நூல் :
நெஞ்சத்தூண்கள்
!
நூல்
ஆசிரியர்: நெருப்பலைப்
பாவலர் இராம..இளங்கோவன்
நூல் ஆய்வு:
கவிஞர்
இரா .இரவி
சுலோச்சனா
பதிப்பகம்
. 26,2ND D GROSS,SIR.M.V.NAGAR,RMAIAH COCONUT GARDEN,RAMAMURTHY
NAGAR,BANGALORE.560016. CELL 09845526064.
விலை
ரூபாய்
110.
நூலின்
பின்
அட்டையில்
தேனிரா
.உதய
குமார்
அவர்கள்
எழுதியது
முற்றிலும்
உண்மை
."தமிழன்னைக்குக்
கிடைத்த
தலையாய
சேவகர்
"
நூல் ஆசிரியர்
நெருப்பலைப்
பாவலர் இராம..இளங்கோவன்
.
தமிழ்
பற்றி
தமிழர்
பற்றி
பெண்ணுரிமை
பற்றி
மரபுக்
கவிதைகளில்
கவிதை
வடித்து
,தமிழ்
விருந்து
வைத்துள்ளார்
.இனிய
நண்பர் வித்தகக்
கவிஞர்
பா
.விஜய்
அணிந்துரையில்
"ஒரு
மரபுக்
கவிதைப்
புத்தகத்திற்கு
,புதுக்
கவிதையால்
அணிந்துரை
ஆசிரியருக்கு
மாணவன்
பொன்னாடை
போர்த்துவது
மாதிரி
!"என்று
மனம்
திறந்து
பாராட்டி
உள்ளார்
.
பலரின்
வாழ்த்துரையும்
,அணிந்துரையும்
நூலிற்கு
பெருமை
சேர்க்கின்றது
.இந்த
நூலில்
நிறைய
தமிழ்
பற்றிய
கவிதைகள்
உள்ளது
.நூல்
ஆசிரியர்
இராம
.இளங்கோவன்
அவரது
அன்பு மகன்
நவீன்
இளங்கோ
26
வயதில்
காலம்
சென்றதை
நினைத்து
வருந்தி
சோகக் கவிதைகள்
படிக்கும்
போது
வாசகர்களின்
மனதையும்
சோகத்தில்
ஆழ்த்தி
உள்ளார்
.மகன்
மீது
அவர்
வைத்து
இருந்த
பாசத்தை
நேசத்தை
உணர
முடிகின்றது
.இந்த
நூலை
அவரது அன்பு மகன்
நவீன்
இளங்கோவிற்கு
படையல்
வைத்துள்ளார்
.
கவியரங்களில்
பாடிய
கவிதைகளைத்
தொகுத்து
நூலாக
வழங்கி உள்ளார்
.நெஞ்சத்தூண்கள்
தமிழ்த்தூண்களாக உள்ளது
.
மரபுத்தூண்களாக
உள்ளது
.கவித்தூண்களாக
உள்ளது
.பாராட்டுக்கள்
.கர்னாடக
மாநிலத்தில்
வாழ்ந்தபோதும்
தாய்த்
தமிழை
மறக்காமல்
கவிதைகள்
வடித்து
தமிழ்
அன்னைக்கு
மரபுக்
கவிதைகளால்
மணி
மகுடம்
சூட்டி
உள்ளார்
.தமிழ்ச்
சொற்களின்
களஞ்சியமாக
நூல்
உள்ளது
.தமிழனாகப்
பிறந்ததற்காக
உலகில்
வாழும்
ஒவ்வொரு
தமிழனும்
மார்
தட்டிக்
கொள்ளும்
விதமாக
நூல்
உள்ளது
.
தமிழ்
வணக்கம்
!
தாயே
!
தமிழே
!
உயிரே
!
உன்றன்
சேயாம்
என்றான்
நாவில்
நின்று
வாயும்
மணக்க
தமிழ்ப்பால்
மொண்டு
தாயும்
நீயும்
தருவாய்
;மண்ணில்
மாய்ந்தும்
நிலைத்து
வாழ்வேன்
தாய்மை
மாறா
தமிழுனை
வணங்கியே
!
எழுச்சி
,மலர்ச்சி
,உணர்ச்சி,
புத்துணர்ச்சி
தரும்
கவிதைகளாக
உள்ளது
.
எழுகவே
!
எழுக
,எழுக,எழுகவே
!-தமிழர்
எழுந்து
விட்டால்
இமயமும்
தாழ்வே
!
உழுக
, உழுக, உழுகவே
!-தமிழா
உள்ளம்
முழுதும்
தமிழால் உழுகவே
!
தமிழில்
பிற
மொழிச்
சொற்கள்
கலந்து
பேசி
தமிழ்க்
கொலை
நடத்துவோரைக்
கண்டிக்கும்
விதமாக
கவிதைகள்
உள்ளது
.
தமிழா
துணிவாய்
!
தமிழா
நீ
என்
குருதியடா
- ஒரு
தாய்
வயிற்றுப்
பிள்ளையடா
!
அமிழ்து
தமிழே
நம்மொழியடா
- அயல்
மொழியைக்
கல்ப்பதேனடா
?
உரிமைக்கு
உரக்க
குரல்
கொடுத்து
உள்ளார்
.உனக்குஉள்ள
எல்லா உரிமையும்
எனக்கும்
உண்டு
.உயர்ந்தவன்
,
தாழ்ந்தவன்
எவனும்
இல்லை
.இந்த
நாட்டில்
எல்லோரும்
சரி
நிகர் சமமாக
நடத்தப்
பட
வேண்டும்
என்பதை
நன்கு
உணர்த்தி
உள்ளார்
.
உரிமை
நாள்
!
வந்திட
வேண்டு
மென்றால்
நாட்டில்
வந்திட
வேண்டும்
தனித்தனி
உரிமை
!
உரிமை
என்பது
தான
மல்ல
;
உரிமை
தம்மை
யாசித்து
வாங்க
!
நானும்
உன்
போல்
சரசம
மாக
நாளும் உரிமை
பெற்றிட
வேண்டும்
!
உலகப்
பொதுமறை
வடித்த
திருவள்ளுவர்
வழியில்
நல்ல
நட்பின்
சிறப்பையும்
தீய
நட்பின்
தீமையையும் கவிதைகளில்
விதைத்து
உள்ளார்
.
சான்றோர்
நட்பு
!
நட்பிலா
வாழ்வும்
துன்பம்
தானடா
!-
நல்ல
நட்பை
நெஞ்சில்
ஊன்றி
வையடா
!
நட்பை
உணரா
உணர்வும்
தீமை
-தானடா
!
நட்பை
உணர்த்த
நடந்து
காட்டடா !
பொல்லாத்
தீய
நட்பு
கொண்டால்
-மெல்ல
நல்ல
பெயரும்
நழுவி
ஓடும்
!
நல்ல சான்றோர்
நட்பு கொண்டால்
-
இந்த
நாடே
உன்னைப்
போற்றிப்
புகழும்
!
பெண்ணுரிமைக்காக
உரத்த
சிந்தனையாக
சிந்தித்து
,ஆணாதிக்க
சிந்தனையை
அகற்றிட
கவிதை
வடித்துள்ளார்
.
பெண்களே
வாரீர்
!
நீரின்றி
இவ்வுலகம்
அமைவ
தில்லை
நிலமின்றி
எவ்வுயிரும்
வாழ்வ
தில்லை
;
வேரின்றி
எம்மரமும்
நிற்ப
தில்லை
;
வேற்றுமையில்
எவ்வுறவும்
நிலைப் பதில்லை
;
பாரினிலே
பெண்ணின்றி
வாழ்வு
மில்லை
;
நாரிணைந்த
பூக்களாலே
நார்ம
ணக்கும்
;
நன்குணர்ந்து
ஆடவர்காள்
பெண்மை
காப்பீர்
!
அவரது அன்பு மகன்
நவீன்
இளங்கோ
பற்றிய
கவிதை
உருக்கம்
,நெகிழ்ச்சி
,சோகம்
அனைத்தும்
உள்ளது
.
காவல்
தெய்வம்
நீ
எங்கே
!
தேடாத
இடமில்லை
;தேடித்
தேடிப்
போகாத
ஊருமில்லை
;போயிப் போயிப்
பார்க்காத
நாடுமில்லை
;பார்த்துப்
பார்த்துக்
கேட்காத
ஆளுமில்லை
;கேட்டுக் கேட்டு
நோகாத
என்நெஞ்சு
நோகுதய்யா
!
சேராத
இடம்சென்றா
சேர்ந்து
விட்டாய்
?
போகாத
ஊருக்கா
பயணப்
பட்டாய்
?
பாவியென்னைப் புலம்பவிட்டு
நீ
ஏன்
சென்றாய்
?
கவியசு
கண்ணதாசன்
போல
எந்த
நாளும்
எனக்கு
இறப்பு
இல்லை
என்று
படைப்பாளி
மார்
தட்டி
உரைப்பது
போல
உரைத்து
உள்ளார்
.பாராட்டுக்கள்
.
என்
கவிதை
!
பிறப்பிற்கும்
இறப்பிற்கும்
-
இடையே
இருப்பதுவோ
வாழ்க்கையடா
!
இரண்டினையும்
வெல்லுவது
-
என்றும்
இறவாத
கவிதையடா
!
வேண்டும்
வேண்டும்
என்று
வாழ்வியல்
கூறும்
கருத்துக்களை
கவிதையில்
வடித்துள்ளார்
.பாராட்டுக்கள்
.
வாழ்தல்
வேண்டும்
!
முளைத்தாலும்
ஆல்போல்
முளைத்தல் வேண்டும்
!
முனைந்தாலும்
சான்றோனாய்
முனைதல் வேண்டும்
!
இளைத்தாலும்
புலிபோல
இருத்தல் வேண்டும்
!
இருந்தாலும்
இறந்தாலும்
உயிர்த்தல் வேண்டும்
!
வளைந்தாலும்
வென்றிடவே
வளைதல் வேண்டும்
!
வருந்தினாலும்
பிறருக்காய்
வருந்தல் வேண்டும்
!
கிளைத்தாலும்
கிளைகள்போல்
கிளைத்தல்
வேண்டும்
!
கிடந்தாலும்
கணிமம்போல்
கிடத்தல் வேண்டும்
!
திரை
உலகைச் சாடி
கவிதைகள்
உள்ளது
.திரை
உலகில்
சிலர்
நூல்
ஆசிரியரை
ஏமாற்றி
உள்ளனர்
.அந்த
வருத்தையும்
பதிவு
செய்துள்ளார்
.திரைப்படப்
பாடல்களில்
ஆங்கிலச்
சொற்கள்
கலக்கும்
அவலத்தையும்
கண்டித்து
உள்ளார்
.தொடர்ந்து
எழுதுங்கள்
.வாழ்த்துக்கள்
.
eraeravik@gmail.com
|