ஜல்லிக்கட்டு தடை அவசியமா?


அகில்


மிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று ஜல்லிக்கட்டு. சிலப்பதிகாரம், கலித்தொகை, மலைபடுகடாம் போன்ற சங்கநூல்களில் ஜல்லிக்கட்டு பற்றிவிரிவாக எடுத்தியம்பப்படுகிறது. சிந்து வெளிநாகரிகத்திலும் ஜல்லிக்கட்டு இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இது வெறுமனே விளையாட்டாக மட்டுமல்லாமல் தமிழர்களின் வீரத்தையும், பண்பாட்டையும் பறைசாற்றும் ஒரு நிகழ்வாகவும் கருதப்படுகிறது.

ஈழத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடாத்தப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் பொங்கல் தினத்தையொட்டி மாட்டுவண்டிச் சவாரி நடாத்தப்படுவதுண்டு.

தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பொங்கல்ப் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி ஆண்டாண்டு காலமாக நடந்தப்பட்டு வந்தன.


இந்தப் போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக விலங்குகள் நலவாரியத்தினர் புகார் கூறியதோடு, சுப்ரீம் கோட்டிலும் வழக்குத் தொடுத்திருந்தனர். இதன்தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டுபோட்டிகள் நடத்த சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. இதனால் கடந்த ஆண்டு இந்த போட்டிகள் நடைபெறவில்லை.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துமுகமாக தமிழக அரசும், ஏனைய கட்சித் தலைவர்களும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குமாறு மத்திய அரசை வற்புறுத்தினார்கள். அனுமதியும் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு ஆர்வலர்களை இந்த அறிவிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து ஜல்லிக்கட்டை நடத்துவற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவந்தன. இந்தநேரத்தில் மீண்டும் இந்நிகழ்வை நடத்தக்கூடாது என்று தடை உத்தரவு வந்திருக்கிறது. இப்பொழுது இந்த அறிவிப்புக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

தமிழர்களின் வீரத்தைபறைசாற்றும் இந்தவிளையாட்டின் விளைவுகளை எம்மில் எத்தனைபோர் சிந்தித்திருக்கின்றோம். காளைகள் துன்புறுத்தப்படுவது மட்டுமல்லாமல் பலமனிதஉயிர்களும் அவ்வவ்போது காவு கொள்ளப்படுகின்றன.

என்னைப் பொறுத்தவரை ஜல்லிக்கட்டை நிரந்தரமாக தடைசெய்யவேண்டும் என்றே கூறுவேன்.

 



மாட்டுவண்டிச்சவாரி

ஈழத்தில் தொன்றுதொட்டு பல இடங்களில் மாட்டுவண்டிச் சவாரி என்னும் போட்டி நிகழ்வு நடாத்தப்பட்டுவருகிறது. இன்று யுத்தத்தின் காரணமாக பெருமளவுக்குக் குறைவடைந்துள்ளது. எனது ஊரான சரவணையில் ஆண்டுதோறும் பொங்கல் தினத்தையொட்டி மாட்டுவண்டிச் சவாரி நடத்தப்படுவது வழக்கம்.

இந்த நிகழ்வில் ஐம்பதுக்கும் மேற்பட்ட போட்டியளர்கள் கலந்துகொள்வார்கள். எனது தந்தையும் மிகுந்த உத்வேகத்தோடு தவறாமல் ஆண்டுதோறும் மாட்டுவண்டிச் சவாரியில் பங்குகொள்வார். இதற்கென்றே இந்தியாவிலிருந்து அதிகவிலைக்கு நல்ல காளைமாடுகளை இறக்குமதிசெய்துகளமிறக்குவார்.

இந்தப் போட்டியின்போது காளைகள் வேகமாக ஓடவேண்டும் என்பதற்காக ஒன்றரைஅடி நீளமான இரும்புக் கம்பியொன்றினால் அவ்வப்போது குத்துவார்கள். இந்தச் சம்பவங்களை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். இன்று எமது ஊரில் போட்டி நடைபெறுவதும் இல்லை. எனது அப்பாவும் உயிரோடு இல்லை.

 



ஜல்லிக்கட்டு – மாட்டுவண்டிசவாரி

ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி சவார ஆகிய இரண்டு போட்டிகளும் நிரந்தரமாக நிறுத்தபடவேண்டும் என்பதே எனது ஆசை. பகுத்தறிவு மிக்க எந்தமனிதனும் இந்தச் செயல்களைவிரும்பமாட்டார்கள்.

இந்தியாவில் அரசியல்வாதிகள் ஆளுக்கு ஆள் வாக்குவாங்கும் நோக்கிலேயே ஆதரவாக கருத்துதெரிவித்து வருகின்றார்கள். மனிதநேயத்தோடு சிந்திப்பதாக தெரியவில்லை.

தமிழர் பண்பாடு, கலாச்சாரம் பற்றிதொண்டைகிழியக் கத்தும் பலரும் முதலில் தம்மை திருத்திக்கொள்ள வேண்டும். தமது நடை, உடை, பாவனை அனைத்தையும் மேலைத்தேய நாகரிகத்திற்கு விட்டுக்கொடுத்துவிட்டு இந்த வாயில்லா   ஜீவன்களை வருத்துவதைமட்டும் தமிழர் பண்பாடுநாகரீகம் கருதிவிட்டுக்கொடுக்கமாட்டார்களாம். முதலில் அவர்கள் பேச்சில் நல்லதமிழ் ஒலிக்கட்டும். உடையில் தமிழ் பண்பாடு மிளிரட்டும். பிறகுஅவர்கள் தமிழ் பண்பாடு நாகரிகம் பற்றிபேசினால் தவறொன்றும் இல்லை. பாவம் இந்தவாயில்லா ஜீவன் என்ன செய்யும்???

 

மாட்டுவண்டிச் சவாரி - நீர்வேலி, யாழ்ப்பாணம்

 

ஜல்லிக்கட்டு - 2014