நூல் :
காதல்
வங்கி
நூல்
ஆசிரியர் :
கவிஞர்
பிச்சினிக்காடு
இளங்கோ
நூல் அறிமுகம்:
கவிஞர்
இரா.
இரவி
நூலாசிரியர்
கவிஞர்
பிச்சினிக்காடு
இளங்கோ
அவர்கள்
திருக்குறளின்
காமத்துப்பால்
என்ற
கருவூலத்திலிருந்து
நிதி
எடுத்து
காதல்
வங்கி
கொடுத்துள்ளார்.
பெயரில்
இளங்கோ
இருப்பதால்
இளங்கோவடிகள்
போலவே
திருக்குறளைக்
கையாண்டுள்ளார்.
பாராட்டுக்கள்.
பேராசிரியர்
இராம
குருநாதன்,
கவிதை
நதி
ந.வீ.விசயசாரதி
அணிந்துரை
நல்கி
சிறப்பித்து
உள்ளனர்.
திருக்குறளின்
காமத்துப்-பாலில்
அதிகாரம் 109
தொடங்கி
அதிகாரம் 133
வரை
பாடுபொருளாக
எடுத்துக்கொண்டு
இடதுபக்கம்
திருக்குறள்,
வலது
பக்கம்
வித்தியாசமான
முறையில்
புதுக்கவிதையும்
வடித்துள்ளார்.
நல்ல
முயற்சி,
புதிய
முயற்சி.
இன்றைய
காதல்
கவிஞர்கள்
அனைவருக்கும்
திருவள்ளுவர்
தான்
முன்னோடி.
அவர்
கூறியதைத்
தான்
மற்ற
கவிஞர்களும்
கூறி
வருகின்றனர்
என்பதை
புலப்படுத்தும்
விதமாக
புதுக்கவிதை
வடித்துள்ளார்.
வசீகரா
பலாச்சுளை
இதழ்களில் /
பதித்த
கண்கள்
பசி
தீர்த்து
மீளவே
இல்லை.
ஒவ்வொரு
நாளும்
/
உன்
தாஜ்மகாலைத்
தான்
படிக்கிறேன் /
நம்
சாகாக்
காதலுக்கு /
அது
தானே
சாட்சி
புதுக்கவிதைகளுக்கு
ஏற்றபடி
பொருத்தமான
ஓவியங்கள்
படிக்கும்
ஆர்வத்தை
தூண்டும்
வண்ணம்
அழகாக
உள்ளன.
பாவைக்கு
இரண்டு
பார்வை
இந்தப்
பாவையின்
கண்களுக்கு
இரண்டு
பார்வை.
ஒரு
பார்வை
/
காதலினால்
உயிர்
குடிக்கும்
நோய்ப்
பார்வை
மறு
பார்வை
/
அது
தீர்த்து /
உயிர்
தளிர்க்கும்
மருந்துப்
பார்வை!
காதல்
நோயும்
அதற்கான
மருந்தும்
பாவையின்
பார்வையில்
உள்ளன
என்று
வள்ளுவரின்
வாக்கை
வழிமொழிந்து
காதல்
ரசம்
பிழிந்து
புதுக்கவிதை
வடித்துள்ளார்.
என் /
மனமதியாளைப்
போல /
ஒத்திருக்க
உனக்கு
ஒப்பும் /
மனமென்றால்
ஊரறியா
வானில் /
உலா
வராதே!
கற்காலம் தொடங்கி கணினி காலம் வரை காதலியை நிலவோடு ஒப்பிட்டு பாடாத
கவிஞர்கள் இல்லை. காதலியை நிலவோடு ஒப்பிட்ட முதல் கவிஞர் திருவள்ளுவர்
என்பதை வெளிச்சமிடும் புதுக்கவிதை நன்று.
இந்த
இரகசியம் /
பலரும்
அறியாத
இரகசியம்
வள்ளுவர்
கேட்கிறார்
நெருப்பை
ஊற்றி /
நெருப்பை
அணைக்க
முடியுமா?
தண்ணீரை
ஊற்றி
நெருப்பை
அணைக்கலாம்.
ஆனால்
நெய்யை
ஊற்றி
நெருப்பை
அணைக்கும்
கலை
காதலில்
உண்டு
என்பதை
திருவள்ளுவர்
திருக்குறளில்
மொழிந்தார்.
அதனைக்
கவிஞர்
பிச்சாணிக்காடு
இளங்கோ
புதுக்கவிதையில்
வழிமொழிந்து
உள்ளார்.
நான்
படும்பாடு /
நானறிந்த
பாடு /
என்
பாடு
அறியாமல்
/
என்னிலை
உணராமல்
ஏளனம்
செய்வது /
எள்ளி
நகையாடுவது
அவர்
/
அறிவிலாதவர்
எனத் /
தன்னை
அறிவிப்பதாகும்.
திருவள்ளுவர்
பெண்பாலாக
மாறி
காதலியின்
உள்ளத்தை
ஏக்கத்தை
காதலியின்
மொழியாகவே
பெண்
மொழியாகவே
வடித்து
இருப்பார்.
காதலியின்
பாட்டை
உணராமல்
கேலி
செய்திடும்
காதலன்
முட்டாள்
என்றே
புதுக்கவிதையில்
கூறி
உள்ளார்.
சுடாமல்
சுடும்
நோய்
எது?
பிரிவைப்
பற்றிப்
பேசாதீர்
தயவுசெய்து
பிரிவைப்
பற்றிப்
பேசாதீர்
தாங்கும்
இதயம்
கேட்கும்
காது
எனக்கில்லை.
காதலன்
காதலி
பிரிவு
என்பது
கொடியது.
அத்தகைய
துன்பம்
தரும்
பிரிவு
பற்றிப்
பேசாதீர்.
அதனைத்
தாங்கும்
இதயமும்
இல்லை
கேட்கும்
காதும்
இல்லை
என்று
பிரிவின்
சோகத்தை
வாட்டத்தை
இன்னலை
காதல்
ரசம்
சொட்டச்
சொட்ட
காதலர்களின்
உள்ளத்து
உணர்வை
வடித்து
உள்ளார்.
நீள்
இரவு
கொடியது!
நான்
/
காம
நோயை
மறைப்பேன்
அந்நோய்
/
யாரும் /
அறியக்
கூடாத
நோய்
/
ஆகவே
/
அந்நோயை
மறைப்பேன்.
ஆனால்
கொடுமை
/
அது
/
இறைக்க
இறைக்க
ஊறும்
/
ஊற்று
நீர்
போல
பெருகும்!
காதலில்
வரும்
காம
நோயை
அது
பிறர்
அறியக்கூடாத
நோய்
என்றும்
ஊற்று
போல
ஊறிப்
பெருகும்
என்றும்
ஈராயிரம்
ஆண்டுகளுக்கு
முன்பே
காதல்நோய்
கண்டு
மருத்துவர்
திருவள்ளுவர்
என்பதை
பறைசாற்றிடும்
புதுக்கவிதை
நன்று.
கண்களுக்கு
அவசர்மேன்?
கண்கள்
தாம்
/
கண்டன
அவரை
/
கண்களால்
தான்
/
நானும்
கண்டேன்
அவரை
/
அதனால்
தான்
எனக்கு
இத்தீர
நோய்
/
தீராக்
காம
நோய்
தீயில்
இருப்பது
நான்
/
தீர்வின்றித்
தவிப்பது
நான்
/
துடிப்பது
நான்
/
துவள்வது
நான்.
கம்ப
இராமாயணத்தில்
வரும்
புகழ்பெற்ற
வரிகளான
அவளும்
நோக்கினாள்
அண்ணலும்
நோக்கினாள்
இதற்கு
எல்லாம்
மூலம்
நமது
திருக்குறளே. ‘கண்ணும்
கண்ணும்
கொள்ளையடித்தால்
காதல்
என்று
அர்த்தம்’
என்ற
கவிப்பேரரசு
வைரமுத்துவின்
வைர
வரிகளுக்கும்
மூலம்
என்பது
உலகப்பொதுமறையான
திருக்குறளின்
காமத்துப்
பாலே.
காமத்துப்பாலில்
உள்ள
காதல்
ரசத்தைப்
பிழிந்து
புதுக்கவிதைகளாக
வடித்திட்ட
கவிஞர்
பிச்சினிக்காடு
இளங்கோ
அவர்களுக்கு
பாராட்டுக்கள்.
வெளியீடு :
டிஸ்கவரி
புக்
பேலஸ்,
6,
மகாவீர்
காம்ப்ளக்ஸ்,
முதல்
தளம்,
முனுசாமி
சாலை,
மேற்கு
கே.கே.
நகர்,
சென்னை – 78.
பக்கங்கள் : 184,
விலை :
ரூ.
160
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|