நூல் : மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர் "
நூல் ஆசிரியர் :
 தமிழ்த் தேனீ இரா.மோகன்
நூல் ஆய்வு: திருச்சி சந்தர்

ல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்கள் கவிஞர் இரா .இரவியின் முத்தான பத்து நூல்களின் அணிந்துரையின் தொகுப்பு. கவிஞர் இரா.இரவியின் படைப்பு ஆற்றலை படம்பிடித்துக் காட்டி உள்ளார் .பாராட்டுகள்

இரா.இரவி ஒரு முத்தொழில் வித்தகர்:

படைத்தல்:

தான் உள்வாங்கிக் கொண்ட கருத்துக்களை, பத்து மாதம் சுமைதாங்கியாகச் சுமக்காமல், காலதாமதமின்றி நூலாகப் படைத்து விடுவதில் வல்லவர்.

காத்தல்:

படைப்பது மட்டுமே இவர் வேலை, காப்பது, பல்கலைக் கழகங்கள், நூலகங்கள், அறிவுப் பசிக்கு இரை தேடுபவர்கள், நூலைப் படித்து ஆய்வு செய்வர்களே!

அழித்தல்:

சமுதாத்தில் புரையோடிக் கொண்டிருக்கும் சீர்கெட்ட, மூடத்தனமான அவலங்களை கவிதைகளால் சாடுவது.

ஐம்புலன்களாலும் சமுதாயத்தை உணர்ந்து அதன் ஏற்றத் தாழ்வுகளை அலசி ஆராய்ந்து எழுத்தாக்கம் செய்யும் வல்லவர். இரா.இரவி, தன் காலத்தில் வாழும் இலக்கிய, இலட்சிய மாமனிதர்கள், இவர் காலத்துக்கு முன் வாழ்ந்த இலக்கிய மேதைகளில் அருமை பெருமைகளை அறிந்து ஆராய்ந்து அடக்கிக் கொண்டதே “படைப்புலகம்”

விஞ்ஞானிகள், விளையாட்டு வீரர்கள், எழுத்தாளர்கள் என எவரையும் விட்டு வைக்காமல், தொட்டுக் காட்டாமல், கட்டுக் கோப்பாக, சாதித்தவர்களுக்கு சரித்திரம் படைத்ததிற்குக் காரணம், எந்த ஒரு எதிர்ப்போ, எதிர்பார்ப்போ இல்லாமல், அறிந்தவற்றை, அறிந்து கொண்டவற்றையும் ஆராய்ந்து அறிந்த கருத்துகளை தூய தொழில், எளிய நடையில் எழுதும் ஆற்றல் பெற்றது தான்.  “படைப்புலகம்” வாசகங்களுக்கு ஒரு படையல்.

அப்துல்கலாமோடு நெருங்கிப்பழகி நல்வாழ்த்துப் பெற்ற பெருமைக்குரியவர், பகுத்தறிவுவாதியான இரவி, இறையன்பை வேண்டாதவர்.  ஆனால், இலக்கிய மேதை இறையன்பின் அன்பை தன் இலக்கிய பசிக்கு இரையாக உண்டு மகிழ்பவர்.  இலக்கிய உலகில் அன்றும், இன்றும், என்றும் இருக்கின்ற இரா.மோகனின் புன்னகையை தமிழ் இலக்கியப் பொன்னகையாகப் பூட்டிக் கொண்டு மகிழ்பவர்.

பல்கலைகழகங்கள் தேடுமளவிற்கு தன்னைத் தானே பல கலை கற்றவராக்கிக் கொண்டவர், காரணம்? நல்ல இலக்கிய மேதைகளின் நட்பு, தமிழ்ப் பற்று, விடாமுயற்சி, தன்னம்பிக்கை.

இவர் படைப்புலக வெற்றிக்கான காரணத்தை இரவியின் படைப்பிலிருந்தே சில வரிகளை எடுத்துக்காட்டாக எழுதுகிறேன்.  என் விமர்சனம் தலைப்பாக கட்டிய தனித்தலைப்பாக

உழைப்பு :

      உழைத்தால் உயர்வு
      ஓய்ந்தால் தாழ்வு
      வாழ்க்கை.

தலையணை மந்திரம் :    

      கணவனை மயக்கி
      மனைவியின் சாதனை
      மாமியார் முதியோர் இல்லத்தில்

தொலைக்காட்சி :    

      நேரம் பொன்னானது
      பொன்னை விரயம் செய்வது
      தொ(ல்)லைக்காட்சி.

காதலுக்கு மரியாதை :

      காதல் என்பது, தேன்கூடு, அதைக்
      கட்டுவ தென்றால் பெரும்பாடு
      காலம் நினைத்தால் கைகூடும், அது
      கனவாய்ப் போனால் மனம் வாழும்   
(ஆலங்குடி சோமு)

புலம்பெயர்ந்த வலி :

      வீடு மாறியபோது
      உணர்ந்தேன்
      புலம் பெயர்ந்தோர் வலி.

திருக்குரல்(குறள்) :   

      தமிழ் என்ற சொல்லின்றி
      தமிழ்க்கு மகுடம்
      திருக்குறள்.

அப்துல்கலாமுக்கு சலாம் :

      முடியுமா என்பது மூட்த்தனம்
      முடியாது என்பது மடத்தனம்
      முடியும் என்பது மூலதனம்

சாதிக்கொரு சாபம் :

      உன் சாதியால் மட்டும் ஒரு நாள் வாழமுடியுமா?
      ஒட்டுமொத்த சாதியின் பங்களிப்பே உன்வாழ்வு
      உன் சாதிக்கென தனி ரத்தமா ஓடுகிறது
      உன் உயிர் காக்க உதவிய உதிரம் என்ன சாதி?

கரும்புள்ளி :

      ஊதிய உயர்வு
      வறுமையில் வாடியதால்
      சட்டமன்ற உறுப்பினர்களுக்கு.

(அறிந்தவர்கள் விரலில் கரும்புள்ளி, ஆளவைத்த ஏமாளிகள், அலட்சியம் செய்பவர்கள் பெரும்புள்ளி, ஆளத்தெரிந்த கோமாளிகள்)

நதி நீர் இணைப்பு:

      ஒரே நாடான இந்தியாவில் தண்ணீர் பகிர்வதில்
     
ஒருவருக் கொருவர் எந்நாளும் சண்டை
      ( பயிர் வாடுகிறது - உயிர் ஊசலாடுகிறது )

மன்மத பாணம் :

      மூன்று பக்கமும் கடலால் சூழ்ந்தது இந்தியா
      முழுவதுமே உன்னால் சூழப்பட்டவன் நான்.

இப்படிப்பட்ட நல்ல கருத்துகளை படைத்தவர் சுற்றுலாத் துறை பணியாளர். சுற்றுவதால் தானே அறிவு அகள்கிறது.

இணையதளத்தின் மூலம் இவ்வையமே பாராட்டும் புகழ் பெற்ற இரவியே, உம்மை உலகம் சுற்றும் வாலிப படைப்பாளியென வாழ்த்தலாமே!

படைப்புலக கருத்து முத்துக்களை சிதற விட்டு விட்டார் இரா. இரவி. எதை எடுப்பது! எதைக் கோர்ப்பது என்றறியாமல் தவிக்கிறேன்.

உன் அன்பான நட்பிற்கு இல்லையே
என் உள்ளத்தில் அடைக்கும் தாழ்!

வாழ்க! வளர்க! தொடர்க!