நூல் : விழிகள் சுமந்த கனவுகள் !
நூல்
ஆசிரியர் :
 ஓவியக் கவிஞர் .உமாபதி !
நூல் அறிமுகம்:
கவிஞர் இரா .இரவி

னிய நந்தவனம் பதிப்பகத்தின் பெருமை மிகு வெளியீடாக வந்துள்ளது .இனிய நந்தவனம்  இதழ் ஆசிரியர் இனிய நண்பர் சந்திர சேகர் மதுரையில் சந்தித்து இந்த நூலை வழங்கினார் .நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் .உமாபதி அவர்கள் சகல கலா வல்லவர் .ஓவியர், பாடகர் ,கவிஞர் என பன்முக ஆற்றல் மிக்கவர் .மதுரை மேலூர் நாகப்பன் சிவல்பட்டி கிராமத்தில் இருந்து புலம் பெயர்ந்து சிங்கப்பூர் சென்று வாழ்பவர் .

இனிய நண்பர் சந்திரசேகர் அவர்களின் பதிப்புரை ,இலக்கியப் போராளி பாரதி வசந்தன் ,சிங்கப்பூர் புதுமைத் தேனீ  மா .அன்பழகன் ,

திரு .மா .காளிதாஸ் ஆகியோரின் அணிந்துரைகள் நூலிற்கான வரவேற்பு தோரணங்கள்இலக்கியம் பல் வகை உண்டு .அதில் கவிதை சிறந்த வகை .கவிதையிலும்  காதல் கவிதை மிகச் சிறந்த வகை .காரணம் காதல் கவிதை படிக்கும் வாசகர் அனைவரின் மனதில் கற்கண்டாக இனிக்கும் .அன்றும் இன்றும் இன்றும் காதல் என்பது இனிமை இளமை புதுமை .

காதல் கவிதையிலும் தெரு விளக்கு எரியாத பிரச்சனையையும் சேர்த்து எழுதி உள்ள புதுக்கவிதை நன்று .

எத்தனையோ
வருடங்கள்
- எரியாத 
எங்கள்
 
தெருவிளக்கு
..
இன்றிலிருந்து
எரிகின்றது ..
நீ
 
நடத்து
போனது 
வீதி
விளக்கல்லவா ...

கவிதைக்கு பொய் அழகு என்பார்கள் .காதல் கவிதைக்கு பொய் அழகோ அழகு .என்பதை உணர்த்திடும் கவிதை .

மண்ணிலிருந்து 
விண்ணைப்
பார்த்தேன் -
நட்சத்திரங்கள்
 
தெரிந்தன
.

விண்ணிலிருந்து 
மண்ணைப்
பார்த்தேன் -
உன்
பாதச் சுவடுகள் 
நட்சத்திரங்களாகவே
 
தெரிகின்றன
!

தோழி பின் காதலியாவதும் உண்டு .தோழியாக மட்டும் தொடர்வதும் உண்டு .தோழி காதலி  வேறுபாடு சொல்லும் கவிதை .

மௌனமாக  
இருக்கிறவள்
 
காதலியாகிறாள்
.

மௌனத்தையே     
வார்தையாய்த்
 
தருகிறவள்
 
தோழியாகிறாள்
!

கவிதைகளுக்கு மிகப் பொருத்தமாக ஓவியம் வரைந்துள்ளார்.காரணம கவிஞர் மட்டுமல்ல ஓவியர் என்பதால் அனைத்துக் கவிதைக்கும் அவரே ஓவியமும் வரைந்துள்ளார்.இந்த நூலில் கவிதை சிறப்பா ? ஓவியம் சிறப்பா ? பட்டிமன்றம் நடத்தலாம். நடத்தினால் தீர்ப்பு எப்படி வந்தாலும் வெற்றி நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் .உமாபதி அவர்களுக்குதான் .

கவலையில் இருக்கும் தலைவனுக்கு தலைவியின் ஆறுதல் சிரிப்பு இதம் தரும் என்பது உண்மை .அதனை உணர்ந்து வடித்த கவிதை .

நான் அழுது கொண்டிருந்த 
நேரத்தில்
- உன் 
சிரிப்பைக்
 
கொடுத்து
 
சந்தோசப்
படுத்தியதில் 
உணர்ந்தேன்
 
நமக்கான
 நட்பை !

தலைவியின் அன்பே தலைவனை வழிநடத்தும் .புயலை தென்றாலாக்கும்  ஆற்றல் .தலைவியின்   அன்புக்கு உண்டு .

நீ தரும் 
அன்பில்தான்
 
நட்பென்னும்
- நந்தவனங்களில் 
நிறைய
வகைப் பூக்களாகவே
பூக்கின்றன
!  

கண்டதும் காதலா ? என்று பலர் கேலி பேசுவது உண்டு .ஆனால் பலரின் காதல் இன்றும் கண்டதும்தான் மலர்கின்றது என்பதும் உண்மை .அந்த உண்மை உணர்த்தும் கவிதைகள் நிறைய உள்ளன. . ஒரு பெண் அவன் காதலனுக்கு உலக அழகியை விட அழகியாகவே தெரியும் .இவளையா ? காதலித்தான் என்று சிலர் ஏளனம் செய்தால் கூட  அவனுக்கு அவன் கண்களுக்கு அவள் பேரழகிதான் .

உன் புகைப்படத்தை 
பார்த்தால்
 
உலக
தேவதையே 
ஒப்பனையைக்
 
குறைத்துக்
கொள்வாள் 
அறிவாயோ
நீ !

இவருடைய காதலியான தோழியின்   பெயர் என்னவாக இருக்கும் என்று யோசித்தால் அதற்கான விடை கவிதையில் உள்ளது .

வாசித்துப் பார்த்த போதுதான் 
உணர்ந்து
கொள்ள முடிந்தது 
உன்
பெயரும் 
என்
பெயரும் -
நட்பாய்
 
சேர்ந்திருப்பதை
!

நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் .உமாபதி இவரது காதலி பெயர் உமா .உமாபதியில் உமா அடக்கம் .

காதலன் சிந்தனை வித்தியாசமாக இருக்கும் .மற்றவர்களுக்கு விசித்திரமாகவும் வேடிக்கையாகவும் இருக்கும் .அந்த வகையில் வடித்த புதுக்கவிதை .

நகத்தை வெட்டி விடாதே !
உன்
நகம் கடிப்பதென்றால் 
அவ்வளவு
ஆசை எனக்கு !

விழிகள் சுமந்த கனவுகளை கவிதை வரிகளாக்கி படிக்கும் வாசகர்களுக்கு விழிகளுக்கும் சிந்தைக்கும் கவிவிருந்து வைத்துள்ளார் .காதல் கவிதைகள் படிக்கும் போது வாசகர்களின் வயது குறைந்து இன்பம் பிறக்கும் .இளமையாக்கி விடும் என்பது உண்மை

நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் .உமாபதி அவர்கள் பரபரப்பான சிங்கப்பூரில் வாழ்ந்தபோதும் தாய்மொழி தமிழ் மொழி  மறக்காமல் கவிதை வடித்து நூலாக்கி இருப்பதற்கு பாராட்டுக்கள் .காதல் கவிதையோடு நின்று விடாமல் அடுத்து நூலில் உலகத்  தமிழர்களின் பிரச்சனைகளை எழுதி நூலாக்க வேண்டுகிறேன் .

இனிய நந்தவனம் பதிப்பகம்  17.பாய்க்காரத் தெரு ,உறையூர் ,திருச்சி 620003.விலை ரூபாய் 50.  nandavanam10@gmail.com