ருத்திரமாதேவி (திரை விமர்சனம்)

ஞா.ஆரணி


னுஷ்கா நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளிவந்த படம்தான் ருத்திரமாதேவி. பல நூற்றாண்டுகளுக்கு முன் காகதீசதேசத்தை ஆண்டகணபதிதேவருக்கு ஒரு பெரியபிரச்சினை இருந்தது. அவரதுநாட்டை சூழ்ந்துள்ள பல நாடுகளில் எதிரிகள் அவரது நாட்டைதாக்கக் காத்திருந்தனர். அவருக்கு மகன் பிறக்காவிட்டால், அவருடைய நாட்டுமக்கள் மனத்தைரியம் இழந்துவிடுவர். இதை சந்தர்ப்பமாகபாவித்து அயல் நாடுகள் சந்தர்ப்பமாக பாவித்து அயல் நாடுகள் போர் தொடுப்பார்கள். அவரதுநாடும் தோற்றுமற்றவர்கள் கையிற்கு போய்விடும்.


இப்படி சூழ்நிலை இருக்கையில், கணபதிதேவருக்கு ஒரு பெண் குழந்தைபிறக்கிறது. நாட்டு நிலைமையை யோசித்து இக்குழந்தைக்கு 'ருத்திரதேவன்' என பெயரிட்டு தனக்குமகன் பிறந்துள்ளது என அறிவித்து அப்பிள்ளையை ஆண் பிள்ளையாக வளர்க்கிறார். இளவரசனுக்குதான் உண்மையில் ஒருபெண் என்பதை வளர்ந்து படிப்பை முடித்து வரும்போதுதான் தெரியவருகிறது. நாட்டைக்காக்கவே தந்தை இவ்வாறு செய்தார் என்று உணர்ந்து, ருத்திரமாதேவி (அனுஷ்கா) ருத்திரதேவன் என்றபெயருடன் இளவரசனாகவே வாழ்கிறார்.


பெண்ணாக வாழ ஆசைப்படும் அவர் சிலநேரம் மறைந்துபெண் உருவில் பொழுது போக்குகிறார். இவ்வாறுவெளி; உலகில் ஆணாகவும் மறைவில் பெண்ணாகவும் வாழும் அவருக்கு பல தடைகள் எழுகின்றன. ருத்திரமாதேவிக்கு அவரது பெண் உருவம் மேல் அவரது நண்பன் காதல் கொள்வதும், இளவரனாக இருக்கும் அவருக்கு திருமணம் பேசப்படுவதும், உள் நாட்டு சதிகள் தோன்றுவதும், மற்றநாடுகளுடன் போர் தொடங்குவது போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன. இதற்குமேல், எத்தனை நாட்களுக்கு ருத்திரமாதேவியின் ரகசியத்தை காக்கமுடியும்? இளவரசன் உண்மையில் இளவரசி என்று அனைவருக்கும் தெரிந்தால் என்னநடக்கும்? இதுபோன்ற கேள்விகளுக்கு விடையை படத்தை பார்த்து அறியுங்கள். இப்பொழுது நாம் உண்மையில் வாழ்ந்த ராணி ருத்திரமாதேவியைப் பற்றிபார்ப்போம்.


1245 இல் காகதீய அரசனுக்கு பிறந்த ருத்திரமாதேவி ருத்திரதேவன் என்ற ஆண் பெயருடன் வாழ்ந்தார். அவரது தந்தை கணபதிதேவர் காகதீய நாட்டை வாரங்கல் என்ற நகரில் அரசு அமைத்து ஆண்டுவந்தார். 1259 இல் இருந்துஅவர் தனதுதந்தையுடன் சேர்ந்துநாட்டைஅரசாளத் தொடங்கினார். பின்னர் 1263 இல் இருந்துதன் நாட்டின் ராணியாகி அரசாளும் பொறுப்பை ருத்திரமாதேவி ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் அவருக்கு பட்டாபிஷேகம் நடந்தது.


பலர் ஒரு நாட்டை பெண் அரசாளுவதை எதிர்த்தனர். இதை சாட்டாக வைத்து போர்கள் தொடங்கின. படத்தில் வருவதுபோலராணிருத்திரமாதேவிக்குபலர் தடங்கலாக அமைகின்றனர். அவர்களை எல்லாம் வென்று ராணிநாட்டை அரசு புரிந்தார். அவருக்கு துணையாக ஒரு மந்திரியும், அவருடைய நண்பன் கோணகண்ணாரட்டியும்,நண்பனின் மனைவியும் இருந்தனர். இவர்களை படத்திலும் காணலாம். உண்மையான ருத்திரமாதேவி ஓர் இளவரசனை மணந்து ஒருபிள்ளைகளைப் பெற்றார்.


அனுஷ்காவின் ருத்திரமாதேவி நடிப்பை படத்தை பார்த்து அறியுங்கள். இவ்வாறான கதைகளுடைய படங்கள் அனுஷ்கா போன்ற சிறந்த நடிகைகளின் திறமைகளை வெளிக்காட்ட சந்தர்ப்பங்களை தருகின்றன. அவரது உயரம், திறமை, ஆளுமை போன்றராணியின் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டுகிறது.

 

 



 

asgnanam@gmail.com