நூல் : கொடுவா மீசை  அருவா பார்வை
நூல் ஆசிரியர் :
 திருமதி கலா விசு
நூல் அறிமுகம்:   கவிஞர் இரா.இரவி

நூலாசிரியர் கவிதாயினி கலாவிசு அவர்கள் புதுவையின் பெருமைகளில் ஒன்றானவர். கதை, கவிதை, கட்டுரை என பன்முக ஆற்றல் மிக்கவர். இதழ் ஆசிரியர். புதுவையில் தொடர்ந்து கவிதைக்காக இயங்கி வரும் செயல்பாட்டாளர். புலனத்தில் அவ்வப்போது கவிதைப்போட்டி நடத்தி பரிசுகள் வழங்கி வருபவர். என் கவிதைக்கும் பரிசு கிடைத்தது.

25 சிறுகதைகளின் மூலம் இந்த நூலில் மனிதநேயம் விதைத்து உள்ளார். முத்தாய்ப்பான முத்தான சிறுகதைகள். ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு படிப்பினை உள்ளது. பாராட்டுக்கள். ஒரு சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக உள்ளன. பாராட்டுக்கள்.

நூலின் தலைப்பே சிறப்பு. கொடுவாள் மீசை என்பது தான் கொடுவா மீசை என்று சுருங்கி இருக்க வேண்டும். இந்த தலைப்பிலான சிறுகதை 2வது சிறுகதையாக இடம்பெற்றுள்ளது. கவிஞர் சுந்தர பழனியப்பன் அவர்களின் வாழ்த்துப்பா நன்று.

முதல் கதை ‘தொலைந்து போன பாவங்கள்’சென்னையில் வந்த மழை வெள்ளத்தை மனதில் வைத்து எழுதி உள்ளார். நூலாசிரியர் புதுவையில் வசித்து வருபவர் வெள்ளத்து நிகழ்வுகளை நேரில் பார்த்த உணர்வுடன் கதை வடித்துள்ளார். ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வைத் தருகின்றன ஒவ்வொரு கதைகளும்.

‘கொடுவா மீசை அருவா பார்வை’ கதையில் பாலியல் வல்லுறவு செய்த கயவனை பால்டாயிலை கள்ளில் கலந்து கதை முடிப்பதுபோல முடித்து உள்ளார். இன்றைய பொள்ளாச்சி கயவர்களுக்கும் இம்முடிவை வழங்கலாம் என்ற நினைவு வந்தது.

‘காற்புள்ளி முற்றுப்புள்ளியாகி விடாது’என்ற கதையில் நன்றி மறந்த பிறந்த வீடு பற்றியும் தாயைப் போல அன்பு செலுத்திடும் மாமியார் பற்றியும் நன்கு உணர்த்தி உள்ளார்.

‘ஒரு கட்டுக் கீரை’ கதையில் நம்பிவாங்கினால் உள்ளே பழைய கீரையைவைத்து சிலர் ஏமாற்றி விடுகிறார்கள்என்பதை எடுத்தியம்பி உள்ளார்.

‘கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை’ கதையில் நமக்கு கிடைக்கும் உதவியைநம்மிலும் கீழ்உள்ள ஏழைக்கு வழங்கவேண்டும் என்ற கருத்தையும் நாம் பிறருக்குஉதவினால் அந்த நல்ல உள்ளம் கண்டு பிறர்நமக்கு உதவுவார்கள் என்ற கருத்தை வலியுறுத்தி உள்ளனர்.

‘கலரு கலரா பேப்பரைச் சுற்றி’ கதையில் வறுமையின் காரணமாக நண்பன்திரும்பத் திரும்ப உதவி கேட்டாலும் நம்மிடம்பணம் இருந்தால் உதவிட வேண்டும் என்றகருத்தையும், உதவியவர்களை நன்றிமறக்காமல் பாராட்ட வேண்டும் என்றகருத்தையும் வலியுறுத்தி உள்ளார்.

இப்படி ஒவ்வொரு கதையிலும்அறக்கருத்துக்களை நன்கு வலியுறுத்திஉள்ளார்.

குழந்தைத் தொழிலாளி முறையைஅரசு சட்டம் இயற்றி தடை செய்தாலும்ஏழைக்குழந்தைகளின் வாழ்வு உயர்ந்திட அரசுஒன்றும் செய்வதில்லை. ஆனால்மனிதாபிமானமிக்க நல்ல மனிதர் ஏழைக்குழந்தைகள் படிப்பு செலவை ஏற்றுஉதவிட முன்வருவது நல்ல முடிவுபாராட்டுக்கள்.

குடியின் காரணமாக பலர்விதவையானது குழந்தைகள் ஆதரவற்றவர்களானது என பல கதைகளில் குடியின் கேட்டை நன்குஉணர்த்தி சமுதாயத்தை சீர்படுத்திட உதவிஉள்ளார். பாராட்டுக்கள்.

‘நம்ம வீட்டுப் பொண்ணுங்க’ கதையில்அம்மா இறந்ததும் அம்மாவின் நகைகளையும் பொருட்களையும் அவசரமாக பங்கு போட்டுக்கொள்ளும் பேராசையை சுட்டிக்காட்டிஉள்ளார்.

‘காதலெனும் தேர்வெழுதி’ என்றகதையில் காதல் வலையில் விழுந்து கயவன்அவளை விற்றுவிட தீர்மானித்ததை அறிந்து, காதலை மறந்த கதை, படிக்கும் வயதில்ஏற்படும் விபரமில்லாத அறியாத புரியாதகாதல் அவசரக் கோலத்தில் அள்ளித்தெளித்தது போல அல்லல் தரும் என்பதைமாணவிகளுக்கு நன்கு உணர்த்தி உள்ளார்.

‘வெற்றியும் தோல்வியும்’ என்றசிறுகதையில் குழந்தைகளுக்கு விளையாடும்போது விட்டுக்கொடுத்து வெற்றியைத்தருகிறோம். ஆனால் அவர்கள் வெளியில் விளையாடும்போது தோற்றால் தாங்க முடியாமல் மனம்துவண்டு அழுதி புலம்பி வருகின்றனர். எனவே குழந்தைகளுக்கு வெற்றி தோல்வி இரண்டையும் சமமாகக் கருதிடும் உள்ளத்தைவழங்கிட வேண்டும் என்பதை உணர்த்திஉள்ளார்.

‘பயப்படாதே அம்மா’ என்ற கதையில் ஒருசில குழந்தைகள் மிகவும் சுட்டியாகஇருக்கும். ஒரே இடத்தில் அமராது பலசேட்டைகள் செய்யும், தட்டி விடும், இன்னல்கள்தரும், கடைசியில் காணாமல் போய், அம்மாதேடி அலைந்து காவல் நிலையத்தில்குழந்தையை பெற்ற கதையில் சுட்டிக்குழந்தைகளளை கண்முன்காட்சிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்.

‘அன்பென்ற மழையாலே’ கதையில் அலுவலகத்தில் மேலாளர் திட்டியதற்காக மனம் வருந்தியவன் தன் மகனை நாம் திட்டும்போது அவனும் இப்படித்தானே மனம் வருந்தி இருப்பான் என்பதை உணர்ந்து திட்டுவதைவிடுத்து மகனிடம் அன்பாகப் பேசுகின்றார். இதனை அனைவருமே கவனத்தில் கொள்ளவேண்டும்.

இப்படி சிறுகதைகளின் மூலம்சிந்தையில் நல்ல சிந்தனைகளை விதைத்துஉள்ளார். எனக்கு கவிதை பிடித்த அளவிற்குகதை பிடிப்பதில்லை. ஆனால் இந்த நூல்கையில் கிடைத்தவுடன் ஒரே மூச்சில் கீழேவைக்காமல் படித்து முடித்து விட்டேன். இந்நூலின் மூலம் கதையும் எனக்கு பிடிக்கத்தொடங்கியது. நூலாசிரியர் இனிய தோழி கவிதாயினி கலாவிசு அவர்களுக்குபாராட்டுக்கள்.
 








15, நான்காம் குறுக்குத் தெரு, வெங்கட்டா நகர்,
புதுச்சேரி-605 011,
பக்கம் : 112,
விலை : ரூ. 100

 



 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்