புனைகளின் பாதிப்பே இப்பிரதிக்கான உந்துதலாக அமைந்திருக்கலாம். கவித்துவமும் மாயத்தன்மையும் வசீகரமும் செறிந்தவரிகள்.ஒருபரிசோதனைமுயற்சியாகக்கொள்வோமாயின் அறபாத்தின் பெரிய வெற்றி இது. ஆனலும் இதன்மூலம் வாசகனுக்கு எதைக் கொடுத்திருக்கிறார் என்பது புரியவில்லை. இத்தொகுதிக்குப் பின்னரான எனது வாசிப்பிற்குட்பட்ட வாப்பாவின் சைக்கிள்(அம்பலம்) போன்ற பிரதிகளில் தொடர்ந்தும் அறபாத் தன்னை ஒரு சமூகவிளம்பியாய் நிறுத்தியிருப்பது ஆறுதல் தரும் விடயம்.

இத்தொகுதிதொடர்பில்அடுத்துகுறிப்பிடவேண்டியது,கதைப்பின்னலின் அடிப்படையாக இவரமைத்திருக்கும் முரண்தன்மை. வெளிப்படையான உறவுச்சிக்கலாக மட்டுமன்றி சரிபிழைக்கான அகப்போராட்டத்தின் நுண்ணிய நிலைகளாயும் அமைந்திருக்கிறது. சுய அனுபவங்களாய் விரிந்தவாறே சிக்கலாய் வளர்ந்து ஆர்வத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்துகிறது.

ஒவ்வொரு கதைக்குமான தலைப்பிடலும், தொடக்கவரிகளும், கதைத்தொடக்கமும், கூற்றுமுறையுங்கூட கதைகளுக்கு மேலும் மெருகூட்டுகிறது.

அடுத்து ,விசேடமாகச் சொல்லவேண்டியது அறபாத்தின் மொழிநடை.
90 களில் அவரது ஆரம்பகாலச்சிறுகதைகளில் இருந்து அண்மைய மாயக்கண்ணாடிவரை (உயிர்நிழல்) படிமுறையான வளர்ச்சியும் கூர்மையும் பெற்று வந்திருக்கிறது அவரது மொழிநடை.

அனேக எழுத்தாளர்கள் தமக்கெனத்தனிப்பாணியை உருவகத்தபடி குறித்த காலம் கொடிகட்டிப் பறப்பர்.காலத்தினூடே மாறமறுக்கும் எழுத்துகள் குறித்த காலப்பதிவாக மட்டுமே எஞ்சிவிட சிறிது காலத்திற்குள்ளே பின்தள்ளப்பட்டுவிடுவர். மிகச்சிலர் மாத்திரமே பரவலானதேடலும் பகிர்வும் தொடர் வாசிப்புமாய் மரபோடு நவீன கருத்துக்களையும் உள்வாங்கித் தம் எழுத்திலும் மாற்றங்கள் கொண்டு வருவர். இவ்வாறானவரிடமே காலம் தோற்றுப்போகிறது.

இந்த மிகச்சிலரில்தான் அறபாத்தும் அடங்குகிறார்.ஒவ்வொரு படைப்பிலும் மேம்பட்டுவரும் அவது மொழிநடையும் விடயத்தேர்வும் அவரைத் தனித்து அடையாளப்படுத்துகிறது. மௌளச்செதுக்கப்பட்டவாறே தன் செழுமையான வடிவத்தை நோக்கிப் பயணிக்குமொரு கலைச்சிற்பம்போல மரபோடிணைந்த நவீனமும் நேர்த்தியுமாய் செறிவடைந்து வருகின்றன அவரது வரிகள்.வரலாறு திரும்பிச்செல்வதில்லையென்பதைத் தன் நுட்பான மொழிநடையினூடே நிரூபித்து வருகிறார் அறபாத்.எமது விமரிசகர் திறனாய்வாளர்;களால் ஆழ்ந்து கவனிக்கப்படவேண்டிய விடயமிது. வெளிச்சமிடப்படவேண்டியவையுங்கூட.

ஆக, 'உடைந்த கண்ணாடிக்குள் மறைந்திருக்கும் குருவியின்' நிஜவிம்பத்தைத் தம் விழிகளுக்குள் விழுத்திக் கொண்ட நிஜ சமூகநலமிகளின் இருஇமைகளும் இனி சந்தித்துக் கொள்ள வாய்ப்பேயில்லை.




sfmali@kinniyans.net