மோதிய
கண்
கி.வா.ஜகந்நாதன்
ஆண்மையும்
அற
நினைவும்
ஊக்கமும்
அன்பும்
உடைய
பெருமகன்
அவன்.
அழகும்
கற்பும்
காதலும்
உடைய
மடமகள்
அவள்.
இருவரும்
மணம்
புரிந்து
இல்லற
வாழ்க்கையில்
இன்புற்றிருந்தார்கள்.
இவ்
வாழ்க்கையில்
செய்ய
வேண்டியவற்றைச்
செய்வதற்கும்,
நுகர
வேண்டியவற்றை
நுகர்வதற்கும்
பொருள்
இன்றியமையாதது.
பொருள்
இல்லார்க்கு
இவ்வுலகம்
இல்லை
அல்லவா?
அவன்
வறுமையில்
உழல்பவன்
அல்ல.
ஆயினும்
பொருள்
வளம்
மிகுதியாக
இருந்தால்
அறத்தைப்
பின்னும்
சிறப்பாக
வளர்க்கலாம்;
அவனும்
அவளும்
நுகரும்
இன்பத்துக்குரிய
கருவிகளை
மிகுதியாகப்
பெற்று
நிரப்பலாம்.
இத்தகைய
எண்ணம்
அந்த
ஆண்
மகனுக்கு
உண்டாயிற்று.
அது
அவன்
நெஞ்சிலே
முளைத்து
இலைவிட்டுக்
கொடியோடிப்
பரந்தது.
தன்னைக்
காட்டிலும்
அதிக
வசதிகள்
பெற்று
வாழ்வாரைக்
கண்டபோது
அவனுக்கு
அந்த
எண்ணம்
முறுகி
வளர்ந்தது.
பொருள்
ஈட்டுவதற்குத்
தக்க
ஆற்றலும்
பருவமும்
அவனிடம்
இருந்தன.
பொருளால்
வரும்
விரிவான
இன்ப
வகைகளையும்,
செய்வதற்குரிய
அறச்
செயல்களையும்
நினைத்துப்
பார்க்கப்
பார்க்க
அவனுக்கு
இன்னும்
நிதியைப்
பெருக்க
வேண்டும்
என்ற
ஆசை
உண்டாயிற்று.
எண்ணம்
அவாவாக
வளர்ந்தவுடன்
அதற்குரிய
ஆயத்தங்களைச்
செய்யத்
தொடங்கினான்.
பொருளை
ஈட்டுவதற்கு
வேறு
ஊர்களுக்குச்
செல்லவேண்டும்.வேற்று
நாட்டுக்கும்
செல்ல
வேண்டியிருக்க்கும்.சில
மாதங்கள்
தன்
காதலியைப்
பிரிந்து
வாழவேண்டி
நேரும்.
ஒரு
கணமேனும்
பிரியாமல்
வாழ்பவர்கள்
அவர்கள்;
உடலும்
உயிரும்
போல
ஒன்றி
இன்ப
வாழ்விலே
ஈடுபட்டவர்கள்.
பிரிவுத்
துன்பத்தை
அவர்கள்
இன்னும்
உணரவில்லை.
காதலியைப்
பிரிந்து
சென்றால்
அந்தப்
பிரிவை
அவள்
தாங்குவாளா?
அவன்
தான்
தாங்குவானா?
அவள்
நினைவு
அவனுக்கு
இனிமையைத்
தரும்.
போன
இடங்களில்
அவளை
நினைந்து
மகிழலாம்.
ஆனாலும்
நேருக்கு
நேரே
காண்பது
போல
ஆகுமா?
அவளுடைய
பேரழகு
அவன்
உள்ளத்தைக்
கொள்ளை
கொண்டு
விட்டது.
அந்த
அழகைப்
பார்த்து
மகிழாத
நாளும்
ஒரு
நாளா?
மீண்டும்
பொருளின்
நினைவு
அவனுக்கு
வந்தது.
பொருள்
இருந்தால்
போகமும்
உடன்
வரும்.
தன்
உயிர்க்
காதலிக்கு
வேண்டிய
அணிவகைகளையும்
ஆடை
வகைகளையும்
வாங்கிப்
புனையலாம்.
மாளிகை
கட்டலாம்.
வாகனம்
பெறலாம்.
அறம்
செய்து
புகழ்
பெறலாம்.
ஆதலின்
பொருள்
அவசியந்தான்.
இவ்வாறு
ஒன்றுக்கொன்று
மாறுபட்ட
எண்ணங்கள்
அவன்
உள்ளத்திலே
போரடிக்
கொண்டிருந்தன.
பொருள்
வேண்டுமென்றால்
காதலியோடு
இணைந்து
வாழும்
வாழ்வு
இடையிலே
இல்லையாகும்.
இடையீடில்லாமல்
அவளோடு
வாழ்ந்திருந்தால்
அவசியமான
போது
பொருள்
கிடைக்காது.
அவளுடன்
இணைந்திருப்பது,
பொருளுக்காகப்
பிரிந்து
செல்வது
என்ற
இரண்டும்
ஒன்றற்கு
ஒன்று
எதிராக
அவன்
உள்ளமென்னும்
களத்தில்
நின்று
போர்
செய்தன.
இரண்டு
எண்ணங்களும்
ஒன்றுக்கு
ஒன்று
இளைக்கவில்லை.
இப்படி
உள்ளக்
கடலில்
மோதும்
எண்ண
அலைகளினூடே
அலைப்புண்டு
அவன்
தத்தளித்தபோது
அவன்
காதலி
வந்தாள்.
அவன்
எதையோ
சிந்தித்துக்கொண்டு
அமர்ந்திருப்பதைப்
பார்த்தாள்.
புன்னகை
பூத்தபடியே "எந்தக்
கோட்டையைப்
பிடிக்கத்
திட்டம்
போடுகிறீர்கள்?"
என்று
கேட்டாள்.
அந்தப்
புன்னகையின்
அழகும்
அவளுடைய
இன்னுரையின்
ஓசையும்
அவனுடைய
எண்ணங்களை
நிறுத்தின.
அந்த
இரண்டுக்கும்
மேலே
வேறு
ஒன்று
அவனுடைய
போராட்டத்தைப்
போக்கியது.
அது
என்ன?
அவள்
புன்னகை
மலரப்
பேசிய
போதே
அவள்
தன்
மோகனப்
பார்வையை
அவன்
மீது
வீசினாள்.
விழிகள்
ஒரு
முறை
கடைக்கண்
அளவும்
சென்று
மீண்டன.
பார்வை
ஒரு
வெட்டு
வெட்டி
அவன்
உள்ளத்தைச்
சுண்டி
இழுத்தது.
அந்த
அளவில்
அந்த
ஆண்மகன்
தன்
ஆற்றல்
அழிந்து
எண்ணச்
சிதறல்களைத்
திரட்டித்
தூற்றிவிட்டான்.
இப்போது
அவன்
உள்ளம்
ஒரு
நிலைக்கு
வந்துவிட்டது.
அவள்
பார்த்த
பார்வையில்
எத்தனை
கவர்ச்சி
காதில்
கனமான
பொற்குழையை
அணிந்திருந்தாள்
வடிந்த
காதில்
அது
ஊசலாடிக்
கொண்டிருந்தது.
அவன்
மனம்கூட
அப்படித்தான்
ஊசலாடியது.
ஆனால்
அவள்
விழிகள்
அந்தக்குழையை
மோதின.
ஓர்
ஓரத்திலிருந்து
கடைக்கண்
அளவும்
சென்றன.
அந்தக்
கண்கள்தாம்
காதளவும்
நீண்டிருக்கின்
றனவே!ஆகவே
பார்வை
ஒருமுறை
வெட்டி
இழுக்
கையில்
விழி
கனங்
குழையோடு
மோதியது
போலவே
இருந்தது.சிவந்த
அரிபடர்ந்த
கண்ணை
அவன்
பார்த்தான்.அந்தக்
கண்ணிலேதான்
எத்தனை
குளர்ச்சி!
மழைக்கண்கள்
அவை;சேயரி
படர்ந்த
மழைக்கண்கள்!
அவை
கனங்குழையோடு
அமர்
செய்தன.அப்படி
அமர்த்த
கண்கள்
குழையை
மாத்திரம்
மோதவில்லை;
அவன்
உள்ளத்தையும்
மோதின.அவள்
நோக்கின
நோக்கத்தில்
இனிமை
இருந்தது.
விருப்பத்துடன்
இனிமை
பொங்க
நோக்கின
நோக்கந்தான்.ஆயினும்
அது
அவன்
நெஞ்சைச்
செகுத்தது.மெல்லப்பாயும்
தண்ணிய
நீர்
மணற்குவியலைக்
கரைத்து
விடுவதில்லையா?
அவன்
மனத்தில்
எழுந்த
போராட்டமும்
அப்படித்தான்
கரைந்து
போயிற்று.அவள்
தன்
கனங்குழையோடு
அமர்த்த
சேயரி
மழைக்கண்ணால்.அமர்ந்து
இனிது
நோக்கிய
நோக்கம்
அவனைச்
செகுத்தது.ஒரு
தடவை
மட்டுமா
பார்த்தாள்?
பலபல
கோணத்திலே
பார்த்
தாள்.அத்தனை
பார்வைகளும்
சேர்ந்து
அவனைச்
செகுத்தன.பொருள்
வேண்டுமென்று
எண்ணிய
அவன்
எண்ணத்தைக்
குலைத்தன.
"பொருள்
எவ்வளவு
வகைகளாக,
பெரிதாக
இருந்தாலும்
இருக்கட்டும்,
எனக்கு
வேண்டியதில்லை.எனக்கு
இவளோடு
பிரிவில்லாமல்
வாழும்
வாழ்க்கைதான்
வேண்டும்"
என்ற
உறுதியான
முடிவுக்கு
வந்துவிட்டான்.
அந்த
முடிவுக்கு
வந்த
பிறகு
இப்போது
நிதான
மாக
நினைத்துப்
பார்க்கிறான்.
முன்னாலே
ஒன்றை
யொன்று
எதிர்த்து
நின்ற
இரண்டுவகை
எண்ணங்
களையும்
நிறுத்துப்
பார்க்கிறான்.
'என்னுடைய
ஆருயிர்க்
காதலியோடு
இடை
விடாது
இணைந்து
வாழ்ந்தால்,
பொருள்
நமக்குக்
கிடைக்காது.
இவளோடு
நாம்
புணரின்
பொருள்
நம்மோடு
புணராது.
இதை
நினைந்து
பொருளைத்
தேடிக்கொண்டு
இவளைப்
பிரிந்து
சென்றாலோ
இவளுடன்
இணையும்
இன்பம்
அந்தக்
காலத்திற்
கிட்டாது;
பொருள்
வயிற்
பிரியின்
இவளோடு
புணர்வு
புணராது.
இந்த
இரண்டுக்கும்
நடுவிலே,
நெஞ்சமே
நீ
மிகவும்
அல்லற்பட்டாய்!"
தன்
நெஞ்சைத்
தனியாகப்
பிரித்து
வைத்துப்
பேசுகிறவன்
போல
அவன்
சொல்லிக்
கொள்கிறான்.
'என்
நெஞ்சே,
வாழி!
அந்த
இரண்டு
மாறுபட்ட
எண்ணங்களிடையே
சிக்கிய
நீ
பொருள்
தேடச்
சென்றாலும்
சரி.
செல்லாவிட்டாலும்
சரி;
நல்லதாகிய
ஒன்றை
அடைய
வேண்டிய
உரிமை
உனக்கு
உண்டு.
நல்லதற்கு
உரியை
நீ
செல்வது
நல்லதா?
செல்லாமல்
நிற்பது
நல்லதா?
சற்றுச்
சிந்திக்கவேண்டும்.
பொருளைத்
தேடிச்
சென்றால்
இவள்
கூட்டுறவு
இல்லை.
அப்படி
இவளை
விட்டுப்
பிரிந்து
சென்று
ஈட்டும்
பொருள்
நல்லதா?'
அவன்
இப்போது
வாதத்தில்
வெற்றியடைய
நிச்சயித்துவிட்டாள்.
பிரியாமல்
இருப்பதே
நல்லது
என்று
சாதிக்கும்
உறுதி
அவனிடம்
வந்திருக்கிறது.
ஆதலின்
பொருள்
நல்லதன்று
என்று
காட்ட
முற்படுகிறான்.
'பொருளை
ஈட்டி
வருகிறோம்.
அது
எவ்வளவு
காலத்துக்கு
நிற்கும்?
பொருள்
ஒருவரிடத்திலும்
நிலையாமல்
ஓடிக்கொண்டே
இருக்கும்
என்று
சொல்
வார்கள்.
சென்ற
சுவடே
தெரியாமல்
அது
கைமாறு
கிறதை
உலகில்
பார்த்துக்
கொண்டேதான்
இருக்
கிறோம்!'
பொருள்
நிலையாது
என்ற
நினைவு
வந்தவுடன்
அவனுக்கு
ஓர்
உபமானம்
மனசிலே
தோற்றுகிறது.
எப்போது
பார்த்தாலும்
பூ
நிரம்ப
இருக்கும்
பொய்கை
ஒன்று
அவன்
வீட்டுக்கு
அருகில்
இருந்தது.
காலை
யிலே
தாமரை
மலரும்;
மாலையில்
குமுதம்
மலரும்.
தண்ணீர்
நிறைந்து
விளங்கியது
அந்தப்
பூம்
பொய்கை.
வாடாப்
பூவையுடைய
பொய்கை
அது.
எந்தக்
காலத்திலும்
பூ
இருந்து
கொண்டே
இருக்கும்.
அதன்
நடுவிலே
எத்தனையோ
மீன்கள்
வாழ்கின்றன.
அவை
ஓடி
ஓடி
விளையாடுகின்றன.
நிலத்தின்மேல்
யாராவது
ஓடினால்
அவன்
அடிச்சுவடுகளைக்
கொண்டு
எந்த
வழியே
ஓடினான்
என்று
கண்டு
பிடிக்க
முடியும்.
பொய்கை.
நாப்பண்
மீன்
ஓடும்போது
அதன்
அடிச்
சுவட்டையும்
அது
சென்ற
வழியையும்
தெரிந்து
கொள்ள
முடியுமா?
நீரில்
எழுதின
எழுத்து
என்று
நிலையாமைக்கு
உபமானம்
சொல்வார்கள்.
அதுவாவது
எழுதுபவனுடைய
நினைப்பிலே
இன்ன
எழுத்து
என்று
இருக்கும்.
மீன்
ஓடினால்
நம்மிடம்
சொல்லிக்
கொண்டு
ஓடுகிறதா?
இந்த
வழியாக
ஓடவேண்டும்
என்று
நினைத்துத்
திட்டம்
போட்டு
ஓடுகிறதா?
ஒன்றும்
இல்லை.
அது
ஓட
ஓட
அதன்
வழி
அடுத்த
கணத்தில்
மறைந்து
கொண்டே
வருகிறது
இந்தக்
காட்சி
தலைவனுக்கு
நினைவு
வந்தது.
'பொருள்,
வாடாத
பூவையுடையபொய்கையின்
நடுவில்
ஓடும்
மீன்
செல்லும்
வழியைப்
போல
விரைவில்
அழிந்து
போவதுதானே?
எந்தப்
பொரு
ளாக
இருந்தாலும்
எல்லாம்
நிலையாமற்
போய்விடு
பவைகளே.
அந்தப்
பொருளுக்காகவா
இவளை
விட்டுப்பிரிவது!'
அவள்
அமர்ந்து
இனிது
நோக்கிய
நோக்கம்
அவன்
உள்ளத்தில்
தண்மையைப்
புகுத்தியது.
'நான்
சென்று
ஈட்டிவரும்
செல்வம்
சிறிய
அளவுடையதாகத்தான்
இருக்கும்,
அது
கிடக்கட்டும். "கடல்
சூழ்ந்த
இந்த
உலகத்தையே
மரக்
காலாக
வைத்து
அப்படி
ஏழு
தடவை
அளந்து
உனக்குத்
தருவேன்
நீ
உன்
காதலியைப்
பிரிந்து
வா"
என்று
கடவுளே
வந்து
சொன்னாலும்
நான்
இவளைப்
பிரிய
மாட்டேன்.
விழு
நீர்
சூழ்ந்த
வியலகமாகிய
உலகமே
தூணியாக
வைத்து
ஏழு
தடவை
அளக்கும்
விழு
நிதி
பெறினும்,
இவளுடைய
கனங்
குழையோடு
அமர்த்த
சேயரி
மழைக்
கண்ணினால்
அமர்ந்து
இனிது
நோக்கும்
நோக்கத்தால்
செகுக்கப்
பட்டவனாதலால்,
அந்தப்
பொருள்
எத்தனை
வகையாக
இருந்தாலும்
சரி;
அது
வாழட்டும்;
எனக்கு
வேண்டாம்.
இன்று
என்
கைப்பட்ட
பெரிய
நிதி
இவள்.
இவளைப்
பிரிதலைவிட
வறுமையும்
பிணியும்
துயரமும்
வேறு
இல்லை.
ஆகவே
என்
நெஞ்சே,
நீ
வீணாகச்
சபலம்
கொள்ளவேண்டாம்.
நீ
வாழ்க!
நினைத்த
பொருளும்
வாழ்க!
நான்
இவளோடு
இன்புற்று
வாழும்
இணையற்ற
வாழ்வு
மாறாமல்
இருக்கட்டும்.'
இப்போது
அவன்
ஒரு
முடிவுக்கு
வந்துவிட்டான்.
இந்த
கருத்தை
நற்றிணையில்
வரும்
அழகிய
பாட்டு
ஒன்று
வெளியிடுகிறது.
காதலன்
தன்
நெஞ்சை
நோக்கிக்
கூறுவதாக
அமைந்திருக்கிறது,
அந்தப்
பாட்டு.
புணரிற்
புணராது
பொருளே,
பொருள்வயிற்
பிரியிற்
புணராது
புணர்வே;
ஆயிடைச்
செல்லினும்
செல்லா
யாயினும்,
நல்லதற்கு
உரியை
வாழிஎன்
நெஞ்சே!
பொருளே,
வாடாப்பூவின்
பொய்கை
நாப்பண்
ஓடுமின்
வழியிற்
கெடுவ;
யானே.
விழுநீர்
வியலகம்
துணி
ஆக
எழுமாண்
அளக்கும்
விழுநெதி
பெறினும்,
கனங்குழைக்கு
அமர்த்த
செய்அரி
மழைக்கண்
அமர்ந்து
இனிது
தொக்கமொடு
செருத்தனள்;
எனைய
ஆகுக,
வாழிய
பொருளே!
[நான்
இவளோடு
சேர்ந்திருந்தால்
பொருள்
எனக்குக்
கிடைக்காது.
பொருளைத்
தேடி
இவளைப்
பிரிந்தால்
இவளுடன்
இணையும்
இன்பம்
கிடக்காது.
இந்த
இரண்டுக்கு
மிடையே,
பிரிந்து
போனாலும்
போகாவிட்டாலும்,
நல்லதாகிய
ஒன்றைப்
பெறுவதற்கு
உரியாய்
நீ;
என்
நெஞ்சமே,
வாழி!
பொருள்,
வாடாத
பூவையுடைய
பொய்கையின்
நடுவிலே
ஓடுகிற
மீனின்
வழி
உடனே
கெடுவது
போல,
விரைவில்
அழிந்துவிடும்.
நான்
உயர்ந்த
கடல்
சூழ்ந்த
பரந்த
நிலவுலகமே
அளவு
கருவியாக
ஏழு
தடவை
அளக்கும்
உயர்ந்த
நிதியைப்
பெற்றாலும்
கனமான
பொற்குழையோடு
போராடி
மோதும்
சிவந்த
அரிகளையும்
குளிர்ச்சியையும்
உடைய
கண்களால்
விரும்பி
இனிது
பார்க்கும்
காதலியின்
பார்வையினால்
மோதப்
பேற்றேனாதலின்,
பொருள்
எத்தனை
வகைகளாக
இருந்தாலும்
இருக்கட்டும்,
வாழ்க,
நான்
பிரிந்து
வரமாட்டேன்.
ஆயிடை-அவற்றினிடையில்,
நாப்பண்-
நடுவில்
கெடுவ-
கெடுபவை
யாகும்.
விழுநீர்-விழுப்பமான
நீரை
யுடைய
கடல்.
வியல்
அகம்-பரந்த
உலகம்.
தூணி-முகத்தலளவைக்குரிய
கருவி.
எழுமாண்-ஏழுதடவை.
விழுநெதி-உயர்ந்த
நிதி.
மழை-குளிர்ச்சி.
அமர்ந்து-
விரும்பி.
செருத்தனன்-மோதப்பட்டேன்.
எனைய-
எத்தனை
அளவுடையவை]
இந்தப்
பாட்டைப்
பாடின
புலவர்
சிறைக்குடி
ஆந்தையார்
என்பவர்.
|