நூல் : கூடுகள் சிதைந்தபோது
நூல் ஆசிரியர் :அகில்
நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி


நூலின் அட்டைப்படமும் அச்சும் மிக நேர்த்தியாக உள்ளது .வம்சி பதிப்பகத்திற்கு முதலில் பாராட்டுக்கள் .நூல் ஆசிரியர் திரு அகில் www.tamilauthors.com என்ற இணையத்தின் மூலம் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட எழுத்தாளர்கள, கவிஞர்கள் பற்றிய குறிப்புகளை ஆவணப்படுத்தி உலகம் முழுவதும் இணைய வாசகர்களுக்கு அறிமுகம் செய்தவர்

இந்நூலை முதுபெரும் ஈழத்து எழுத்தாளர், பேராசிரியர், கட்டுரையாளர் இவிமர்சகர் பன்முக ஆற்றலாளர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார். அவர் இறக்கும் தருவாயில் இறுதியாகத் தந்த முன்னுரை இடம்பெற்ற நூல் என்பதால் கூடுதல் சிறப்புப் பெறுகின்றது . அவருடைய முன்னுரையில் உள்ள வைர வரிகள் அகிலின் கூடுகள் சிதைந்தபோது எனும் சிறுகதையில் இந்த மொன்ராஜ்
(montage) உத்தியின் இலக்கிய வடிவைக் காண்கிறேன்.

கலாநிதி க .குணராசா அவர்களின் அணிந்துரை அற்புதம். கலாநிதிநா .சுப்பிரமணியன் அணிந்துரை அழகுரை.

சாதாரண நகைச்சுவை துணுக்கை விரிவாக்கி சிறுகதை என்றும், ஆபாசத்தை விலாவாரியாக விளக்கி சிறுகதை என்றும் எழுதி வெளி வரும் சில சிறுகதைகளை படித்த விபத்தின் காரணமாக, எனக்கு சிறுகதை மீதே ஈடுபாடு இல்லாமல் இருந்தது .இந்த நூலை படித்து முடித்தவுடன் இது போன்ற சிறுகதைகளை நாமும் எழுத வேண்டும் .என்ற உந்துதலைத் தந்து வெற்றிப் பெற்றது நூல் ஆசிரியரின் சிறுகதை உத்தி பாராட்டுக்குரியத- .சிறுகதை எப்படி? எழுத வேண்டும் என்பதற்கு இலக்கணம் குறும் விதமாக கதைகள் உள்ளது .

14 கதைகளும் புலம் பெயர்ந்த வலியை, வேதனையை, உணர்வை வாழ்வியல் நெறியை, மனிதாபிமானத்தை இவிலங்காபிமானத்தை உணர்த்துகின்றது. இந்நூலில் உள்ள பல கதைகள் உலக அளவிலான போட்டியில் பரிசுப் பெற்ற சிறுகதைகள் .முத்திரைப் பதிக்கும் முத்திரைக் கதைகள்.

ஈழத்தமிழர்கள் வலி மிகுந்த புலம் பெயர்ந்த வாழ்விலும் இதமிழுக்காக தமிழ் இலக்கியத்திற்காக ஆற்றிவரும் பணிகள் அளப்பரியது .உலக அளவில் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக நம் தமிழுக்குத்தான் அதிக இணையம் உள்ளது . தமிழ் இணையங்களில் பெரும்பாலான இணையம் ஈழத்தமிழர்களால் தான் நிர்வகிக்கப் படுகின்றது . நூல் ஆசிரியர் திரு அகில் இனிய ஆசிரியராக இருந்துகொண்டே படைப்பாளியாகவும் வெற்றிப் பெற்று இருப்பது வியப்பைத் தருகின்றது .

வருமானத்தில் ஒரு பகுதியும் இபொன்னான நேரத்தையும் தமிழ் இலக்கியத்திற்காக செலவு செய்து தமிழை ஈழத்தமிழர்கள் வளர்த்து வருகின்றனர் . புலம் பெயர்ந்தோரின் வலியை, வேதனையை, உள்ளத்து உணர்வை இதாய் மகன் பாசப் போராட்டத்தை கதைகளில் படம் பிடித்துக்காட்டி வெற்றி பெறுகின்றார் . நூல் ஆசிரியர் திரு அகில் .திரு அகில்அவர்களின் வாழ்க்கைத் துணையாக மட்டுமன்றி இலக்கியத் துணையாகவும் விளங்கி, உதவி வரும் அவரது மனைவிக்கும் பாராட்டுக்கள் .அவரது ஒத்துழைப்பு இல்லை என்றால் இந்த நூல் வந்து இருக்க வாய்ப்பு இல்லை. இந்நூலில் உள்ள கதைகளும் முழுவதும் கற்பனையே என்று சொல்லி விட முடியாது . திரு அகில் அவர்களின் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வுகள் அவரது உறவினர்கள் நண்பர்கள் வாழ்வில் நடந்து நிகழ்வுகளை அவதானித்து கதை வடித்துள்ளார்

வலி என்ற முதல் கதைய்லேயே முத்திரைப் பதிக்கின்றார். நூல் ஆசிரியர் திரு அகில்.புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் இன்னலை படம் பிடித்துக் காட்டுகின்றார் .பன்றிகளோடு பன்றியாகப் பயணித்த தமிழரின் அனுபவத்தை சுட்டி,இப்படி நடக்கும் என்று நினைத்து இருந்தால் செத்தாலும் பரவாயில்லை என்று சிலோனில் இருந்து இருக்கலாம் .என்று ஒரு கணம் அவன் நினைத்துப் பார்க்கக் கூடத் தவறவில்லை .என்று எழுதுகின்றார் .

கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனால் அங்கு ஒரு கொடுமை ஆடிக்கொண்டு வந்ததாம். என்ற பொன் மொழியை நினைவு படுத்துவதுப் போல. இலங்கையில் இனவெறி, வன்முறை தலை விரித்து ஆடுகின்றதே என்று உயிருக்குப் பயந்து புலம் பெயர்ந்தால், அங்கும் துன்பம் வருவதுக் கண்ட, புலம்பும் தமிழரின் உள்ளத்து உணர்வை மிக நுட்பமாக கதையில் பதிவு செய்துள்ளார் . அசைவ விரும்பியான மயூரன் சைவமாக மாறியதன் மூலம் இந்தக் கதைப் படிக்கும் வாசகர்கள் அசைவ விரும்பியாக இருந்தால் சைவத்திற்கு மாறி விடுவார்கள். இன்று மருத்துவர்களும் உடல் நலத்திற்கு சைவ உணவையே பரிந்துரை செய்கின்றனர் .கதை நெகிழ்ச்சியாக உள்ளது. ஒவ்வொரு கதையும் படிக்கும் வாசகனுக்கு ஒரு செய்தி சொல்கின்றது .அதுதான் இந்த நூலின் தனிச் சிறப்பு.

வாடியப் பயிரைக் கண்டப் போதெல்லாம் வாடினேன் என்று சொன்ன வள்ளலாரைப் போல விலங்குகளின் மீது பாசத்தைப் பொழிந்து விலங்கு அபிமானத்தை வரவைத்து வெற்றிப் பெறுகின்றார் .நூல் ஆசிரியர் திரு அகில் .தாய் மகன் பாசப் போராட்டத்த, முதியோர் இல்லத்தில் வாடும் முதியோரின் வருத்தத்தை காட்சிப் படுத்தி உள்ளார் .

இப்படி அனைத்து கதைகள் பற்றியும் எழுதிக் கொண்டே போகலாம் .முழுவதும் எழுதி விட்டால் நூல் படிக்க சுவை குன்றும் .என்பதால் இத்துடன் விடுகின்றேன், மற்றவை வெள்ளித் திரையில் காண்க ! என்பதைப் போல மீதியை நூலைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள். ஈழத்தமிழர் உலகில் இல்லாத நாடு இல்லை ஈழத்தில் நடந்த இனவெறியின் காரணமாக உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து தமிழ் வளர்த்து வருகின்றனர் .கூடுகள் சிதைந்தபோது என்ற நூல் படித்து முடித்தவுடன் என் நினைவிற்கு ஈழத்தமிழர்கள் தேன்கூடு போல வாழ்ந்து வந்தனர் .ஆனால் அந்தக் கூடு சிதைந்து விட்டது .தேன்கூட்டில் கல் எரிந்து சிதைப்பதுப் போல சிதைத்து விட்டனர். ஈழத் தமிழர்களுக்காக,  ஈழத்தில் தனி நாடு அமைவதே ஒன்றே தீர்வாகும் .அப்போதுதான் புலம் பெயர்ந்த தமிழர்கள் பிறந்த, மண்ணான ஈழம் வந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும் .படைப்பாளிகள் அனைவரும் இதற்காக உரக்க குரல் கொடுங்கள். என்ற சிந்தனையை என்னுள் விதைத்தது இந்த நூல் .இந்நூல படிக்கும் ஒவ்வொரு வாசகர் மனதிலும் தனி ஈழம் வேண்டும் என்ற சிந்தனையை விதைக்கின்றது .நூல் ஆசிரியருக்குப் பாராட்டுக்கள் .இந்த நூலிற்காக பல பரிசுகளும் விருதுகளும் உறுதியாகக் கிடைக்கும் .

 

வெளியீடு வம்சி திருவண்ணாமலை விலை ரூபாய் 120