பொழுதும்
போதும்
கி.வா.ஜகந்நாதன்
தமிழர்,
காலத்தைச்
சிறுபொழுது
பெரும்
பொழுது
என்று
இரண்டு
பிரிவாகப்
பிரித்தனர்.
அவற்றுள்
சிறுபொழுது
ஆறு;
பெரும்பொழுது
ஆறு.
சிறுபொழுது
ஐந்தென்பது
ஒரு
சாரார்
கொள்கை.
வைகறை,
காலை,
நண்பகல்,
எற்பாடு,
மாலை,
யாமம்
என்னும்
ஆறும்
சிறுபொழுதுகளாம்.
இவை
ஒவ்வொன்றும்
பப்பத்து
நாழிகைகளை
உடை
யன.
பெரும்பொழுதை
இருதுவென்று
கூறுவர்
வட
நூலார்.
அவை
கார்,
கூதிர்,
முன்பனி,
பின்பனி,
இளவேனில்,
முதுவேனில்
என்பன.
இவை
முறையே
ஆவணி
முதலாக
இரண்டு
இரண்டு
மாதங்களை
உடையன.
தமிழ்
அகப்பொருள்
இலக்கணத்தில்
இந்தப்
பொழுதுகளுள்
இன்ன
இன்னவை,
இன்ன
இன்ன
திணையைச்
சார்ந்தன
என்ற
வரையறை
சொல்லப்
பெறும்.
முதல்,
கரு,
உரி
என்னும்
மூவகைப்
பொருள்களில்
இவை
முதற்பொருளைச்
சாரும்.
பொழுதை
அளந்தறிவதற்குப்
பண்டைத்
தமிழர்கள்
'கன்னல்'
என்ற
ஒரு
கருவியைத்
துணையாகக்
கொண்டனர்.
நீர்
நிறைந்த
பாத்திரத்தின்
அடியிலே
சிறு
துவாரமிட்டு
அதன்
வழியே
ஒரு
பெற்றிப்
படத்
துளிக்கும்
நீரைக்கொண்டு
நாழிகையை
அறிந்தனர்;
சிறுசிறு
துளியாக
வரும்
அமைப்பை
உடையதாதலின்
அந்த
இயந்திரம்
குறுநீர்க்
கன்னல்
என்றும்
கூறப்படும்,
நாழிகை
வட்டில்
என்னும்
பெயரும்
அதற்கு
உண்டு.
இக்
கருவியைக்
கொண்டு
நாழிகையை
அறிந்து
கூறுவதற்கென்று
அரசர்களூடைய
அரண்மனையில்
நாழிகைக்
கணக்கர்
என்னும்
ஒருவகை
ஊழியர்
இருந்து
வந்தனர்,
பொழுதளந்து
அறியும்
பொய்யா
மாக்கன்
தொழுதுகாண்
கையர்
தோன்ற
வாழ்த்தி
எறிநீர்
வையகம்
வெலீஇய
செல்வோய்நின்
குறுநீர்க்
கன்னல்
இனைத்தென்று
இசைப்ப
(முல்லைப்
பாட்டு)
என்பதைக்
காண்க.
நீர்க்கன்னலைப்
போல
மணல்
இட்டு
வைத்த
வட்டிலாலும்
காலத்தை
அறியும்
வழக்கம்
இருந்தது.
இவற்றை
யன்றி
வேறு
வகையான
நுண்ணிய
கருவிகளும்
அக்
காலத்தில்
இருந்தன
என்று
தெரியவருகின்றது.
பெருங்கதையில்
காலேந்திரம் ,
கடிகையாரம்
என்னும்
இரண்டு
கருவிகள்
சொல்லப்
படுகின்றன.
அவற்றுள்
பின்னதாகிய
கடிகையாரம்
இக்
காலத்துக்
கடிகாரத்தைப்
போன்றதொரு
கருவியாக
இருத்தலும்
கூடும்.
-----------
*
பொழுது
அளந்து
அறியும்
பொய்
பேசாத
வேலைக்காரர்கள்
அரசனைத்
தொழுது
காணும்
கையை
உடையவர்களாய்
வெளிப்படையாக
வாழ்த்தி,
அலை
வீசுகின்ற
நீரை
எல்லையாக
உடைய
உலகத்தை
வெல்லும்
பொருட்டுச்
செல்லும்
மன்னர்பிரானே,
நீ
செல்வதற்கு
ஏற்றதென்று
குறு
நீர்க்
கன்னல்
சொல்லும்
காலம்
இன்ன
அளவுடையது
(இத்தனை
நாழிகை
) என்று
கூற.
மேலே
கூறியவை
யாவும்
செயற்கைக்
கருவிகள்,
காலத்தை
அறிவதற்கு
இயற்கையிலேயே
பல
கருவிகள்
அமைந்துள்ளன.
யாமந்தோறும்
பொழுதை
அறிவிக்கும்
யாமக்
கோழியும்,
விடியற்
காலத்திற்
கரையும்
காக்கையும்
ஒரு
வகையாகப்
பொழுதைப்
புலப்படுத்துகின்றன.
இவை
யாவற்றினும்
சிறந்
தவை
மலர்கள்.
மலர்கள்
தத்தமக்கு
ஏற்ற
போதிலே
மலர்தலையும்
குவிதலையும்
உடையன:
அதனாலன்றோ,
'பொழுதின்
முகமலர்
வுடையது
பூவே'
என்ற
சூத்திரம்
எழுந்தது?
இயற்கைப்
பூம்பொழில்
எப்பொழுதும்
மலர்ச்
சியை
உடையது.
பகலிலே
சில
மலர்கள்
மலர்
கின்றன;
இரவில்
அவை
குவிந்து
விட்டால்,
வேறு
பல
மலர்கள்
மலர்ந்து
தம்
மணத்தைப்
பரப்புகின்றன.
இவற்றால்
எப்பொழுதும்
நிலமகள்
பூமகளாகவே
விளங்குகின்றனள்.
மரநூல்
வல்ல
கலைஞர்
மலர்கள்
தத்தமக்கென
வரையறையுள்ள
ஒரு
காலத்தில்
மலர்வதிலும்
அவ்
வாறே
குவிவதிலும்
தவறுவது
இல்லை
யென்று
கூறு
கின்றனர்;
ஒரு
நாளில்
இன்ன
இன்ன
போதில்
இன்ன
இன்ன
மலர்
மலருமென்ற
கணக்கையும்
அறிந்திருக்கின்றனர்.
இங்ஙனம்
அறிந்த
பல
மலர்
களின்
தொகுதியைக்
கொண்டு
மேல்நாட்டுத்
தாவர
சாஸ்திர
வல்லுநராகிய 'லின்னாய்ஸ்'(Linnaeus)
என்
பவர்
ஒரு
மலர்க்
கடிகாரத்தை
அறிவித்திருக்கிறார்.
அக்கடிகாரம்
ஒவ்வொரு
மணியிலும்
மலரும்
ஒவ்
வொரு
மலரை
உடையது.
இத்துறையில்
ஆராய்ந்த
வேறோர்
அறிஞர்
பாரத
நாட்டில்
மலரும்
மலர்களுள்
ஒவ்வொரு
மணியிலும்
மலர்கின்ற
பல
மலர்களின்
பெயர்களைத்
தொகுத்து
ஓர்
ஆங்கிலப்
பத்திரிகையில்
பல
ஆண்டுகளுக்கு
முன்
எழுதியுள்ளார்.
அவர்
குறித்த
மலர்களுள்
நாம்
அறிந்த
சில
மலர்களும்
அவற்றிற்குரிய
காலமும்
வருமாறு:
(Parijatha or Nectanthis Tristis)
மலர்
மலரும்
நேரம்
1.
தாமரை
சூரிய
உதய
காலம்
2.
சண்பகம்
காலை 6-7
மணிக்கு
இடையில்
3.
வாழைப்பூ
மாலை 5-6
மணிக்கு
இடையில்
4.
பவழமல்லிகை
மாலை
6-7
மணிக்கு
இடையில்
5.
மல்லிகை
இரவு 7-8
மணிக்கு
இடையில்.
மேலே
கண்ட
உண்மையைத்
தமிழர்
பண்டைக்
காலத்தில்
மிக
நுணுகி
ஆராய்ந்து
அறிந்திருந்தனர்.
தமிழ்
நூல்களை
ஆராய்ந்தால்
மலர்களால்
மக்கல்
போதை
அறிந்து
கொண்டமைக்குச்
சான்றாகப்
பல
செய்திகளைக்
காணலாம்.
சிறு
பொழுதுக்குரிய
மலர்
களைப்
போலவே
பெரும்
பொழுதுக்கு
உரிய
மலர்கள்
இன்னவை
யென்ற
வரையரையும்
உண்டு.
இப்படிப்
போதை
அறிவதற்கு
உரியதாக
இருப்பதனால்தான்
மலரும்
பருவத்துள்ள
பேரரும்பைப்
போது
என்று
வழங்கினார்கள்;
பெரும்
பொழுதை
அறிவிக்கும்
காரணத்தால்
மலருக்கு
நாள்
என்ற
ஒரு
பெயரும்
உண்டாயிற்று.
கதிரவனும்
திங்களும்
மேகம்
முதலிய
வற்றால்
மறைந்த
காலத்திலும்,
நாழிகைக்
கணக்கர்
அயர்ந்த
காலத்திலும்
இப்
போதுகள்
போதைத்
தம்
மலர்ச்சியினால்
அறிவிப்பதினின்றும்
பிறழ்வதில்லை.
----------
* See 'The Floral Clock' by S.N.K in the Benares
Central Hindu College Magazine Decembe, 1908
ஐப்பசி
கார்த்திகை
மாதமாகிய
கூதிர்ப்
பருவத்தில்
மழையும்
குளிரும்
மனிதனை
வெளியிலே
புறப்பட
வொட்டாமற்
செய்கின்றன;
வானம்
முழுதும்
மேகப்
படலங்கள்
நிறைந்துள்ளன;
சூரியனுடைய
தரிசனம்
கிடைப்பது
மிக
அரிதாக
இருக்கிறது.
வீட்டிலே
உள்ள
மகளிர்
மாலைக்
காலத்தில்
விளக்கேற்றுதல்
வழக்கம்.
திருமகள்
விலாசத்தைத்
தருவதற்
கேற்ற
அக்
கடமையை
அவர்கள்
குறைவின்றிச்
செய்வார்
கள்.
மாலைக்
காலம்
வந்ததும்
வராததும்
அவர்களுக்கு
எப்படித்
தெரியும்?
கடிகாரமா
வீடு
தோறும்
இருக்
கிறது?
சிறிது
நேரத்துக்கு
முன்
அவர்கள்
தம்
வீட்டிற்கு
அயலிலுள்ள
பிச்சியின்
அரும்புகளைப்
பறித்துப்
பூந்தட்டிலே
இட்டு
வைத்திருக்கிறார்கள்.
அவை
திடீரென்று
மலர்ந்து
மணங்
கமழ்கின்றன!
அது
கண்ட
மகளிர்,
'ஆ!
மாலைக்காலம்
வந்து
விட்டது!'
என்ற
மகிழ்ச்சியுடன்
திருவிளக்கேற்றித்
தெய்வம்
தொழுகின்றனர்.
இந்தக்
காட்சியையே
நெடுநல்வாடை,
மடவரல்
மகளிர்
பிடகைப்
பெய்த
செவ்வி
அரும்பின்
பைங்காற்
பித்திகத்து
அவ்விதழ்
அவிழ்பதம்
கமழப்
பொழுதறிந்து
இரும்புசெய்
விளக்கின்
ஈர்த்திரிக்
கொளீஇ
நெல்லும்
மலரும்
தூஉய்க்கை
தொழுது
மல்லல்
ஆவணம்
மாலை
அயர*
*மென்மையை
உடைய
பெண்கள்
பூத்தட்டிலே
வைத்த,
பக்கு
வத்தை
உடைய
அரும்பையுடைய
பசிய
காம்பை
உடைய
பிச்சியின்
அழகிய
இதழ்கள்
மலரும்
பருவத்திலே
மணம்
வீச,
அதனால்
பொழுதை
உணர்ந்து,
இரும்பினால்
செய்த
விளக்கில்
எண்ணெயால்
ஈரமான
திரி
யைக்
கொளுத்தி,
நெல்லும்
மலரும்
தூவிக்
கைதொழுது
வணங்கி,
வளப்பம்
மிக்க
மடைவீதி
மாலைப்
பொழுதைக்
கொண்டாட,
என்ற
பகுதியால்
நமக்குக்
காட்டுகின்றது.
பிச்சிப்
போது
மாலைப்
போதை
அறிவிக்கும்
கடிகாரமாக
உதவுதலை
இந்த
நிகழ்ச்சியால்
அறிகின்றோம்.
போது
தெரி
யாமையிற்
குமுதமொடு
சதவிதழ்ப்
போதுமே
இருபோதையும்
தெரிக்கும்
தடம்பனை
உடுத்ததமிழ்
வேளூர்
(முத்துக்குமாரசாமி
பிள்ளைத்தமிழ்)
என்பதில்
போது
போதைத்
தெரிவிக்குந்
தன்மை
எவ்வளவு
அழகாகக்
கூறப்படுகின்றது!
தமிழ்
நூல்களில்
கண்ட
மலர்க்
கடிகாரத்தை
ஆராய்கையில்
தாமரை
மலர்
தன்
நாயகனாகிய
கதிரவன்
எழும்போது
தன்
இதழ்க்
கதவம்
திறப்பதைக்
காண்கிறோம்.
நெய்தற்பூ
வைகறையிலே
மலர்கின்றது."வைகறை
கட்கமழ்
நெய்தல்
ஊதி"
என்பது
திருமுருகாற்றுப்படை.
கதிரவன்
செல்லும்
திசையையே
நோக்கி
நிற்கும்
சூரிய
காந்தியை
நாம்
அறிவோம்;
அதைப்
போன்ற
மற்றொரு
சிறு
மலரும்
இருப்பதைத்
தமிழ்
இலக்கியங்களிற்
காணலாம்.
பலர்
தினந்தோறும்
நெருஞ்சி
மலரைப்
பார்க்கின்றனர்;
காலால்
மிதித்தும்
செல்கின்றனர்;
ஆனால்
அது
கதிரவன்
உள்ள
திசையை
நோக்கியே
தன்
இதழ்களை
விரித்து
நிற்குமென்பதை
அறிபவர்
அரியர்;
நெருஞ்சிப்பாலை
வான்பூ
ஏர்தரு
சுடரி
னெதிர்தந்
தாங்கு
(புறநானூறு)
சுடரொடு
திரிதரும்
நெருஞ்சி
(அகநானூறு)
என்பவை
இவ்வுண்மையை
நமக்குத்
தெரிவிக்கின்றன.
பகற்போது
இவை,
இராப்போது
இவையென்
னும்
வரையறையைத்
தமிழ்ப்
புலவர்
நன்கறிந்து
கூறியுள்ளனர்.
அந்திக்காலத்தில்
மலரும்
ஒருவகை
மலர்
அக்காரணம்
பற்றியே
அந்திமந்தாரை
என்ற
பெயர்
பெற்றிருக்கிறது;
நள்ளிரவில்
மலர்ந்து
மணக்கும்
இருவாட்சிப்
பூ(இருள்
வாசி)
நள்ளிருள்
நாறி
யென்னும்
பெயர்
பெற்றுள்ளது.
கதிரவன்
மறையும்
பொழுதுக்கு
முன்னதாகிய
ஏற்பாட்டில்
அந்திமந்
தாரை
மலர்வதை,
வெந்தாறு
பொன்னின்
அந்திப்
பூப்ப
என்று
அகநானூறு
கூறுகின்றது.
மாலைப்
பொழுதென்பது
சூரியன்
மறைந்த
பின்
னர்இரவின்
நடு
யாமத்திற்கு
முன்னர்
உள்ள
சிறு
பொழுது.அந்தப்
பொழுதை
வருணிகும்
புலவர்கள்
அக்காலத்தில்
மலரும்
மலர்களையும்
வருணித்திருக்கின்றனர்.
முல்லை
மலரும்
மாலை
(குறுந்தொகை)
என்னும்
அடி,
மாலைப்
போதை
முல்லைப்போதின்
அடையாளத்தாற்
குறிக்கின்றது.
அம்முல்லையோடு
செங்காந்தளும்
மாலையில்
மலர்தலை
ஒரு
நல்லிசைப்
புலவர்,
பல்கதிர்
மண்டிலம்
பகல்செய்து
ஆற்றிச்
சேயுயர்
பெருவரைச்
சென்றவண்
மறையப்
பறவை
பார்ப்புவயின்
அடைய
முல்லை
முகைவாய்
திறப்பப்
பல்வயிற்
றோன்றி*
தொன்றுபு
புதல்விளக்
குறாஅ
.....................................
ஐதுவந்
திசைக்கும்
அருளில்
மாலை.
(நற்றிணை)
*தோன்றி-செங்காந்தள்
என
வெளியிடுகின்றனர்.
இவற்றையன்றி
ஆம்பல்,
குருக்கத்தி,
தளவம்
(செம்முல்லை)
பிடவு
புன்னை
முதலியன
மாலைப்போதைக்
காட்டும்
போதுகளாம்.
மாலைக்காலத்தில்
தாமரை
, நெய்தல்
முதலிய
மலர்கள்
குவியும்
.
நள்ளிருளில்
நொச்சிப்பூ
உதிரும்.
பகற்
பொழுதிலே
பெரும்பாலும்
விளக்கமான
பலவகை
நிறமுள்ள
மலர்கள்
மலருமென்பதும்,
இரவில்
நல்ல
மணமுள்ள
போதுகள்
மலருமென்பதும்,
மரநூலார்
கண்டறிந்த
உண்மை.
மரவினத்தின்
வளர்ச்
சிக்கு
வண்டுகள்
தாதூதுதல்
இன்றியமையாதது.
அவை
ஊதி
ஒரு
மலரிலுள்ள
தாதை
மற்றொரு
மல
ருக்குக்
கொண்டுசென்று
வைத்தால்
அம்மலர்
கரு
வுற்றுக்
காய்த்து
கனிகின்றது.
அதனால்
மரவினங்
கள்
பல்குகின்றன.
மலர்களின்
நிறமும்
மணமும்
வண்டுகளைக்
கவரும்பொருட்டுக்
கடவுளால்
அமைக்
கப்பட்டவை.
வண்டுகள்
மலரை
நிறத்தாற்
கண்டு
அடை
யும்
பொருட்டுப்
பகற்போதுகள்
பல
நிறங்களை
உடையனவாக
உள்ளன;
நிறத்தைக்
காண
இயலாத
இரவில்மலர்களின்
மணம்
வண்டுகளை
அழைக்கின்றது;
அதனாலேதான்
இரவில்
மலரும்
மலர்களிற்
பெரும்
பாலன
வெண்ணிறமுடையனவாக
இருக்கும்;
அவை
பலவகை
நிறத்தைப்
பெறுவதனால்
ஒரு
பயனும்
இல்லையல்லவா?
இவ்வரிய
உண்மையை,
இராப்
பொழுதை
வருணிக்கும்
வாயிலாகக்
கம்பர்
தம்
இராமாயணத்திலே,
விரிந்தன
தரந்தமுதல்
வெண்மலர்
(ஊர்தேடு
படலம்,
163)
என்று
புலப்படுத்துதல்
பெருவியப்பை
உண்டாக்குகின்றது.
-----------
**
குறுந்தொகை 138.
சிறுபொழுதுக்குரிய
மலர்களைப்போலப்
பெரும்
பொழுதுகளுள்
ஒவ்வொன்றற்கும்
உரிய
மலர்கள்
இன்னவை
என்று
ஆராய்வதானால்
அவ்வாராய்ச்சி
மிக
விரியும்.
அகப்பொருட்
பனுவல்களிலே
பருவங்
களைப்
பற்றிக்
கூறப்படும்
இடங்களிலுள்ள
செய்தி
களால்
இதனை
அறிந்து
கொள்ளலாம்.
கார்காலத்தில்
முல்லை,
கொன்றை,
கடம்பு,
பிடவு,
பிச்சி,
குருந்து,
தெறுழம்பூ
முதலியன
மலரும்.
கூதிர்ப்
பருவத்தில்
முசுண்டையும்
பீர்க்கும்
மலர்வதாக
நெடுநல்
வாடை
உணர்த்துகின்றது.
முன்பனிக்காலத்தில்
அவரை
ஈங்கை,
கருவிளை
முதலியன
மலரும்;
பனிக்
காலத்தில்
பகன்றை
மலரும்.
இளவேனிற்
பொழுதில்
அசோகு,
கோங்கு,
மா,
பாதிரி
முதலியனவும்,
இரு
வகை
வேனிலிலும்
இருப்பை,
அதிரல்
முதலியனவும்
மலரும்.
இம்மலர்களில்
சிலவற்றை
அவை
மலரும்
காலத்தைப்
பலப்படுத்தும்
அடையோடு
சேர்த்து
வழங்குவதும்
சான்றோர்
மரபு.
கார்நறும்
கடம்பு
(நற்றிணை)
கார்நறுங்
கொன்றை
(புறநானூறு)
வேனிற்
பாதிரி
(குறுந்தொகை)
வேனில்
அதிரல்
(அகநானூறு)
முருக்கின்
வகையைச்
சேர்ந்த
பலாசம்
பங்குனியில்
மலருமென்பர்
கம்பர்;
பங்குனி
மலர்ந்தொளிர்
பலாசவன
மொப்பார்.
(ஊர்தேடுபடலம்,
70)
மலைகளில்
வாழும்
குறவர்
வேங்கை
மலர்
மலர்வதைக்
கண்டு
தாம்
மணம்
செய்தற்குரிய
இளவேனிற்
பருவம்
வந்ததென்று
அறிந்து
மணம்
புரிவர்;
மண
நாளைப்
புலப்படுத்தும்
கணியின்
(சோதிடனின்)
தன்மை
அவ்வேங்கை
மரத்தினிடம்
இருப்பதால்
அதனைக்
கணிவேங்கை
யென்று
வழங்குவர்.
மலர்களைக்
கொண்டு
காலத்தை
அறியும்
இம்மரபு
நீலகிரியில்
வாழும்
தொதுவரிடத்திலும்
உண்டு.
மலையிலே
வளரும்
குறிஞ்சியின்
மலர்
பன்னிரண்டு
ஆண்டு
களுக்கு
ஒரு
முறை
மலருமென்றும்,
அங்ஙனம்
மலரும்
காலத்தை
அளவாகக்
கொண்டு
அத்தொதுவர்
தம்
ஆயுளைக்
கணக்கிட்டுக்
கொள்வரென்றும்
கூறுவர்.
இங்ஙனம்,
மலர்கள்
போதையும்
நாளையும்
காட்டும்
திறத்தைத்
தமிழ்
நூல்களின்
வாயிலாக
ஆராய
ஆராய,
பல
அரிய
செய்திகளும்
அவற்றை
நமக்கு
வழங்கும்
புலவர்
பெருமக்களின்
நுண்ணறி
வும்
மேன்மேலும்
புலனாகி
இன்பத்தையும்
வியப்பையும்
விளைவிக்கின்றன.
|