நூல் :
கடவுளின் கனவு
நூல்
ஆசிரியர் :
கவிஞர்
ஏ.எஸ்.
பிரான்சிஸ்
நூல் அறிமுகம்:
கவிஞர்
இரா.
இரவி
‘கடவுளின்
கனவு’
புதுக்கவிதை
நூல்.
நூலாசிரியர்
கவிஞர்
ஏ.எஸ்.
பிரான்சிஸ்
புலம்
பெயர்ந்த
தமிழர்.
மலேசியாவில்
வாழ்ந்து
வருபவர்.
டத்தோ
டாக்டர்
லோக
பாலமுருகன்,
டத்தோ
ஸ்ரீ
சையது
இப்ராஹிம்
பின்
காதர்,
டத்தோ
ஸ்ரீ
மெக்லின்,
டத்தோ
B.சகாதேவன்,
ஓம்ஸ்
பா.தியாகராஜன்,
டத்தோ
பி.எஸ்.சாமி,
சுப.
இராஜேந்திரன்,
வித்தியாசாகர்
போன்ற
பலரும்
வாழ்த்துரை
வழங்கி
சிறப்பித்து
உள்ளனர்.
புரியாத
புதிர்
கவிதை
இல்லை,
இருண்மை
கவிதையும்
இல்லை.
படிப்பவர்களுக்கு
எளிதில்
புரியும்வண்ணம்
புதுக்கவிதைகள்
வடித்து
இருப்பது
சிறப்பு.
தூரத்து
கனவுகள்!
கடற்கரையில்
என்
காலடிகளை
அழித்து
களிப்பு
கொள்கிறது
பேரலைகள்
எனது
கோப
எதிரொலியைக்
காற்றின்
சிறகுகள்
வானின்
முகட்டுக்கு
இழுத்து
செல்கின்றன.
கடற்கரையில்
அமர்ந்து
இருக்கும்
புலம்
பெயர்ந்த
மனிதனின்
மன
ஆதங்கத்தை
இயற்கை
ரசனையுடன்
வடித்துள்ளார்.
நோயாளிகள்
மடிகளில்
குவியும்
தங்க
ரொட்டிகள்
அவர்களுக்கு
எக்காலமும்
பயன்படுவதில்லை.
நோயாளிகளுக்கு
மட்டுமல்ல
சேர்த்து
வைத்து
இருக்கும்
பணக்காரர்களுக்கு
தங்க
ரொட்டிகள்
பசி
நீக்கிடபயன்படப்
போவதில்லை!
விந்தை
மனிதர்!
ஞானம்
தேடி
வஞ்சகர்
கூட்டம்
வழி
நடக்கிறது
மோகம்
இழந்து
நடக்கும்
காலடிகளின்
கழுத்து
நிழல்
விந்தையான
ஓசை
கேட்டு
அஞ்சுகின்றது
நாவில்
படர்ந்திருக்கும்
நஞ்சு
விஷ
வார்த்தைகளைக்
கொன்றும்
துப்புகின்றது.
ஞானம்
தேடி
போலிச்சாமியார்களைத்
தஞ்சம்
அடைந்து
பிணங்களைக்
கொட்டி
ஏமாந்து
வஞ்சிக்கப்பட்டு
வருகிறது
தொடர்-கதையாகத்
தொடர்கிறது.
சாமியார்களை
நம்பி
மோசம்
போகாதீர்கள்
என
எச்சரித்து
இருப்பது
சிறப்பு.
மலர்களில்
மயக்கம்!
புரட்சிக்காரர்களின்
தலையில்
கட்டப்பட்ட
சிவப்பு
ரிப்பனைப்
போல
சிவந்து
போயிருக்கிறது
எனக்கான
காதல்!
காதல்
கவிதையில்
கூட
தனக்கு
ஈடுபாடுடைய
பொதுவுடைமை
சிந்தனையின்
குறியீடு
சிவப்பு
ரிப்பனை
உவமையாக்கியது
சிறப்பு.
போராளிகள்!
போராளிகளுக்கு
வாழ்க்கை
இனிமையான
போர்க்களம்
காடுகளில்
பசிப்புலிகளாய்
அலைந்து
திரிந்தும்
புரட்சிக்
கொள்கை
விற்று
புல்லைத்
தின்னாதவர்கள்
பூத்துவிட்ட
விடியல்
ஒளியில்
இலட்சியத்தைப்
படிப்பவர்கள்
போராளிகளின்
உடலிலிருந்து
பசி
எட்டியே
நிற்கும்
போராளிகள்
மக்கள்
விடுதலையை
உண்பவர்கள்
போராளிகள்
மக்கள்
சுதந்திரத்தை
நிதம்
சுவாசிப்பவர்கள்!
பசி
பற்றிய
கவலை
இன்றி
தன்னலம்
மறந்து
மக்கள்
நலன்
கருதி
போராடி
வரும்
போராளிகளின்
நல்
உள்ளத்தை
புதுக்கவிதையின்
மூலம்
படம்பிடித்துக்
காட்டி
உள்ளார்கள்.
ஏழையர்
சிரிப்பதற்கு
தடைபோடும்
கோழையர்கள்
பொருள்
குவித்து
உறக்கம்
துறந்தவர்கள்
விதியின்
வாலுக்கு
நெய்
அபிசேகம்
செய்பவர்கள்
வீதியிலே
நடமாட
பகலிலும்
அஞ்சும்
செல்வந்தர்களிடமிருந்து
என்ன
நன்மை
வரும்?
ஆண்டவன்
இல்லா
ஆலயங்களுக்கு
கட்டு
கட்டாய்ப்
பணம்
குவிகிறது.
பட்டினியால்
பல
பயிர்கள்
செத்து
மடிவதை
வேடிக்கை
பார்த்துவிட்டு
கோயில்
உண்டியல்களில்
பணத்தைக்
கொட்டிடும்
பக்தர்களின்
தலையில்
கொட்டும்
வண்ணம்
மனிதநேயம்
பாடி
உள்ளார்.
பாராட்டுக்கள்.
புதிய
போர்க்களம்
யாருக்கும்
தெரியாத
இரகசியங்களைத்
தன்
மடியில்
புதைந்து
வைத்திருக்கும்
இயற்கை
மனித்
விஞ்ஞானத்திற்கு
அப்பாலும்
பால்
வீதியில்
படுத்திருக்கும்
மர்ம
முடுச்சிகள்
இயற்கை
சீற்றம்
கொண்டு
வெள்ளம்,
வறட்சி,
புயல்,
சுனாமி
என்று
மிரட்டி
வருகின்றது.
இவற்றை
மர்ம
முடுச்சுகள்
என்று
குறிப்பிட்டது
சரியே!
இயற்கையை
மனிதன்
அழித்தால்
இயற்கை
மனிதனை
அழிக்கும்
என்ற
நியதியை
மனிதன்
புரிந்து
கொள்ள
வேண்டும்.
மூடத்தனம்
மனிதனை
சங்கிலிகளால்
பிணைத்திருக்கிறது.
மூடத்தனம்
அகன்றால்
சங்கிலிகள்
தெறிக்கும்!
சடங்குகளுக்குள்
சல்லாபிக்கும்
மந்தை
புத்தி
அகலும்!
ஒழுங்கு,
ஒழுங்கீனம்
எது
என
யாரறிவார்?
மனித
மனங்கள்
விழிப்புணர்ச்சி
பெறுகையில்
நன்மைச்
செயல்கள்
மழையாகப்
பொழிந்து
உலகாளும்
மனிதனுக்கு
தேவை
போதனைகள்
அல்ல
சுய
விழ்ப்புணர்ச்சி!
தந்தை
பெரியார்
வழியில்
எதைட்யும்
ஏன்?
எதற்கு?
எப்படி?
எதனால்?
எங்கு?
என
கேள்வி
கேட்டு
பகுத்தறிவுடன்
விழிப்புணர்ச்சி-யுடன்
வாழ
வழிசொல்லி
உள்ளார்.
தள்ளிப்போகும்
மரணம்
அமைதி
காக்கும்
காட்டு
மரங்கள்
இலைகளைத்
தழுவி
இன்பமூட்டும்
தென்றல்
மனிதர்களின்
சுவாசத்திற்கும்
சுக
காற்றை
மனிதமாக்கும்
சூழல்!
காதுகளுக்குப்
புதுப்புது
ராகங்களை
அறிமுகப்படுத்தும்
பூச்சிகள்
சொர்க்கம்
இங்கும்
தன்
ஆடையை
அவிழ்த்துள்ளது.
நூலாசிரியர்
கவிஞர்
ஏ.எஸ்.
பிரான்சிஸ்
அவர்கள்
இயற்கை
ரசிகராகவும்
உள்ளார்.
இயற்கையை
ரசித்து,
காற்றை
ரசித்து
கவிதைகள்
வடித்துள்ளார்.
தென்றல்
புல்லின்
மேனியை
வருடி
உல்லாசமாய்
வருகிறது
மென்தென்றல்
சூரிய
ஒளியில்
சூடுகண்ட
பூக்களும்
தென்றல்
தழுவலில்
மேனி
சிலிர்த்து
மலர்கின்றன.
இயற்கையை
வரிகளாக
வடித்து
படிக்கும்
வாசகர்களுக்கு
காட்சிப்படுத்தி
வெற்றி
பெற்றுள்ளார்.
பாராட்டுக்கள்.
asanthiah@yahoo.com
உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|