புலி (திரை விமர்சனம்)

ஞா.ஆரணி


ண்மையில் விஜய் நடிப்பில் வெளிவந்தபடம்தான் புலி. அவருடன் சுருதி ஹாசன், ஹன்சிகாமற்றும் ஸ்ரீதேவிஆகியோர் நடித்திருக்கின்றனர்.

குழந்தை ஒன்றுபெட்டியில் ஆற்றில் மிதந்துவருகிறது. அதைஒருவர் தூக்கிமருதீரன் என்று பெயரை வைத்து, வளர்க்கின்றார். அவர்கள் வேதாளநாட்டைசேர்ந்தவர்கள். மொத்தமாக
56 கிராமங்களை சேர்த்து ஆளப்படும் நாடுதான் வேதாளநாடு. வெளிநாட்டில் இருந்து வந்தவேதாள இனத்தவர்கள் தங்களுடைய Superpower’களை பயன்படுத்தித்தான் இந்தநாட்டவர்களை ஆக்கிரமித்து ஆள்கின்றனர். இவர்களது ராணிதான் யவனராணி (ஸ்ரீதேவி).


மருதீரன் (விஜய்) காலிக்கும் பவளமல்லி (சுருதி)யை வேதாளங்கள் கடத்துகின்றனர். அவளைகாப்பாற்றவும், தன் நாட்டவர்களை வேதாளங்களின் துன்பங்களில் இருந்து காப்பாற்றவும் மருதீரன் வேதாளகோட்டைக்கு ஒருபெரும் பயணமாகசெல்கிறான். அவருக்குத் துணையாக பல விதமானவர்கள் வருகின்றனர்.


மருதீரன் எவ்வாறு பவளமல்லியை காப்பாற்றுகிறார்? அவர் யார்? அவருடைய பெற்றோர் யார்? அவரைஅற்றில் விட்டதுயார்? எனஎழும் கேள்விகளுக்கு விடையை படத்தைப் பார்த்துஅறியலாம்.


இனிபடத்தைப்பற்றி கொஞ்சம் பார்ப்போம். புலி முழுக்க முழுக்க ஒரு
Fantasy படம். அதாவது கதாநாயன் ஒரு வில்லனை ஒழிக்க ஒரு பெரும் பயணத்தை மேற்கொள்கிறான். அத்துடன் கதாநாயகன் பலமிருக, மனித இனங்களை சந்திக்கிறான். முக்கியமாக,>‘Science Fiction’படங்கள் எல்லாம்>‘Science’மூலம் விளங்கப்படுத்துவது போல் Fantasy படங்களில் ‘Magic’ தான் எல்லாத்திற்கும் காரணம். பொதுவாக Fantasy யில் கதாநாயகன் தீயவரை ஒழிக்கவோ யாரை யாவது காப்பாற்றவோ முயற்றி செய்வார். புலிப்படத்திற்கும் இதெல்லாம் பொருந்தும்.


உதாரணத்திற்கு
CGI (Computer Generated Images) தொழில்நுட்பம் மூலம் பறவை,சிறுத்தை,பெரிய ஆமை வருகின்றன. சித்திரகுள்ளரும் இப்படத்தில் வருகின்றனர். அத்துடன் வேதாளங்கள் எல்லாம் பறக்கின்றனர்,வித்தைகள் (Magic) செய்கின்றனர். ஆங்கில Fantasy கதைகளில் காணும் பலவிடயங்கள் புலியில் காணப்படுகின்றன.


தமிழ் படங்களின் கதைகளில் ஒற்றுமைகள் காணப்பட்டாலும் கதைசொல்லும் விதங்கள் மாறுகின்றன. உதாரணமாக 'கோட்சடையான்'
Motion Capture  படமாகவும், 'இன்று நேற்று நாளை' 'Science Fiction’ படமாகவும், 'பாகுபலி' பிரமாண்டமான படமாகவும் வர இப்பொழுது 'புலி' Fantasy படமாக எடுக்கப்பட்டு வந்துள்ளது. தமிழில் Fantasy படம், அத்துடன் பெரியவிதத்தில் பொதுமக்கள் பார்க்கக்கூடிய முறையில், வருவது மிகவும் குறைவு. அத்தோடு புலியின் காட்சிகளும் நன்றாக அமைந்துள்ளன மற்றும் எடுக்கப்பட்டுள்ளன.


பிள்ளைகளுக்கு கட்டாயம் இப்படம் பிடித்துவிடும். பெற்றோர்கள் தமது அவநம்பிக்கையை விட்டுவிட்டு பார்த்து இரசித்தால் நன்றாக இருக்கும்.

 

 


 

 


 

asgnanam@gmail.com