நூல் : பாவாரம்
நூல் ஆசிரியர் :
கவிநாயகர் வி.கந்தவனம்
நூல் அறிமுகம்: 
த.சிவபாலு

திருமுறைகளுள் தொகுக்கப்பட்ட தேவாரங்கைள ஒத்தவையாக கவிநாயகர் வி. கந்தவனம் அர்களால் யாக்கப்பட்ட பாவாரப் பனுவலில் பாடப்பட்டுள்ள பாக்கள் அனைத்துமே இறையியல் போற்றி, ஏற்றிச் சாற்றப்பட்ட சாற்று கவிகளாகவே அமைந்துள்ளமையை இறையியலை நன்கு அறிந்து சாந்தலிங்க அடியார் தொடக்கம் புகழந்தும் பாராட்டியும் உரை தந்துள்ளமை அதற்குச் சான்றாக அமைகின்றன.

எப்பொரள் யார் யார்வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றார் வள்ளுவர்.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் உறுதுணையாக அமைய வேண்டும் என்னும் இல்வாழ்;வின் மெய்மையை உணர்ந்து அதன்வழி வாழ்ந்து இறையியலைத் தன்சென்னியில் வைத்து மக்களை நல்வழிப்படுத்தி வருபவர் கவிநாயகர் வி.கந்தவனம் அவர்கள்.

நான் பெற்ற இன்பம்பெறுக இவ்வையகம் என்ற பெரும் பண்பினைக் கொண்டு ஒழுகும் வழக்கலாறு எம்மவர்களிடையே பண்டுதொட்டு நிலவிவரும் வழக்கலாறு. “இறைதொண்டு செய்வதல்லால் யாமொன்றும் அறியோம் பராபரமே’ என இறைவனிடம் தம்மை அர்ப்பணித்து செயற்படுபவர்கள் இவ்வுலவில் அருகிவிட்டனர் என்றேகொள்ளலாம். அத்தகைய அருமையான மக்கள் மத்தியிலே தான் தெரிந்தெடுத்தக்கொண்டு தனிவழியாகச் சென்று இறைமார்க்கத்தை தன்சென்னியில் நிலைபெறுமாறு எண்ணுதியேல் அன்றி வேறு ஏம் அறியாராக இறையியலைத் தன்னை பின்பற்றிவரும் சிவ அடியவர்களைப் பக்குவப்படுத்தி தான் தெளிந்து கொண்ட மார்க்கத்திலே மற்றவர்களையும் ஆற்றுப்படுத்துகின்ற பெரும் பணியினை இன்று கனடாவில் செய்துகொண்டிருக்கக்ககூடியவர்களுள் கவிநாயகர் வி.கந்தவனம் அவர்கள் முதன்மையானவர் என்று துணிந்துகூறலாம். சமயத்தொண்டு சமூகத்தொண்டு எனத் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டு வருவதினை நாம் தினந்தினம் காண்கின்றோம்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர் நன்றும் தீதம் பிறர்தர வாரா” என்ற கொள்கைச் சால்பும் மாண்பும் விழுமியமும் கொண்டவர் அவர். அதன்வழி தேவாரத் திருவாசகத் திரட்டுக்கள் அடங்கிய “திருமுறைககளுள் முன்னுக்கு வைத்து பகுக்கபட்டுள்ள அப்பர், சுந்தரர், ஆளுடைபிளையும் மணிவாசகரும் இறைவனைத் துதித்தும்பாடிய தேவாரத் திருவாசகத்தில் தன்னை மெய்மறந்து ஈடுபடுத்திக்கொண்டவர். இளமை முதலே இறையன்பு கைவரப்பட்டர். “கந்தவனம”” என்னும் இறையவன் பெயரையே இவருக்கு அவரது பெற்றோர் சூட்டியும் அழைத்தும் மகிழ்நதனர் என்றால் அவரது குடுமு;பப்பின்னணியே இறை பணிசெய்யும் இறையன்பும், இறை பக்;தியும் கொண்ட குடும்பத்தினர் என்பது வெளிப்படை.

இவ்வித பிற்புலத்தின் வழிவந்த கவிநாயகர் அவர்கள் முழுமுதற்கடவுளாம் ;சிவனை நினைந்து மனமுருகிப்பாடுவதில் வியப்பொன்றும் இல்லை. பாவாரத்தில் தமிழகத் திருத்தலங்கள் சிதம்பரம் தொட்டு திருப்புள்ளிருகுவேளுர் ஈறாக 69 சிவதலங்களைப் பாடியுள்ளார். அவ்விதமே தான் பிற்நத மண்ணின் மாணிக்கமெனத் திகழும் சிவதலங்களில் திருக்கோணமலை தொடக்கம் திருக்காலி வரையிலான 47சிவதலங்களைப் பாடியுள்ளார் என்றால் அவரது அருட்கடாட்சம் எப்படியாக அமைந்துள்ளத என்பதனை எவருமே இலகுவி; ஊகித்து அறிந்துகொள்ளமுடியம்.

அவரது பாவாவர்தைப் பற்றி பேரூர் ஆதினத்தின் தலைவர் அருட்திரு சாந்தலிங்க அடிகளார் “உயர்புகழ் தீஞ்சுவைத் ததமிழப் பாடல்களைத் தங்கு தடையின்றிப் பாடும் பாவலர், சிவநெறிக்கும் செந்தம்ிழீக்கும் உள்ள தொடர்பை உலகறியச் செய்யும் செந்தண்மையர். மொழிக்கு மொழி தித்திக்கும் தீருமுறைகளும் அருட்பாக்குளும் வழிபாட்டில் முதன்மை பெறும் மந்திர மொழிகள் எனபதில் ஆழங்கால் பட்டவர்” எனக்கு குறிப்;பிடுகின்றார்.

தேவாரத்தின் அருளாற்றல் பேசும்மா மந்திரம் என்று
நாவாற்றல்சேர் உமாபதியார் நவின்றார் அவர்தம் கருத்தேற்றம்
பாவாரம்எனும் தமிழ்மாலை பகனறகந்த வம்தொண்டு
சேவாகனின் திருவருளால் செழித்து வளர வாழ்த்துகின்றோம்


என்ற அவர் மனமார வாழ்த்துவதனை நோக்கும்போது கவிநாயகரின் இப்பாவாரம் மூவர் முதலிகள் செய்த தேவாரத்தின் சாயலைப் பெற்றுள்ள பனுவலாகவே அமைந்துள்ளது எனலாம்.

சைவம் நலிந்திருந்த வேளை அதனை முன்னெடுத்துச் செல்லவேண்டிய கடப்பாடும், இன்றியமையாமையம் நிலவிய காலகட்டத்தில்தான் சமணமதத்தையம் பெளத்த மதத்தையும் ஊடறுத்துச் சென்று சைவத்தைநிலைநிறுத்த வேண்டிய ஒரு சூழல் நிலை தமிழகத்தில் நிலவியது. அந்த சந்தர்ப்பத்தில்தான் சமய நம்பிக்கையை மக்கள் மத்தியில் நிலைநிறுத்த வேண்டிய பணி அப்பர், சுந்தரர், ஆளுடைபிள்ளை, மற்றும் மணிவாகர்போன்றோருக்கு ஏற்ட்டது. பிற சமயங்களை மாழவைத்துச் உண்மைச் சமயத்தை மக்களிடம் எடுத்துச் செல்லும்நோக்கோடு ஊரரூராகச் சென்று போதனை செய்யவேண்டிய – சமய அறிவைப்பரப்பவேண்டிய ஒரு கட்டாயத் தேவை அக்காலகட்டத்துச் சமுதாயத்திற்குத் தேவையாக இருந்தது. அந்தப்பணிமைய சிவதலங்களைத் தரிசிப்பதன் ஊடாக நிலைநிறுத்தி வந்தனர் சமய குரவர்கள். அவ்வித பணியினை கனடாவில் வாழ்ந்துவரும் எமது கவிநாயகர் அவ்ர்கள் முன்னெடுத்து வருவதனை நாம் காணலாம். கனடாவோடு அவரது பணி நின்றுவிடாது உலகளாவிய ரீதியிலே மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள் என அவர் சமயச் சொற்பொழிவுகள் ஆற்றச் சென்று வருவதனை நாம் காண்கின்றோம். சமய குரவர்களும் சந்தான குரவர்களும் மேற்கொண்ட அப்பணியை இன்றைய காலகட்டத்தில் முன்னெடுத்து வருபவர் எமது கவிநாயகர். மனச்சுமை, மன இறுக்கம், மனக் குளப்பம், மாயை, புதிய இடத்தில் ஏதும் சச்யயமுடியாத அவலம் நிறைந்த வாழ்க்கை என்பனவற்றைப் பயன்படுத்தி எமது சமயத்தைச் சார்ந்தவர்களை ஏமாற்றி மதம்மாற்றுகின்ற ஒரு நிலையினை நாம் இன்று காண்கின்றோம். இக்கட்டான இந்தச் சூழ்நிலையை நன்கு அறிந்தவர் கவிநாயர். சமூகத்தோடு ஒட்டி உறவாடும் அவர் இவற்றிலிருந்து சமய அறிவைப் பரப்புவதற்கு சமக்கருத்துக்களை பாவாரத்தின் வழி முன்வைத்துள்ளார் என்பதனை அப்பாடல்களில் அவர் ஆங்காங்கே வைத்துள்ள சித்தாந்தக் கருத்துக்கள், கதைகள் என்பன உறுதுணையாக அமைகின்றன என்பதில் ஐயமில்லை. இறைவனின் திருவிளையாடற் கதைகளை தனது பாக்களில் புகுத்தி மறந்து வரும் சமயக் கருத்துக்களுக்குப் புத்துயிர் கொடுத்துள்ளார் என்றால் மிகையாகாது.

ஆல முண்டே அமரர்தம் அல்லலர் தீர்த்தார் மார்க்கண்டர்
கால எல்லை நீடித்தார் காம் இல்லக் கங்காளர்
மாலும் அயனும் தேடிமிக மயங்கச் சோதி மலையானார்
சால நல்லூர் அருள்செய்வார் தாங்கள் போற்றி வாழ்வேனே.


என்னும் பாடலில் நஞ்சுண்டமை, மார்க்கண்டருக்காக காலனைக் காலால் உதைத்தமை, மாலும் அயனும் அடிமுடி தேடியமை என்னும் புராண வரலாறுகளை ஒரு பாடலிலேயே தருகின்றார் என்றால் அவரது அறிவு முதிர்வை எவ்விதம் உரைப்பது.

இவற்றிற்கு மேலாக தனக்கென வாழாது பிறர்க்குரியாளராக வாழ்தத் தலைப்பட்ட அவர் ஈழத்தமிழர்கள் படுந்துயரைக் கண்டு வாழாவிருக்கவில்லை. தனது வேண்டுதலை இறைவனிடமே விடுக்கின்ற பாங்கு அவரது பாவாரத்தில் இளையோடி நிற்பதனையும் காண்கின்றோம். ஈழத்து ஆலயங்களைப் பற்றிப் பாடிய பெரும்பாலான பாடல்களில் அவர் ஈழப்போருக்கு முடிவுகாணவேண்டும் என்னும் கருத்தையும் மக்களின் துயரைப்போக்கவேண்டும் என நினைந்து நெஞ்சுருகப் பாடுகின்றார்.

செந்தமிழ் மக்கள் அல்லல்கள் தீரவும்
வந்து வான்ததமிழ் ஈழம் மலரவும்
தந்தருள் காக்குத் தக்க சுதுமலை
எந்தை யாரினண யின்கழல் வாழ்கவே.


என தமிழரின் வெந்துரயர் தீரவேண்டிப் பாடும் உளத்தர் எங்கள் கவிநாயர்க என்பதற்கு ஈழத்தில் நிகழ்ந்த அவலத்தைப் போக்கவல்லவர் சிவனே என அவரிடம் வேண்டுவதோடு அவரை அனைவரும் தொழுதல் பயன்கிட்டும் என்பதனையும் முன்வைக்கின்றார்.

ஆதியில் ஆண்டவர் பாதியில் தாண்டவர் பைந்தமிழ்ஷ
வேதனை தாண்டிட நீதியை வேண்டினர் வீரருயர்
சாதனை ஊள்;றிச் சரித்திர ;மாகிடச் சண்டிிப்பாய்ச்
சோதியர் செந்தமிழ் ஈழமுந் தோன்றத் துணைநிற்பரே


ஈழத்துச் சிவதலங்களைப் பற்றி அவர் பாடிய பாடல்கள் அனைத்திலும் மக்களின் துயர்களையும் மார்க்கம் முன்வைக்கப்ட்டுள்ளதோடு அந்தந்த ஊரிச் சிறப்புக்களையும் அவர் விதந்தும் நயந்தும் உரைத்திருப்பது சிறப்புடையது. அது அவரின் ஆற்றல்வெளிப்பாடும் இறைவனில் கொண்டள்ள அசைக்கவொண்ணா நம்பிக்கையையும் எடுத்துக்காட்டுகின்றது.

கவிநாயர் இதுவரை எண்பதிற்கம் மேலான நூல்களை யாத்துத் தந்துள்ளார். இந்தப் பாவாரப் பனுவலில்
1170 பாக்களைத் தந்துள்ளார். சிதம்பரத்தில் தொடங்கி 70 தென்னகத் சிவ திருத்தலங்களையும் மீதமான 47 ஈழத்துச் சிவதலங்களையும் உள்ளடக்கி மொத்தமாக 117 திருத்தலங்களைக் குறித்து அவரது இறைவழிபாடு அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. காலத்தின் தேவைகருதி அவர் செய்த பணி மாணப்பெரிதே! கற்றுப் பயன் பெறுவோமாக!.



நன்றி வணக்கம்