காக்கா முட்டை (திரை விமர்சனம்)

ஞா.ஆரணி


சென்ற வருடம் Toronto Tiff நிகழ்வில் வெளியிடப்பட்டு, இவ்வருடம் பொதுமக்களுக்காக வெளியிடப்பட்ட படம் காக்காமுட்டை. இந்தியாவில் சில விருதுகள் பெற்றது இப்படம். இரு சிறுவர்களை முக்கிய கதாபாத்திரங்களாக கொண்டு கருத்தும்,பொழுதுபோக்க அம்சங்களும் கலந்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

முட்டை வாங்கி சாம்பிடபணம் இல்லாததால் மரத்தில் ஏறிகாகத்தின் முட்டைகளை எடுத்து குடிப்பதால் சின்னகாக்கா முட்டை, பெரியகாக்கா முட்டைஎன இவ் இரு சிறுவர்களும் அழைக்கப்படுகிறார்கள்.இருவரும் தாயுடனும், பாட்டியுடனும் வாழ்கிறார்கள். ஏழையாக இருந்தாலும் அவர்களுக்குஆசைகள் நிறையஉண்டு. தந்தை சிறையில் இருப்பதால் இருவரும் கரிசேகரித்துவிற்றுபணம் சேர்க்கின்றனர்.

இவ் ஏழைகள் வாழும் இடத்திற்கருகே ஒரு புதிய
Pizza கடை திறக்கப்படுகிறது. அதைக் கண்டவுடன் இரு பிள்ளைகளுக்கும் Pizza வை ஒரு முறைவாங்கி உண்டுபார்க்க ஆசைப்படுகிறார்கள். இவர்களதுஆசையை TV யில் வரும் விளம்பரம் தூண்டுகிறது.

நாலு துண்டுகளைக் கொண்ட ஒருசிறிய
Pizza 300ரூபாய். ஆதைவாங்க ஒரு மாதம் வேலை செய்ய வேண்டும். Pizza கடை புதியது.வசதியானவர்கள் மட்டுமே உள்ளே செல்ல முடியும். அதற்கு புதிய உடைவேண்டும். அதற்கும் பணம் தேவை. இதை சம்பாதிக்க கடுமையாக உழைக்க வேண்டும்.

பணத்தைஎப்படி இருவரும் சேகரிக்கிறார்கள்?
Pizzaவை வாங்குவார்களா? இந்தசிறுவர்கள் எவ்வாறு TVயில் பிரபல்யமாகிறார்கள்? இந்தகேள்விகளின் பதிலைபடத்தைபார்த்துஅறியுங்கள்.

இரு சிறுவர்களும் கஷ்டப்பட்டுவேலைசெய்துதான் சம்பாதிக்கின்றனர். தந்தையை சிறையில் இருந்து விடுவிக்கதாய் பணம் சேர்ப்பதாலும்,
Pizza வின் விலைஅதிகம் என்பதாலும் நெடுங்காலம் வேலைசெய்துகாசை சேர்க்கின்றனர். ஒருபோதும் மற்றவரின் பணத்தைத் திருட முயற்சிக்கவில்லை. காகத்தில் கூட்டிலிலிருந்து முட்டைகள் எடுக்கும்போது, இரண்டு தனக்கும் தம்பிக்கும் எனவும் மிச்சம் இருந்த ஒரு முட்டை காகத்திற்கும் என கூறும்போது அவர்களது நேர்மையும்,பேராசை இன்மையும் தெரிகிறது.

அத்துடன் குறுக்குவழியில்
Pizza வைசாம்பிடவிரும்பவில்லை. நண்பரான பணக்காரப்பிள்ளை இவர்களை மதிக்காமல் தான் சாப்பிட்ட மிச்சமான Pizza வை தரமுற்பட,அது எச்சில் துண்டு எங்களுக்கு வேண்டாம். நாங்கள் சம்பாதித்து சாப்பிடுவோம் எனஉறுதியுடன் இருக்கிறார்கள். Tiffஇல் முதல் முறையாக தமிழ் இயக்குனரால் எடுக்கப்பட்டு காட்டப்பட்டதமிழ் படம் இதுவாகும்.

பொதுவாக விருதிற்கு தெரிவு செய்யப்படுகின்ற படங்களில் நல்ல கருத்து இருக்கும் ஆனால் மற்றப் படங்களை விட மெதுவாகச் செல்லும். ஏழை பணக்காரனுக்கு இடையே இருக்கும் வித்தியாசத்தைப்பற்றிக் கூறும் படங்கள் பெரும்பாலும் சோகமாகவே இருக்கும். காக்காமுட்டை இப்படி இல்லாமல் நல்லகருத்துடனும் எல்லோரும் பார்க்கக் கூடியதாகவும் இருக்கிறது. ஏழையாக இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் விடாமல் முயற்சிசெய்தால் விரும்பியதைசிறுவர்கள் சாதிக்கலாம்.

 

 

 

 

 

 

 

asgnanam@gmail.com