நூல் : WinMind - அகம் அறிவோம்
நூல் ஆசிரியர் :   Dr. ஜனகன் விநாயகமூர்த்தி
நூல் அறிமுகம்:    த.சிவபாலு B.Ed.Hons, M.A

 

ஆசிரியரைப் பற்றி:

இந்நூலைப் பற்றி அறிவதற்கு அதன் ஆசிரியர் பற்றி சற்று அறிந்திருத்தல் பொருத்தமானது. இலங்கையில் பிறந்த இந்நூலாசிரியர்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டதாரி, இங்கிலாந்தில் University of Wales இல் முதுகலைமாணிப்பட்டமும் Buckinghamshire New University  LLB(Hons) பட்டமும் பெற்றவர். முகாமைத்துவப் பட்டயக் கணக்காளர் துறையில் தேர்ச்சி பெற்றவர். சர்வதேச புத்தகக் காப்பாளர் சங்கம், UK மற்றும் CCNAசான்றளிக்கப்பட்ட உறுப்பினரும் ஆவார்.

IDM Nations Campus   நிர்வாக அதிகாரியும் இயக்குநரும், EdHat International நிறுவனத்தின் சர்வதேச இயக்குநரும்  EPlus Examinations நிறுவனரும் தலைவருமாவார்.

இந்த நூலில்  எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் அவரால் உயர்தர மாணவர்கள் மத்தியில் இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் வேலையமர்வுகளாகவும், உரைகளாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றை விட Quiz T20 என்னும் வினாவிடைப் போட்டித் திட்டத்தினை மாணவர்களுக்காகத் தயாரித்து அதனை முன்னெடுத்துச் செல்வதிலும் ஈடுபட்டுவருகின்றார்.

நூலைப்பற்றி:

இந்த நூல் 2018 ஆகஸ்ட் மாதம் தமிழ்நாட்டில் வெளீடு செய்யப்பட்டுள்ளது. குற்றம் குறை களைந்து நயங்கொள்ளும் நோக்கமாக இந்நூலை அறிமுகப்படுத்த முனைகின்றேன். இந்த நூல் இரண்டு பகுதிகளாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது. முதலாவது பகுதி வாசகங்களாக அதாவது கோட்பாடுகளாக அமைநதுள்ளன. இரண்டாவது பகுதி ஒன்பது கட்டுரைகளை உள்ளடக்கிய ஒரு கட்டுரைத் தொடுகுதி. இவை இரண்டையும் அடக்கியதே இந்தநூல்.

முதலாவது பகுதியில் 9-57 வரையான பக்களில் அவரது 195 வாக்கியங்கள் அதனை அறிவுரைத் துணுக்குக்கள் எனக் குறிப்பிட விரும்புகின்றேன். இந்த வாக்கியங்கள் ஆரோக்கியமான ஆலோசனைகளாக ((Motivational Quotes)  முன்வைக்கப்பட்டுள்ளனளன. குறிப்பாக எதிர்மறை விடயங்களை மனங்கொள்ளாது அல்லது அவற்றைக்கண்டு மனந்தளராது மாற்றுவழிகளைக் கைக்கொள்ளவேண்டும் என்பதே முக்கிய கருத்துக்களமாக பரவ விடப்பட்டுள்ளது.  வள்ளுவத்தைப் போலவோ அல்லது நன்நெறிபோன்றோ இது ஒரு ஒழுங்கமைக்கப்பட வகையில் பகுத்துத் தரப்படவில்லை. இது பல விடயங்களின் கலவைத் தொகுப்பாக  உள்ளது.

'வாழ்க்கை என்பது

நம்மை அறிந்து கொள்வதற்கானது மட்டுமல்ல

நம்மை உருவாக்குவதற்கானதும் கூட'.

'பிறப்பு நம் விருப்புக்கு அப்பாற்பட்டது போல், வாழ்வில் ;இடம்பெறும் அனைத்தும் நாம் விரும்பியதுபோல் அமையவில்லை என்பதிலும் அதிசயம் இல்லை'

'நீ செய்த செயலைக் கைவிடும்போது உனக்குத் தெரிவதில்லை நீ வெற்றிக்கு எவ்வளவு அருகில் இருக்கின்றாய்; என்று. அதனாலேயே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தோல்வியைச் சந்திக்கின்றாய்'.

'இந்த உலகம் உங்களைத் திரும்பிப்பார்க்கவேண்டும் என்றால் உங்களை யார் பார்க்கிறார்கள் என்று திரும்பிப்பார்;காதீர்கள்'

'நீ உழைக்கத்தயாராக இருந்தால் உனக்கு உதவத்தயாராக அனேகர் உள்ளனர். யாரும் சுயமாக உழைத்து முன்னேறியவர்கள் அல்லர்'

'வாழ்வதற்காக பலவற்றைக் கற்றுக்கொள்ளுங்கள் ஆனால் கற்பதற்காக மட்டும் வாழ்ந்துவிடாதீர்கள்'

சந்தேகம், பிறப்பு, வாழ்க்கையில் ஒரு கதவு திறந்தே இருக்கும், முறையற்றுச் சேர்க்கும் பணம், வாழ்க்கை வரமா அல்லது சாபமா? என்பனபோன்ற வாசகங்களை உன்னைப் பற்றி நீ அறிந்துகொள்ளவும் முன்னேற்றப்பாதையில் செல்லவும் காரணமாக அமையும் என்ற நம்பிகையில் ஆலோசனைகளாக தான் எழுதியுள்ள 1000 வரையான வாசகங்களில் 195 மட்டும் இந்த நூலின் முற்பகுதியல் வைத்துள்ளார் ஜனகன்.

இரண்டாவது பகுதியாக 'அகம் அறிவோம்' கட்டுரைகள் உள்ளடக்கப்பட்டன. நூலின் 59 பக்கம் முதல் 114

பக்கங்கள் வரை ஒன்பது கட்டுரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.நம்மை நாமே தேர்ந்தெடுப்போம்

'உன்னையே நீ அறிவாய்' என்னும் கிரேக்க தத்துவமேதை சாக்கிரட்டீசை (கி.மு.469) நினைவுக்குக் கொண்டுவருகின்றது. அத்தோடு “One should always be on the trail of one’s own deepest nature” – Henry David Thoreauவின் கோட்பாட்டையும் நினைவுறுத்துகின்றதோடு பற்பல இடங்களில் வள்ளுவம், நன்நெறி, திருமந்திரம் போன்றவற்றின் கருத்துக்களை உள்ளடக்கியதாக உள்ளது என்பது எனது கருத்து. இக்கட்டுரை

தன்னை அறிந்தால் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்சிக்கத் தானிருந்தானே' – என்னும் திருமூலரின் திருமந்திர வரிகளை அடிப்படையாகக் கொண்டவையாக உள்ளன.

நம்மை நாமே தேர்ந்தெடுப்போம் பிறர் நம்மைத் தெரிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்iதிலிருந்து விடுபட்டு நம்மை நாமே தேர்ந்தெடுப்போம். எம்மை இன்னொருவர் தேர்ந்தெடுப்பதற்காக சதா தயார்படுத்திய காலத்திலிருந்து நாம் சுதந்திரம் அடைந்துள்ளோம். எம்மைப் பிறர் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதுதான் எமது இலக்காக அடைந்திருந்தது. மற்றவர்கள் எங்களைத் தேர்வு செய்யவேண்டும் என்ற காத்திருந்தோம் ஆனால் இன்று நிலைமை அவ்வாறானாதாக இல்லை. என்ற கருத்துக்கண்ணோட்டத்தை முன்வைக்கின்றார். முன்னர் மறுக்கப்பட்டிருந்த வாய்ப்புகள் இன்று தாமாகவே தேடி வருகின்றன. அவற்றைப் பயன்படுத்த உங்களை நீங்களே தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது இக்கட்டுரை சுட்டிக்காட்டும் விடயமாகும். நம்மை அனைத்தும் தேடி வரட்டும் அல்லது வேறுயாராவது பெற்றுத் தரட்டும் என்று காவல் இருக்கின்றோம் அதிலிருந்து விடுபட வேண்டும் என்பதனை முன்வைக்கின்றார் கட்டுரையாளர்.

கட்டழகாக இருங்கள் என Handsom  என்பதற்கு விளக்கமளித்துள்ளார். உடல், உள வலிமைதான் கட்டழகு என அவர் குறிப்பிட்டுள்ளது பூரணமாக அவர் ஆளுமைப் பண்புகளைப் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளவில்லையோ என்னும் ஐயத்தை ஏற்படுத்துகின்றது. உடல் வலிமையையும் உள வலிமையையும் வளர்த்தெடுக்கவேண்டும் என்பது அவரது கருத்து. அனால் ஒருவரிடம் உள்ள பல்வகைத் திறன்களை (Multiple Skills) விருத்தி செய்யவேண்டியது மாணவர்களின் திறன்களை வெளிக்கொண்டுவர வேண்டும். ஆனால் இவற்றைப் பற்றிய வழிகாட்டல் இக்கட்டுரையில் முன்வைக்கப்படவில்லை என்றே தோன்றுகின்றது. 

2.உங்களால் அதிஸ்டத்தினை (Luck) இலகுவாகக் கையாளமுடியும்

அதிஸ்ரத்தை (நற்பேறு- நல்வாய்ப்பு) இலகுவாகக் கையாளமுடியும். அது ஓர் அழைக்கமுடியாத விருந்தாளியாக இல்லை. அது எப்பொழுதும் எங்கள் கைக்கு அருகிலேயே இருக்கின்றது' என்பதே இக்கட்டுரையின் பீடிகையாக உள்ளது. அனைவருக்கும் அதிஸ்ரம் தம் பக்கதில் இருக்கவேண்டும் என்பதே விருப்பம். ஆனால் அதனை அதிகரிக்க, அதனை நாம் அடைய உணர்வுபூர்வமாகவும் உறுதியாகவும் முயற்சிகள் செய்வதனால் அடையலாம் என்பது அவரது தீர்வாக உள்ளது. இயலாமை, துர்ரதிஸ்ரம் இரண்டையும் களைந்தெறியவேண்டும் என்பதும் அதனை இதனால் நம்மை விட்டுத் துரத்தமுடியும் என்பதனையும் எடுத்து விளக்கியுள்ளார். ஆதிஷ்டம் முயற்சியில்லாமல் கிடைக்குமா என்பது என்னிடம் எழுந்துள்ள கேள்வி. பின்வரும் ஆய்வின் அடிப்பையில் வைஸ்மான் அவர்களின் கருத்துப்படி ஜனகனின் கட்டுரை உள்ளார்ந்த உணர்வின் அடிப்படையில் தங்களின் அதிஸ்ரத்தை வளர்த்தெடுக்கவேண்டும் எனக் கோடிட்டுக்காட்டியுள்ளார் என்பது புலனாகின்றது.

Richard Wiseman  எனும் உளவியற் பரிசோதனையாளர் நற்பேறு அல்லது நல்வாய்ப்பு என்பதனை நான்கு வகையான கொள்கைகளாக வகுத்துள்ளார்.

 First Principle: Muximize ‘chance Opportunities:   அதிஸ்ரமுள்ளவர்க்ள ஆக்குதல், அவதானித்தல், செயற்படுதல் என்பவற்றில் திறமை உள்ளவர்கள் அவர்கள் அதிஸ்ரத்திற்கான வாய்ப்புக்காக செயற்படுவார்கள். இதனை தொடர்பு கொள்ளுதல், மிக அமைதியாக தமதாக்கிக்கொள்ளுதல் புதிய அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளத் தயாராக இருத்தல் போன்ற பல்வேறு முறைகளில் மேற்கொள்ளவார்கள்.

Second Principle: Listening to Lucky Hunches: நல்வாய்ப்பு உள்ளவர்கள் தாக்கமுள்ள முடிவுகளை உள்ளார்ந்த உணர்வுகளின் வழி எடுப்பார்கள். அத்தோடு அவற்றை நடைமுறைப்படுத்த தங்கள் உள்ளார்ந்த திறன்களைப் பயன்படுத்துவர். இதற்கு தியானித்தல், மனதிலிருந்து வேண்டத்தகாதவற்றை நீக்குதல் போன்றவற்றால் தங்கள் உள்ளார்ந்த திறனை வளர்த்தெடுப்பர்.

Third  Principle: Expect Good Fortune: திர்காலம் நல்ல பேறைத் தரத்தக்க அமையும் என்பதில் நம்பிக்கை கொண்டிருப்பர். அதிஸ்ரம் உள்ளவர்களைப் பின்பற்றுதல், போற்றுதல், ஏற்றுதல், உதவுதல் போன்றவற்றால் தங்களை வளர்த்துக்கொள்ளும் தொலைநோக்கு உள்ளவர்களாக மற்றவர்களோடு தொடர்புகொள்வதனை நல்லமுறையில் வடிவமைத்துக்கொள்ளுவர்.

Fourth Principle: Turn Bad Luck to Good: ஆதிஸ்ரம் உள்ளவர்கள் பல்வேறு உளவியல் நுட்பங்களை கொண்டிருப்பதோடு அடிக்கடி  துர்ரதிஷ;டம் மேலோங்க அதனோடு சலிப்;பின்றி சென்றுகொண்டே இருப்பர். அப்படியான சந்தர்ப்பங்களில் அவற்றைக் கண்டு துவளாத அவ்வாறான சந்தர்ப்பங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவர்.

இவற்றை ஜனகனின் இக்கட்டுரையில் காணமுடிகின்றது. பல்வேறு உளவியல் வின்பர்களின் கருத்துக்களை உள்வாங்கி இக்கட்டுரை ஆக்கப்பட்டுள்ளமை புலனாகின்றது.

3.குழந்தைகளின் அபிவிருத்தியும் தற்கால ஆரம்பப்பாடசாலைகளின் போக்கும்

ஆரம்பப் பாடசாலைகளில் ஈழத்தில் இடம்பெறும் சிக்கலான நிலைமைகள். அவற்றின் செயற்பாடுகள் போன்றவற்றில் ஏற்படவேண்டிய மாற்றத் தின் அவசியம். தேவை என்பன இக்கட்டுரையில் கையாளப்பட்டுள்ளன. கிராமியப் புறப்பாடசாலைகளில்  உள்ள ஆசிரியர்களின் பயிற்சியின்மை, வளமின்னை, வளப்பயன்பாடு பாரம்பரிய முறையில் இருந்து மாற்றம் காணவேண்டும் என்பதனையும் அதனை எவ்விதம் சாத்தியமாக்கலாம் என்பதனையும், ஆரம்பப் பாடசாலைகள் இன்னும் குழந்தைகளுக்கான கல்விமுறையினை அல்ல முதியவர்களுக்கான கல்விமுறையினையே கொண்டுள்ளது என்பதும் அவரது ஆதங்கமாகவும் அதனை மாற்றவேண்டும் என்பதும் அவரது ஆலோசனையாகவும் உள்ளது. ஆசிரியர்களிடமும், பெற்றோரிடமும் மாற்றம் ஏற்படவேண்டும் என்பதனை இக்கட்டுரையில் வலியுறுத்தியுள்ளார்.

4.ஈகோ எப்படியெல்லாம் உங்களைக் குடையும்

'சொந்த வீட்டிலேயே உரிமை கொண்டாடமுடியாது உள்ளதுதான் ஈகோ'  என்கின்றார் சிக்மண்ட் புறோயிட். எல்லா மனிதருக்குமே ஆழ்மனதில் 'நான்' என்கிற ஈகோ இருக்கத்தான் செய்யும், ஆனாரல் அந்த மமதையை அடக்கிவைத்திருக்கும் மனிதன்தான் எல்லாவற்றையும் கடந்து போகின்றான் என்பதே இக்கட்டுரையின் கருப்பொருளாகக் காணப்படுகின்றது.  'தற்பெருமை அல்லது அகந்தை எனப்படும் ஈகோ தன்னைத்தானே ஆராதிக்கும் அதிகூடிய நடத்தை' என்பது அவரது விளக்கம். அது மனதில் வேரூன்றிவிட்ட ஒன்று. அதிலிருந்து விடுபடும்போதுதான் நாம் மற்றவர்களுக்கு உதவமுடியும் அவர்களையும் சமமானவர்களாகக் கருத முடியும். ஈகோ எங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கின்ற மரணப்பசிக்கு ஒப்பானது என்கின்றார். அது கடந்த காலத்தையும் எதிர்காலத்தையுமே விரும்பும். அதனால் நிகழ்காலத்தை அது புறக்கணிக்கின்றது. ஈகோவைக் கட்டுப்படுத்த நம்மை நாம் ஒருமுகப்படுத்துவதோடு அமைதி, பொறுமை இவற்றைப் பேணவேண்டும் அதற்கு மனதைக் கட்டுப்படுத்தும் தியானப் பயிற்சிகள் இதுவும் கடந்துபோகும் என்ற நிலையினை ஏற்படுத்தும். அதுவே ஈகோவை வெளியனுப்பும் சிறந்த வழி என்;கின்றார். ஆனால் ஈகோ விற்கும் ஈகோவிசத்திற்கும் வேறுபாடு உண்டு என்பது உளவியலாளர்களின் கருத்து. ஈகோ குழந்தை கருக்கட்டிய உடனேயே அதனோடு ஈகோவும் உருப்பெறுகின்றது. இந்த ஈகோவின் வளர்ச்சியே மனம் என்கின்றனர். எனவே ஈகோவிஸம் என்பது எதிர்மறைக் குணங்களைக் காட்டும் அகம்பாவமே. அது தன்னைப்பற்றி மட்டுமே சிந்திக்கும். இந்தக் கட்டுரையில் இது விரிவாக விளக்கம் அளிக்கப்படவில்லை என்றே நான் கருதுகின்றேன். அகந்தையை, ஆணவத்தை அகற்ற வேண்டும் என்பதே இக்கட்டுரையில் முன்வைக்கப்படுக்கின்றது.

தானே தனக்குப் பகைவனும், நண்பனும்
தானே தனக்கு மறுமையும், இம்மையும்
தானே தனக்கு வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே!! – திருமூலர்  

என்னும் திருமந்திரமத் தின் தத்துவத்தை அவரது கட்டுரையில் காணமுடிகின்றது,

 

5.எங்களைத் தேடுவோம்

உண்மையில் நாங்கள் யார் என்னும் சுயத்தைத்தேடும் தன்மையை எடுத்துக்காட்டுவதாக இந்தக் கட்டுரை அமைந்துள்ளது. 'காலத்திற்கும் இடத்திற்கும் மற்றும் தேவைக்கும் எற்றவாறு முகமூடி அணிந்துவிட்டு, அந்த முகமூடியை அந்தக் கதாபாத்திரம் முடிந்த பிறகு கழற்றத் தெரியாமல், இதுதான் நாங்கள், இதுதான் எங்கள் குணம்' என்கிறோம். அந்த முகமூடியைக் கழற்றி, இன்னொரு முகமூடி அணிந்த பிறகு, 'இல்லை இல்லை இதுதான் நாங்கள்' என்கின்றோம். மொத்தத்தல் எங்களுக்கு எங்களைத் தெரியவதில்லை. நீங்கள் விடும் தவறுகளை ஒரு தாளில் எழுதிவையுங்கள். அவ்விதமே உங்களிடம் உள்ள அதிசயிக்கும் விடயங்களையும் எழுதுங்கள். குறைகளை எழுதுவதுபோன்று அதிசயங்களை எழுதுவது இலகுவானதாக அமையாது. இரண்டையும் எடுத்துப் பாருங்கள் இப்போது நீங்களே உங்களைப் பார்த்துச் சிரிப்பீர்கள். எது சரியெனப்படுகின்றதோ அதனை ஒரு படமாக வரைந்து நீங்கள் பார்க்கும் படி வைத்துவிடுங்கள். அப்போது உங்களை நீங்கள் அறிந்துகொள்ளுவீர்கள் என்பது எங்களைப் பற்றி நாங்கள் அறிந்துகொள்ளுவதற்கான அவரது வழிகாட்டியாக அமைகின்றது என்னும் கருத்து முன்வைக்கப்படுவதனை உணரமுடிகின்றது.

6.நீங்களே உங்களைப் பார்த்து வியக்கும் வகையில் வாழ்வது எப்படி?

வாழ்க்கையில் எதனை அடைவேண்டும் எனத் தெரிந்த எங்களுக்கு அதனை எப்படி அடையவேண்டும் என்பது தெரிவதில்லை. மற்றவர்களை முடிந்தளவு அனுசரித்துப் போவது சிறப்பான வாழ்வைத் தராது. உங்கள் இலக்கை அடைய சுயநலம் தேவை என்பதே அவரது அனுபவக்கருத்தாகப் பகிர்விட்டுள்ளார். 'உட்சுவர் தீத்திப் புறச்சுவர் தீத்த வேண்டும்' என்னும் பழமொழியை அவர் ஆதரித்துப் போவதாகவே படுகின்றது. மற்றவர்களைப் போன்று உங்களை மாற்ற நினைப்பது உங்களை நீங்களே ஏமாற்ற நினைக்கும் வேலை என்கின்றார். நல்ல நண்பர்கள், உறவினர்களின் தொடர்பை அதிகரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும்  குறிப்பிடுகின்றார். இங்கு சுயநலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் அதே வேளை மற்றவர்களை உங்களின் நலனுக்குப் பயன்படுத்தவேண்டும் எனவும் மறைமுகமாகக் கூறுவதுபோல உள்ளது இக்கட்டுரை. மற்றவர்களின் எதிர்மறையான கருத்துக்குச் செவிசாய்காமல் நீங்கள் நீங்களாகவே இருக்கவேண்டும் என்பது அவரது கருத்து. 'ஊர் ஓடுகில் ஒத்தோடு ஒருவனோடுகில் கேட்டோடு' என்னும் பழமொழிக்கு எதிரிடையான கருத்தை முன்வைத்து உன் நலத்தில் அக்கறை கொண்டு நீ நினைத்ததை நிறைவேற்றப் போராடு என்பது அவரது குறிக்கோளாகக் காணப்படுகின்றது.

7.எம் இலக்கின் ஆசான்கள் குழந்தைகள்

குழந்தைப் பருவத்தில் நாம் கொண்ட பண்புகளை மீட்டால் எமது இலக்கினை அடையும் வழி தூரத்தில் இல்லை என்பது அவரது எண்ணம். திறமையற்றவர்களாலும் சாதிக்க முடியும் என்பதனைச் சுட்டிக் காட்டுவதோடு திறமையிருந்தும் இலக்கு இல்லாவிட்டால் முன்னேற்றம் காணமுடியாது என்கின்றார்.  குழந்தைகளிடம் உள்ள பயமறியாத நேர்மையை இலக்கை அடைய அடித்தளாமாகப் பயன்படுத்தவேண்டும் முயற்சிகளின் ஏற்றத்தாழ்வுகளைத் தயக்கமின்றி முகம்கொடுக்கவேண்டும். ஒரு யோசனையை மற்றவரிடம் பகிர்ந்துகொண்டால் அவர்கள் திருடிவிடுவார்கள் என்று நினைப்பது தவறு. யார் முதலில் செய்கின்றார்களோ அவர்களே வெற்றியாளர்கள் என்பதை அறிந்துவைத்துக்கொள்ளவேண்டும். நான்தான் சரி என ஒருபோது நினைக்கக்கூடாது அது முன்னேற்றத்திற்குத் தடையாக அமையும் என்கின்றார். விளையாட்டுத்தனமாகச் சிந்தித்தால் இலகவாகத் தீர்வு கிட்டும் என்கின்றார். எமது ஆரம்பகாலத்து எண்ணங்களை அசைபோட்டு அதன்வழி முன்னேற்றம் காணலாம் என்பது அவரது ஆலோசனையாகும்.

8.படைப்பாற்றலின் எரிபொருள் சலிப்பு

சலிப்புத் தன்னை எமக்குள் ஒரு அபரிமிதமான சக்தி இருப்பதனை இனம் காட்டக்கூடியது. ஓன்றுமே செய்ய இயலாமல் இருக்கும்போது எம் மூளை தன்னுடைய தன்மையை உணர்த்த சந்தர்ப்பத்தினை நாங்கள் அதற்கு வழங்ககின்றோம். ஆர்க்கிமிடிசின் சிந்தனை அவர் அமைதியாக இருந்தபோது விளையாட்டாகக் கண்ட தீர்வினை நினைவுறுத்தும் வகையில் இக்கட்டுரை அமைகின்றது. மூளைக்கு ஓய்வு கொடுக்கவேண்டும் நன்றாகத் தூங்க வேண்டும் என்பது மூளை தன்னுள் உள்ளவற்றை வெளிக்கொண்டுவர அளிக்கப்படும் சந்தர்ப்பமாக அவர் முன்வைத்துள்ளார். தொழில் நுட்பக்காரணிகள் எமது தனிமையை அகற்றிச் சலிப்புக்கு நிவாரணியாக அமைகின்றது என்கின்றார். படைப்பாற்றல், சிந்திக்கும் ஆற்றல், கவனித்தற் திறன், அறிதிறன் என்பனவற்றை இவை பாதிக்கின்றன. வாசிப்பாற்றலையும் குறைக்கின்றது என்பதும் பிள்ளைகள் கையடக்கத்தொலைபேசிகளை பாவிக்கும்போது அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பார்த்து உறுதி செய்யவேண்டும் என்பதும் அவரது ஆலோசனையாக முன்வைக்கப்படுகின்றது,

9.எமது பாதையை அமைக்க இன்றே பாதை அமைப்போம்

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையும் தொழில் ரீதியான வாழ்க்கையும் சரியான உள்ளடக்கம் உள்ளதாக அமைந்தால் நல்லது. ஆனால் ஒன்றுக்கொன்று முரண்பாடுடையதானால் அல்லது செய்தொழில் திருப்தி இல்லாவிட்டால் சிறப்பாக அமைகாயது எனவே கல்வியோ அன்றி சூழ்நிலையோ உங்களைக் கட்டிப்போட இடமளிக்கலாகாது. எங்கே இருக்கின்றோம் என்பது முக்கியம் ஆனது. உடல்நலம், தொழில், விளையாட்டு, உறவுமுறை என்பனவற்றைச் சரியாக அடையாளப் படுத்திக் கொள்ளவேண்டும். இவற்றைச் சமநிலைப் படுத்திக் கொள்ளவேண்டும். எதில் கவனம் குறைந்துள்ளதோ அதில் சற்று கூடிய கவனம் செலுத்தவேண்டும். தொழில் ரீதியான பார்வை, வாழ்க்கை ரீதியான பார்வை என்பன எமது திசைகாட்டிகள். வருமான அணுகுமுறை சமூகரீதியான அணுகுமுறை என்பன தனிப்பட்ட தத்துவத்தின் அடிப்படையல் தொடர்புடையன. இவை தனி மனிதர்களிடையே அவர்களின் எண்ணங்களின் அடிப்படையில் வேறுபாடுடையன. சிலர் போதும் என்ற மனதோடு  இருப்பார்கள் இன்னும் சிலரோ ஓய்வின்றி உழைத்துக்கொண்டே இருப்பார்கள். சரியான வழியைத் தேர்ந்தெடுக்க ஊக்கப்படுத்தும் தருணங்களை அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள். வழிகாட்டலின் அடிப்படையில் எதிர்காலத்தினைத் திட்டமிட்டு நடந்தால் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் தருணங்கள் உருவாகும். சிந்தனையின் அடிப்படையில் மன வரைபடத்தைப் பயன்படுத்தி மனத்தடைகளை அகற்றலாம் என்பது அவரது ஆலோசனையாக உள்ளது. கடன்வழங்கப் பலவங்கிகள் உள்ளன. அவை உங்களின் உழைப்பை உறுஞ்சுகின்றார்கள் என்பதனை மறந்துவிடாதீர்கள். திட்டமிட்டு வாழ்வை ஓட்டவேண்டிய அவசியத்தை உணர்ந்துகொள்ளவேண்டும் என்பது இக்கட்டுரையின்; சுருக்கமாகும்.  இதனை ஒத்ததாக பனிப்பூக்கள் என்னும் இணையத்தளத்தில் யோகி என்பார் எழுதியுள்ள கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுவதனை நாம் ஒப்புநோக்க முடியும். வாழ்வில் எடுக்கும் முயற்சி வெற்றிகரமாக அமைய எமது அணுகுமுறையில் அக்கறை வேண்டும். இதில் முக்கியமானது, நாம் தெளிவாக, எமக்கு முக்கியமானது எது என்று நிர்ணயித்துக் கொள்ளுதல். நாம் எதனை ஆழமாக மதிப்பிடுகிறோம் என்று சுதாகரிக்க வேண்டும். இது எமது திறமைகள், அறிவு, குடும்பகங்கத்தவர், நண்பர், பொழுதுபோக்கு, புகழ் வரவு, வருமானம் போன்ற பல தரவுகளைச் சார்ந்து அமையலாம். ஆயினும் நமது அடிப்படை மதிப்பீடுகள் இவற்றிற்கு முரணாக இருப்பின் , நாம் எடுத்துக் கொண்ட குறிக்கோளை அடையும் பாதை மிகவும் சிக்கலாகிவிடும்.

இதனால் தான் நாம் நமது  வாழ்க்கைக் குறிக்கோள்களைத் தெரிவு செய்தல் நாம் நினைத்ததை வெற்றிகரமாக  அடைய உதவும். அதே சமயம் மனதிற்குக் கொள்ளாதவற்றை அடையாளம் கண்டு அவற்றிலிருந்து விலகி, விரக்திகளைக் குறைத்து மனச்சாந்தியைப் பேணவும் உதவி செய்யும். -யோகி (புனிப்பூக்கள்)

 நம் வாழ்வில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளுக்கும் நாம்தான் காரணர்கள் ஆகிறோம். ஆழ்ந்து சிந்தித்து நம் வாழ்வை செதுக்கி கொள்ளும் உளிகள் நாம் என்பதால் சிக்கலின்றி சுதந்திரமாக வாழ்வோம்.

மேற்கூறிய ஒன்பது கட்டுரைகள் வௌ;வேறு காலகட்டங்களில் வௌ;வேறு இடங்களில் அவரால் மேற்கொள்ளப்பட்ட மாணவர்களுக்கான நடத்தை வழிகாட்டல்  பட்டறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் இக்கட்டுரைகளில் சிற்றிசல இடங்களில் முன்னர் கூறியவிடங்கள் தவிர்க்க முடியாதனவாகவும், தேவையானதாகவும் இடம்பெற்றுள்ளன என்பது வெளிப்படை. இதனைக் கூறியது கூறல் என்னும் விமர்சனப்பார்வையல் பார்காகமல் வாசகர்கள் அணுகலாம் என்பது எனது கருத்து. இவை அனைத்தும் மனதை வெல்ல, மனித நடத்தையைச் சீரமைக்க வழி சமைக்கும் என்னும் நம்பிக்கையை வாசகர்களிடையே விதைப்பதாக அமையும் என்பதனை நூலாசிரியர் ஜெகன் திடமாக நம்பியுள்ளார்;. ஆதன் வெளிப்பாடாகவே இந்தநூல் தோற்றம் பெற்றுள்ளது. இதனை அவரது அணிந்துரையில் காணப்படும் கருத்துக்கள் உறுதிப்படுத்தகின்றன.

1.         பொறாண்மைக்கான காரணம் என்ன?

2.         உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

3.         கனவினை நனவாக்கத் தடைகள் எவை?

4.         எமக்கள் இருக்கும்இருவரை அறிவோம்

5.         எவ்வாறு முடிவெடுப்பது?

6.         எங்கள் மனதைக் கட்டுப்படுத்துவது எப்படி?

7.         வெறுமையான மனநிலையில் இருந்து எவ்வாறு மீள்வது?

8.         எவ்வாறு விதண்டா வாதத்தை நிறுத்துவது?

9.         காரணமே இல்லாமல் கவலைப் படுகிறீர்களா?

10.       ஏன் குறுக்குவழியைத் தேடகின்றோம்?

11.       எது காதல்?

12.       எனக்குத் தெரியாது.

13.       தன்னம்பிக்கைதானாகத் தளிரும்

14.       ஒரு இரவுக்குள் சாதித்துவிட முடியுமா?

15.       எந்த உறவு நிலைத்திருக்கும்

16.       எவ்வாறு எங்கள் விருப்பங்களை அடைவது?

17.       விமர்சனங்களை எதிர்நோக்குவதற்கான திறன்

18.       பிரச்சினைகளுடன் வாழுகின்றீர்களா?

19.       வாழ்க்கையில் வெள்றி பெற்று மகிழ்வது எவ்வாறு?

20.       அமைதியினைப் பெறுவதற்கான இலகுவழி

21.       நன்மைகள் செய்வதற்குகான சந்தர்ப்பங்கள்

22.       நீங்கள் நீங்களாகவே இருங்கள்

23.       எதிர்மறை எண்ணங்களை அழிப்பது எப்படி?

24.       கடுமையாக முயற்சிப்பதைவிட அளவாக முயற்;சிங்கள்

25.       நிம்மதியை எங்கள் வசப்படுத்துவோம்

26.       கொடுப்பது சிறுது எனத் தயக்கமா?

27.       Allocate an hour to make the dream as reality

28.      The way to jump out of bed to wake up to every dawn

29.      The way of maintaining youthful

30.      The path way to experience happiness in life

31.      Be happy with those who hate you

32.      Do not keep quite when trouble hits you

33.     When your ambition is not in the leaque of your ability

 போன்ற 33 காணொளி உரைகளை அவர் நிகழ்த்தியுள்ளமை வெளிப்படை  அவற்றை அவர் இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

'தனித்து விடப்படுகின்றோம் என்று உணரும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அல்லது உங்களைச்சுற்றி எல்லாமே எதிர்மறையாகத் தோன்றுவதாய் உணரும் போதெல்லாம் இந்த நூலைப்படித்துப் பாருங்கள், உங்கள் தனிமையின் காவலனாக நிச்சயம் மாறிவிடும்' என குறிப்பிட்டுள்ளமை அவரது நோக்கத்தை வெளிப்படுத்துகின்றது. Stop saying “yes” to things to please other people.  Every time you do, you’re selling your time, your life energy, your soul.  மனதின் போக்கைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது இன்று ஒவ்வொருவரதும் உள்ளத்தில் உள்ள நிலைப்பாடு. ஜனகனை ஒத்தவராகவே ஜேம்ஸ் அல்ருச்சர் என்னும் அமெரிக்க எழுத்தாளர் ஒரு வெற்றிகரமான தொழில் முயல்வோர், செஸ் (Chess) ஆசான் அதுமட்டுமன்றி முதலீட்டாளர் அவர் இவ்விதமான பல்வேறு கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளமையை ஒப்ப நோக்கமுடிகின்றது. James Altucher is a writer, successful entrepreneur, chess master, and investor. He has founded over 20 companies and sold some of them for large exits. He has also run venture capital funds, hedge funds, angel funds, and currently sits on the boards of many companies.

He has written and been profiled in most major national media publications like the Wall Street Journal, The Financial Times, CNBC, Forbes, and Business Week. His blog, which began by detailing Altucher's precipitous fall from wealth and success to absolute rock bottom and then back to

James Altucher is a writer, successful entrepreneur, chess master, and investor.He has founded over 20 companies and sold some of them for large exits. He has also run venture capital funds, hedge funds, angel funds, and currently sits on the boards of many companies.He has written and been profiled in most major national media publications like the Wall Street Journal, The Financial Times, CNBC, Forbes, and Business Week.His blog, which began by detailing Altucher's precipitous fall from wealth and success to absolute rock bottom and then back to wealth, has attracted more than 10 million readers since its launch in 2010, and in 2011 inspired a comic book.

ஜனகனின் பின்புலத்தை நோக்கும்போது எமது சின்னஞ்சிறு நாட்டில் வெற்றிநடைபோடும் ஒது துணிவே துணை என தன்னம்பிக்கை மிக்க ஒரு சக்தி மிக்க ஆளுமையாகக் காட்சியளிக்கின்றார்.


வெளியீடு - பூவரசி


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்