1.
திருப்பரங்குன்றம்
உலகம்
உவப்ப
வலன்
ஏர்பு
திரிதரு
பலர்
புகழ்
ஞாயிறு
கடற்கண்
டாஅங்கு
ஒவற
இமைக்கும்
சேண்
விளங்கு
அவிரொளி
உறுநர்த்
தாங்கிய
மதன்
உடை
நோன்தாள்
செறுநர்க்
தேய்த்த
செல்உறழ்
தடக்கை
5
மறுவில்
கற்பின்
வாள்
நுதல்
கணவன்
கார்கோள்
முகந்த
கமஞ்சூல்
மாமழை
வாள்போழ்
விசும்பில்
வள்ளுறை
சிதறித்
தலைப்பெயல்
தலைஇய
தண்நறுங்
கானத்து
இருள்படப்
பொதுளிய
பராரை
மராஅத்து
10
உருள்
பூந்
தண்தார்
புரளும்
மார்பினன்
மால்வரை
நிவந்த
சேணுயர்
வெற்பில்
கிண்கிணி
கவைஇய
ஒண்செஞ்
சீறடிக்
கணக்கால்
வாங்கிய
நுசுப்பிற்
பணைத்தோள்
கோபத்து
அன்ன
தோயாப்
பூந்துகில்
15
பல்காசு
நிரைத்த
சில்காழ்
அல்குல்
கைபுனைந்து
இயற்றாக்
கவின்பெறு
வனப்பின்
நாவலொடு
பெயரிய
பொலம்புனை
அவிர்இழைச்
சேண்
இகந்து
விளங்கும்
செயிர்தீர்
மேனித்
துணையோர்
ஆய்ந்த
இணையீர்
ஓதிச்
20
செங்கால்
வெட்சிச்
சீறிதழ்
இடை
இடுபு
பைந்தாட்
குவளைத்
தூஇதழ்
கிள்ளித்
தெய்வ
உத்தியொடு
வலம்புரி
வயின்
வைத்துத்
திலகம்
தைஇய
தேங்
கமழ்
திருநுதல்
மகரப்
பகுவாய்
தாழமண்
ணுறுத்துத்
25
துவர
முடித்த
துகள்
அறு
முச்சிப்
பெருந்தண்
சண்பகம்
செரீஇக்
கருந்தகட்டு
உளைப்பூ
மருதின்
ஒள்இணர்
அட்டிக்
கிளைக்கவின்று
எழுதரு
கீழ்நீர்ச்
செவ்வரும்பு
இணைப்புறு
பிணையல்
வளை
இத்
துணைத்தக
30
வண்காது
நிறைந்த
பிண்டி
ஒண்
தளிர்
நுண்பூண்
ஆகம்
திளைப்பத்
திண்காழ்
நறுங்குறடு
உரிஞ்சிய
பூங்கேழ்த்
தேய்வை
தேங்கமழ்
மருதிணர்
கடுப்பக்
கோங்கின்
குவிமுகிழ்
இளமுலைக்
கொட்டி
விரிமலர்
35
வேங்கை
நுண்தாது
அப்பிக்
காண்வர
வெள்ளிற்
குறுமுறி
கிள்ளுபு
தெரியாக்
கோழி
ஓங்கிய
வென்றடு
விறற்கொடி
வாழிய
பெரிதென்று
எத்திப்
பலருடன்
சீர்திகழ்
சிலம்பகம்
சிலம்பப்
பாடிச்
40
சூரர
மகளிர்
ஆடும்
சோலை
மந்தியும்
அறியா
மரன்பயில்
அடுக்கத்துச்
சுரும்பும்
மூசாச்
சுடர்ப்பூங்
காந்தள்
பெருந்தண்
கண்ணி
மிலைந்த
சென்னியன்
பார்முதிர்
பனிக்கடல்
கலங்கவுள்
புக்குச்
45
சூர்
முதல்
தடிந்த
சுடர்
இலை
நெடுவேல்
உலறிய
கதுப்பிற்
பிறழ்பல்
பேழ்வாய்ச்
சுழல்விழிப்
பசுங்கண்
சூர்த்த
நோக்கின்
கழல்கட
கூகையொடு
கடும்பாம்பு
தூங்கப்
பெருமுலை
அலைக்கும்
காதிற்
பிணர்மோட்டு
50
உருகெழு
செலவின்
அஞ்சுவரு
பேய்மகள்
குருதி
ஆடிய
கூர்
உகிர்க்
கொடுவிரல்
கண்தொட்டு
உண்ட
கழிமுடைக்
கருந்தலை
ஒண்தொடித்
தடக்கையின்
ஏந்தி
வெருவர
வென்றடு
விறற்
களம்
பாடித்
தோள்
பெயரா
55
நிணம்தின்
வாயள்
துணங்கை
தூங்க
இருபேர்
உருவின்
ஒருபேர்
யாக்கை
அறுவேறு
வகையின்
அஞ்சுவர
மண்டி
அவுணர்
நல்வலம்
அடங்கக்
கவிழ்இணர்
மாமுதல்
தடிந்த
மறுவில்
கொற்றத்து
60
எய்யா
நல்
இசைச்
செவ்வேற்
சேஎய்
சேவடி
படரும்
செம்மல்
உள்ளமொடு
நலம்புரி
கொள்கைப்
புலம்பிரிந்து
உறையும்
செலவு
நீ
நயந்தனை
ஆயின்
பலவுடன்
நன்னர்
நெஞ்சத்து
இன்னசை
வாய்ப்ப
65
இன்னே
பெறுதி
நீமுன்னிய
வினையே
செருப்புகன்று
எடுத்த
சேண்
உயர்
நெடுங்கொடி
வரிப்புனை
பந்தொடு
பாவை
தூங்கப்
பொருநர்த்
தேய்த்த
போர்
அரு
வாயில்
திருவீற்
றிருந்த
தீது
தீர்
நியமத்து
70
மாடமலி
மறுகிற்
கூடற்
குடவயின்
இருஞ்சேற்று
அகல்வயல்
விரிந்துவாய்
அவிழ்ந்த
முள்தாள்
தாமரைத்
துஞ்சி
வைகறைக்
கள்கமழ்
நெய்தல்
ஊதி
எற்படக்
கண்போல்
மலர்ந்த
காமர்
சுனைமலர்
75
அம்சிறை
வண்டின்
அரிக்கணம்
ஒலிக்கும்
குன்றமர்ந்து
உறைதலும்
உரியன்,
அதாஅன்று.
2.
திருச்சீரலைவாய்
வைந்நுதி
பொருத
வடுஆழ்
வரிநுதல்
வாடா
மாலை
ஓடையொடு
துயல்வரப்
படுமணி
இரட்டும்
மருங்கிற்
கடுநடைக்
80
கூற்றத்து
அன்ன
மாற்றரு
மொய்ம்பிற்
கால்கிளர்ந்து
அன்ன
வேழமேல்
கொண்டு
ஐவேறு
உருவின்
செய்வினை
முற்றிய
முடியொடு
விளங்கிய
முரண்மிகு
திருமணி
மின்
உறழ்
இமைப்பிற்
சென்னிப்
பொற்ப
85
நகைதாழ்பு
துயல்வரூஉம்
வகைஅமை
பொலங்குழை
சேண்விளங்கு
இயற்கை
வாண்மதி
கவைஇ
அகலா
மீனின்
அவிர்வன
இமைப்பத்
தாவில்
கொள்கைத்
தம்தொழில்
முடிமார்
மனன்நேர்பு
எழுதரு
வாள்நிற
முகனே
90
மாஇருள்
ஞாலம்
மறுஇன்றி
விளங்கப்
பல்கதிர்
விரிந்தன்று
ஒருமுகம்
ஒருமுகம்
ஆர்வலர்
ஏத்த
அமர்ந்தினிது
ஒழுகிக்
காதலின்
உவந்து
வரம்
கொடுத்
தன்றே,
ஒருமுகம்
மந்திர
விதியின்
மரபுளி
வழாஅ
95
அந்தணர்
வேள்விஓர்க்
கும்மே;
ஒருமுகம்
எஞ்சிய
பொருளை
எம்உற
நாடித்
திங்கள்
போலத்
திசைவிளக்
கும்மே;
ஒருமுகம்
செறுநர்த்
தேய்த்துச்
செல்சமம்
முருக்கிக்
கறுவுகொள்
நெஞ்சமொடு
களம்வேட்
டன்றே,
ஒருமுகம்
100
குறவர்
மடமகள்
கொடிபோல்
நுசுப்பின்
மடவரல்
வள்ளியொடு
நகை
அமர்ந்
தன்றே,
ஆங்கம்
மூவிரு
முகனும்
முறைநவின்று
ஒழுகலின்
ஆரம்
தாழ்ந்த
அம்பகட்டு
மார்பிற்
செம்பொறி
வாங்கிய
மொய்ம்பிற்
சுடர்
விடுபு
105
வண்புகழ்
நிறைந்து
வசிந்து
வாங்கு
நிமிர்தோள்
விண்செலல்
மரபின்
ஐயர்க்கு
வந்தியது
ஒருகை
உக்கம்
சேர்த்தியது
ஒருகை
நலம்பெறு
கலிங்கத்துக்
குறங்கின்மீசை
அசைஇயது
ஒருகை
அங்குசம்
கடாவ
ஒருகை
இருகை
110
ஐயிரு
வட்டமொடு
எஃகுவலம்
திரிப்ப,
ஒருகை
மார்
பொடு
விளங்க
ஒருகை
தாரொடு
பொலிய
ஒருகை
கீழ்வீழ்
தொடி
யொடு
மீமிசைக்
கொட்ப
ஒருகை
பாடின்
படுமணி
இரட்ட
ஒருகை
115
நீல்நிற
வீசும்பின்
மலிதுளி
பொழிய
ஒருகை
வான்
அர
மகளிர்க்கு
வதுவை
சூட்ட,
ஆங்கப்
பன்னிரு
கையும்
பாற்பட
இயற்றி
அந்தரப்
பல்லியம்
கறங்கத்
திண்காழ்
வயிர்எழுந்து
இசைப்ப
வால்வளை
ஞரல
120
உரம்தலைக்
கொண்ட
உரும்இடி
முரசமொடு
பல்பொறி
மஞ்ஞை
வெல்கொடி
அகவ
விகம்பா
றாக
வரை
செலல்
முன்னி
உலகம்
புகழ்ந்த
ஓங்குயர்
விழுச்சீர்
அலைவாய்ச்
சேறலும்
நில்
இய
பண்பே
அதாஅன்று.
125
3.
திருவாவினன்குடி
சீரை
தைஇய
உடுக்கையர்
சீரொடு
வலம்புரி
புரையும்
வால்நரை
முடியினர்
மாசற
இமைக்கும்
உருவினர்
மானின்
உரிவை
தைஇய
ஊன்கெடு
மார்பின்
என்பெழுந்து
இயங்கும்
யாக்கையர்
நன்பகல்
130
பலவுடன்
கழிந்த
உண்டியர்
இகலொடு
செற்றம்
நீக்கிய
மனத்தினர்
யாவதும்
கற்றோர்
அறியா
அறிவினர்
கற்றோர்க்குத்
தாம்வரம்பு
ஆகிய
தலைமையர்
காமமொடு
கடுஞ்சினம்
கடிந்த
காட்சியர்
இடும்பை
135
யாவதும்
அறியா
இயல்பினர்
மேவரத்
துனி
இல்
காட்சி
முனிவர்
முற்புகப்
புகைமுகந்த
அன்ன
மாசில்
தூ
உடை
முகைவாய்
அவிழ்க்த
தகைசூழ்
ஆகத்துச்
செவிநேர்பு
வைத்த
செய்வுறு
திவவின்
140
நல்லியாழ்
நவின்ற
நயனுடை
நெஞ்சின்
மென்மொழி
மேவலர்
இன்
நரம்பு
உளர
நோய்
இன்று
இயன்ற
யாக்கையர்
மாவின்
அவிர்தளிர்
புரையும்
மேனியர்
அவிர்தொறும்
பொன்
உரை
கடுக்கும்
திதலையர்
இன்
நகைப்
145
பருமம்
தாங்கிய
பணிந்தேந்து
அல்குல்
மாசில்
மகளிரொடு
மறுவின்றி
விளங்கக்
கடுவொடு
ஒடுங்கிய
தூம்
புடை
வால்எயிற்று
அழல்என
உயிர்க்கும்
அஞ்சுவரு
கடுந்திறற்
பாம்புபடப்
புடைக்கும்
பல்வரிக்
கொடுஞ்சிறைப்
150
புள்
அணி
நீள்கொடிச்
செல்வனும்
வெள்
ஏறு
வலவயின்
உயரிய
பலர்
புகழ்
திணிதோள்
உமை
அமர்ந்து
விளங்கும்
இமையா
முக்கண்
மூவெயில்
முருக்கிய
முரண்மிகு
செல்வனும்
நூற்றுப்பத்து
அடுக்கிய
நாட்டத்து
நூறுபல்
155
வேள்வி
முற்றிய
வென்றடு
கொற்றத்து
ஈரிரண்டு
எந்திய
மருப்பின்
எழில்நடைத்
தாழ்பெருந்
தடக்கை
உயர்த்த
யானை
எருத்தம்
ஏறிய
திருக்கிளர்
செல்வனும்
நாற்பெருங்
தெய்வத்து
நல்நகர்
நிலைஇய
160
உலகம்
காக்கும்
ஒன்று
புரி
கொள்கைப்
புலர்
புகழ்
மூவரும்
தலைவர்
ஆக
ஏமுறு
ஞாலம்
தன்னில்
தோன்றித்
தாமரை
பயந்த
தாவில்
ஊழி
நான்முக
ஒருவற்
சுட்டிக்
காண்வரப்
165
பகலில்
தோன்றும்
இகலில்
காட்சி
நால்வேறு
இயற்கைப்
பதினொரு
மூவரொடு
ஒன்பதிற்று
இரட்டி
உயர்நிலை
பெறீஇயர்
மீன்
பூத்
தன்ன
தோன்றலர்
மீன்சேர்பு
வளிகிளர்த்
தன்ன
செலவினர்
வளியிடைத்
170
தீஎழுந்
தன்ன
திறவினர்
தீப்பட
உரும்
இடித்
தன்ன
குரலினர்
விழுமிய
உறுகுறை
மருங்கின்தம்
பெறுமுறை
கொண்மார்
அந்தரக்
கொட்பினர்
வந்துடன்
காணத்
தாவில்
கொள்கை
மடந்தையொடு
சின்னாள்
175
ஆவி
னன்குடி
அசைதலும்
உரியன்,
அதாஅன்று.
4.
திருவேரகம்
இருமூன்று
எய்திய
இயல்பினின்
வழா
அது
இருவர்ச்
சுட்டிய
பல்வேறு
தொல்குடி
அறுநான்கு
இரட்டி
இளமை
நல்லியாண்டு
ஆறினிற்
கழிப்பிய
அறன்நவில்
கொள்கை
180
மூன்றுவகைக்
குறித்த
முத்தீச்
செல்வத்து
இருபிறப்
பாளர்
பொழுதரிந்து
நுவல
ஒன்பது
கொண்ட
மூன்று
புரி
நுண்ஞாண்
புலராக்
காழகம்
புலர
உடீஇ
உச்சிக்
கூப்பிய
கையினர்
தற்புகழ்ந்து
185
ஆறெழுத்து
அடக்கிய
அருமறைக்
கேள்வி
நா
இயல்
மருங்கின்
நவிலப்
பாடி
விரையுறு
நறுமலர்
ஏந்திப்
பெரிதுவந்து
ஏரகத்து
உறைதலும்
உரியன்,
அதா
அன்று.
5.
குன்றுதோறாடல்
பைங்கொடி
நறைக்காய்
இடைஇடுபு
வேலன்
190
அம்பொதிப்
புட்டில்
விரை
இக்
குளவியொடு
வெண்கூதாளம்
தொடுத்த
கண்ணியன்
நறுஞ்சாந்து
அணிந்த
கேழ்கிளர்
மார்பின்
கொடுந்தொழில்
வல்விற்
கொலை
இய
கானவர்
நீடமை
விளைந்த
தேக்கள்
தேறல்
195
குன்றகச்
சிறுகுடிக்
கிளையுடன்
மகிழ்ந்து
தொண்டகச்
சிறுபறைக்
குரவை
அயர
விரல்
உளர்ப்பு
அவிழ்ந்த
வேறுபடு
நறுங்கால்
குண்டுசுனை
பூத்த
வண்டுபடு
கண்ணி
இணைத்த
கோதை
அணைத்த
கூந்தல்
200
முடித்த
குல்லை
இலையுடை
நறும்பூச்
செங்கால்
மராஅத்த
வாலிணர்
இடைஇடுபு
சுரும்புணத்
தொடுத்த
பெருந்தண்
மாத்தழை
திருந்துகாழ்
அல்குல்
திளைப்ப
உடீஇ
மயில்கண்
டன்ன
மடநடை
மகளிரொடு
205
செய்யன்
சிவந்த
ஆடையன்
செவ்வரைச்
செயலைத்
தண்தளிர்
துயல்வரும்
காதினன்
கச்சினன்
கழலினன்
செச்சைக்
கண்ணியன்
குழலன்
கோட்டன்
குறும்பல்
இயத்தன்
தகரன்
மஞ்ஞையன்
புகரில்
சேவலம்
210
கொடியன்
நெடியன்
தொடி
அணி
தோளன்
நரம்பார்த்
தன்ன
இன்குரல்
தொகுதியொடு
குறும்பொறிக்
கொண்ட
நறுந்தண்
சாயல்
மருங்கில்
கட்டிய
நிலன்நேர்பு
துகிலினன்
முழவுறழ்
தடக்கையின்
இயல
ஏந்தி
215
மென்தோள்
பல்பிணை
தழீஇத்
தலைத்தந்து
குன்றுதொறாடலும்
நின்றதன்
பண்பே,
அதாஅன்று.
6.
பழமுதிர்
சோலை
சிறுதினை
மலரொடு
விரைஇ
மறிஅறுத்து
வாரணக்
கொடியொடு
வயிற்பட
நிரீஇ
ஊர்ஊர்
கொண்ட
சீர்கெழு
விழவினும்
220
ஆர்வலர்
ஏத்த
மேவரு
நிலையினும்
வேலன்
தைஇய
வெறிஅயர்
களனும்
காடும்
காவும்
கவின்பெறு
துருத்தியும்
யாறும்
குளனும்
வேறுபல்
வைப்பும்
சதுக்கமும்
சந்தியும்
புதுப்பூங்
கடம்பும்
225
மன்றமும்
பொதியிலும்
கந்துடை
நிலையினும்
மாண்தலைக்
கொடியொடு
மண்ணி
அமைவர
நெய்யொடு
ஐயவி
அப்பி
ஐதுரைத்துக்
குடந்தம்
பட்டுக்
கொழுமலர்
சிதறி
230
முரண்கொள்
உருவின்
இரண்டுடன்
உடீஇச்
செந்நூல்
யாத்து
வெண்பொரி
சிதறி
மதவலி
நிலைஇய
மாத்தாட்
கொழுவிடைக்
குருதியொடு
விரை
இய
தூவெள்
அரிசி
சில்பலிச்
செய்து
பல்பிரப்பு
இரீஇச்
சிறு
பசு
மஞ்சளொடு
நறு
விரை
தெளித்துப்
235
பெருந்தண்
கணவீர
நறுந்தண்
மாலை
துணைஅற
அறுத்துத்
தூங்க
நாற்றி
நளிமலைச்
சிலம்பின்
நல்நகர்
வாழ்த்தி
நறும்
புகை
எடுத்துக்
குறிஞ்சி
பாடி
இமிழ்இசை
அருவியொடு
இன்னியம்
கறங்க
240
உருவப்
பல்பூத்
தூஉய்
வெருவரக்
குருதிச்
செந்தினை
பரப்பிக்
குறமகள்
முருகியம்
நிறுத்து
முரணினர்
உட்க
முருகாற்றுப்
படுத்த
உருகெழு
வியல்நகர்
245
ஆடுகளம்
சிலம்பப்
பாடிப்
பலவுடன்
கோடுவாய்
வைத்துக்
கொடுமணி
இயக்கி
ஓடாப்
பூட்கைப்
பிணிமுகம்
வாழ்த்தி
வேண்டுநர்
வேண்டியாங்கு
எய்தினர்
வழிபட
ஆண்டாண்டு
உறைதலும்
அறிந்த
வாறே
ஆண்டாண்டு
ஆயினும்
ஆக
காண்தக
250
முந்து
நீ
கண்டுழி
முகன்
அமர்ந்து
எத்திக்
கைதொழுஉப்
பரவிக்
காலுற
வணங்கி
நெடும்பெருஞ்
சிமையத்து
நீலப்
பைஞ்சுனை
ஐவருள்
ஒருவன்
அங்கை
ஏற்ப
அறவர்
பயந்த
ஆறமர்
செல்வ
255
ஆல்கெழு
கடவுட்
புதல்வ
மால்வரை
மலை
மகள்
மகனே
மாற்றோர்
கூற்றே
வெற்றி
வெல்போர்க்
கொற்றவை
சிறுவ
இழைஅணி
சிறப்பிற்
பழையோள்
குழவி
வானோர்
வணங்குவில்
தானைத்
தலைவ
260
மாலை
மார்ப
நூலறி
புலவ
செருவில்
ஒருவ
பொருவிறல்
மள்ள
அந்தணர்
வெறுக்கை
அறிந்தோர்
சொல்மலை
மங்கையர்
கணவ
மைந்தர்
ஏறே
வேல்கெழு
தடக்கைச்
சால்பெரும்
செல்வ
265
குன்றம்
கொன்ற
குன்றாக்
கொற்றத்து
விண்பொரு
நெடுவரைக்
குறிஞ்சிக்
கிழவ
பலர்புகழ்
நன்மொழிப்
புலவர்
ஏறே
அரும்பெறல்
மரபிற்
பெரும்பெயர்
முருக
நசையுநர்க்கு
ஆர்த்தும்
இசைபேராள
270
அலந்தோர்க்கு
அளிக்கும்
பொலம்பூண்
சேஎய்
மண்டமர்
கடந்தநின்
வென்றொடு
அகலத்
துப்
பரிசிலர்த்
தாங்கும்
உருகெழு
நெடுவேஎள்
பெரியோர்
ஏத்தும்
பெரும்பெயர்
இயவுள்
சூர்மருங்கு
அறுத்த
மொய்ம்
பின்
மத
வலி
275
போர்மிகு
பொருந
குரிசில்
எனப்
பல
யான்
அறி
அளவையின்
ஏத்தி
ஆனாது
நீன்
அளந்து
அறிதல்
மன்
உயிர்க்கு
அருமையின்
நின்
அடி
உள்ளி
வந்தனென்
நின்னொடு
புரை
யுநர்
இல்லாப்
புலமை
யோய்
எனக்
280
குறித்தது
மொழியா
அளவைக்
குறித்துடன்
வேறுபல்
உருவிற்
குறும்பல்
கூளியர்
சாறயர்
களத்து
வீறுபெறத்
தோன்றி
அளியன்
தானே
முதுவாய்
இரவலன்
வந்தோன்
பெரும
நின்
வண்புகழ்
நயந்
தென
285
இனியவும்
நல்லவும்
நனிபல
ஏத்தித்
தெய்வம்
சான்ற
திறல்விளங்கு
உருவின்
வான்
தோய்
நிவப்பின்
தான்
வந்து
எய்தி
அணங்குசால்
உயர்நிலை
தழீஇப்
பண்டைத்தன்
மணங்கமழ்
தெய்வத்து
இளநலம்
காட்டி
290
அஞ்சல்
ஒம்புமதி
அறிவல்
நின்
வரவென
அன்புடை
நன்மொழி
அளை
இ
விளிவின்று
இருள்
நிற
முந்நீர்
வளைஇய
உலகத்து
ஒருநீ
ஆகிக்
தோன்ற
விழுமிய
பெறல்
அரும்
பரிசில்
நல்குமதி
பலவுடன்
295
வேறுபல்
துகிலின்
நுடங்கி
அகில்சுமந்து
ஆர
முழுமுதல்
உருட்டி
வேரல்
பூவுடை
அலங்கு
சினை
புலம்பவேர்
கீண்டு
விண்பொரு
நெடுவரைப்
பரிதியின்
தொடுத்த
தண்கமழ்
அலர்
இறால்
சிதைய
நன்பல
300
ஆசினி
முதுசுளை
கலாவ
மீமிசை
நாக
நறுமலர்
உதிர
ஊகமொடு
மாமுக
முசுக்கலை
பனிப்பப்
பூநுதல்
இரும்
பிடி
குளிர்ப்ப
வீசிப்
பெருங்களிற்று
முத்துடை
வான்
கோடு
தழீஇத்
தத்துற்று
305
நன்பொன்
மணிநிறம்
கிளரப்
பொன்கொழியா
வாழை
முழுமுதல்
துமியத்
தாழை,
இளநீர்
விழுக்குலை
உதிரத்
தாக்கிக்
கறிக்கொடிக்
கருத்துணர்
சாயப்
பொறிப்புற
மடநடை
மஞ்ஞை
பலவுடன்
வெரீஇக்
310
கோழி
வயப்பெடை
இரியக்
கேழலொடு
இரும்பனை
வெளிற்றின்
புன்சாய்
அன்ன
குரூஉமயிர்
யாக்கைக்
குடாவடி
உளியம்
பெருங்கல்
விடர்
அளைச்
செறியக்
கருந்கோட்டு
ஆமா
நல்ஏறு
சிலப்பச்
சேண்கின்று
315
இழுமென
இழிதரும்
அருவிப்
பழமுதிர்
சோலை
மலைகிழ
வோனே.
-------------------
பொழிப்புரை:
1-3.
உலகத்தில்
உள்ள
உயிர்கள்
எல்லாம்
மகிழும்படியாக
மேருவுக்கு
வலப்பக்கமாக
எழுந்து
சுற்றுவதும்,
பலரால்
புகழப்
பெறுவதும்
ஆகிய
சூரி
யன்
கீழகடலிலே
தோன்றினாற்போல,
நடுவலே
நிற்பதில்லாமல்
விளங்குவதும்
நெடுந்
துரத்திலும்
வீசுவதுமாகிய
ஒளியையும்;
4-6.
தம்பால்
வந்து
சரண்
அடைந்தவர்களைப்
பாதுகாக்கின்ற,
அறியாமையை
உடைக்கும்
வலிமையையுடைய
திருவடியையும்
எதிர்த்துப்
போர்செய்வாரை
அடியோடு
அழித்த,
இடியைப்
போன்ற
விசாலமான
கையையும்
உடையவன்;
குற்றம்
இல்லாத
கற்பையும்
ஒளிபொருந்திய
நெற்றியையும்
உடைய
தேவயானைக்குக்
கணவன்;
7-11.
கடலை
முகந்த
நிறைந்த
கருப்பத்தை
உடைய
கரிய
மேகமானது,
ஒளியால்
போழப்படும்
வானத்தில்
வளப்பமான
நீர்த்துளியைச்
சிதறி
முதல்
மழையைப்
பெய்த,
குளிர்ந்த
நறுமணம்
வீசும்
காட்டில்,
இருள்
உண்டாகும்படியாகச்
செறிந்த
பருத்த
அடிமரத்தையுடைய
செங்கடம்பினது
உருளுகின்ற
குளிர்ந்த
மாலை
புரளுகின்ற
திருமார்பை
உடையவன்;
12-19.
பெரிய
மூங்கில்கள்
வளர்ந்து
வானளவும்
உயர்ந்த
மலையில்
-
கிண்கிணி
சூழ்ந்த
ஒளிபடைத்த
சிவந்த
சிறிய
அடி,
திரண்ட
கால்,
வளைந்த
இடை,
பெரிய
தோள்கள்,
இந்திர
கோபத்தைப்
போன்ற
சாயந்
தோய்க்காமல்
இயற்கையாகவே
சிவந்த
பூ
அலங்காரம்
உள்ள
துகில்,
பல
மணிகளைக்
கோத்த
சில
வடங்களால்
ஆகிய
மேகலையை
அணிந்த
ரகசிய
ஸ்தானம்,
ஒருவர்
அலங்கரிக்காமலே
அழகு
பெற்ற
லாவண்யம்,
காவல்
மரத்தினாற்
பெயர்
பெற்ற
சாம்பூநதம்
என்னும்
பொன்னால்
ஆகிய
விளங்குகின்ற
ஆபரணம்,
நெடுந்தூரம்
சென்று
பிரகாசிக்கும்
குற்றமற்ற
உடல்
வண்ணம்,
(இவற்றை
உடையவர்களாய்);
20-44.
தமக்குத்
துணையாக
உள்ள
தோழிமார்,
இது
அழகிது
என்று
பாராட்டியதும்,
ஒத்துவளர்ந்து
நெய்ப்போடு
கூடியதும்
ஆகிய
கூந்தலில்,
சிவந்த
காம்பையுடைய
வெட்சிப்
பூவின்
சிறிய
இதழ்களை
இடையில்
வைத்து,
பசிய
தண்டையுடைய
குவளை
மலரின்
தூய
இதழைக்
கிள்ளியிட்டு,
தெய்வ
உத்தியாகிய
சீதேவி
என்னும்
ஆபரணத்தையும்
வலம்புரி
என்னும்
ஆபரணத்தையும்
பக்கங்களில்
அமைத்து,
திலகத்தால்
அலங்கரித்த
இனிமை
பரவிய
அழகிய
நெற்றியில்
மகர
வாய்
படியும்படியாகச்
சீவிச்
சிக்கறுத்து
நன்கு
முடித்த
குற்றமற்ற
கொண்டையில்,
பெரிய
குளிர்ந்த
சண்பகப்
பூவைச்
செருகி,
கரிய
மேலிதழையும்
பஞ்சு
போன்ற
கேசரத்தையும்
உடைய
மருதம்
பூங்கொத்துக்களை
அமைத்து,
சூழ
உள்ள
அரும்புகளுக்குள்ளே
அழகு
பெற்று
மேலெழுந்து
நீருக்குள்
இருந்த
சிவந்த
அரும்பைக்
கட்டிய
மாலையை
வளையச்
சுற்றி,
இரண்டு
பக்கத்திலும்
ஒத்துத்
தோன்றும்படி
வளப்பமுள்ள
காதுகளில்
நிறையச்
செருகிய
அசோகக்
தளிரானது,
நுண்ணிய
வேலைப்பாடுகளை
உடைய,
ஆபரணங்களை
அணிந்த
மார்பிலே
அசைய,
உறுதியான
வயிரமும்
வாசனையும்
உடைய
கட்டையை
அரைத்த,
பொலிவும்
நிறமும்
பெற்ற
சந்தனக்குழம்பைத்
தேன்
கமழும்
மருதம்
பூவைப்போல
லேசாகக்
கோங்கிலவின்
அரும்பைப்போன்ற
தனத்திலே
பூசி,
விரிந்த
வேங்கை
மலரின்
நுண்ணிய
மகரந்தப்
பொடியை
மேலே
அப்பி,
கண்டு
மகிழ்வதற்கு
ஏற்றபடி
விளா
மரத்தின்
சிறிய
தளிரைக்
கிள்ளித்
தெறித்து,
கோழி
ஓங்கி
யதும்
பகைவரை
வென்று
சங்காரம்
செய்யும்
வெற்
றியை
அறிவுறுத்துவது
மாகிய
கொடி
நெடுங்காலம்
வாழ்க
என்று
வாழ்த்தி,
பலர்
ஒருங்கே
கூடி,
சிறப்புத்
திகழ்கின்ற
மலைப்பக்கமெல்லாம்
எதிரொலி
செய்யும்படியாகப்
பாடி,
தெய்வப்
பெண்கள்
ஆடும்
சோலைகளை
உடைய,
குரங்கும்
அறியாத
மரங்கள்
நெருங்கியுள்ள
மலைப்பக்கத்தில்
வளர்ந்த
வண்டுகளும்
மொய்க்காத
விளக்கைப்
போன்ற
காந்தளாலாகிய
பெரிய
குளிர்ந்த
கண்ணியைஅணிந்த
திருமுடியை
உடையவன்;
45-61.
பாரில்
முதிர்ந்த
குளிர்ச்சியையுடைய
கடலானது
கலங்கும்படியாக
அதனுள்ளே
புகுந்து,
சூரனாகிய
அசுரர்
தலைவனைக்கொன்ற
சுடர்
விடுகின்ற
இலையை
உடைய
நெடிய
வேலாலே,
உலர்ந்த
மயிரையும்
கோணியுள்ள
பல்லையும்
ஆழமான
வாயையும்
சுழல்கின்ற
விழியையும்
பசிய
கண்ணையும்
பயத்தைத்தரும்
பார்வையையும்
கழன்றாற்
போன்ற
கண்ணையுடைய
கோட்டானோடு
கூடிய
பாம்பு
தொங்கப்
பெரிய
தனத்தை
மோதுகின்ற
காதையும்
சொர
சொரப்பை
உடைய
உடம்பையும்
அச்சம்
உண்டாக்கும்
நடையை
யும்
உடைய
பயங்கரமான
பேய்மகள்
ரத்தம்
அளைத்த
கூரிய
நகத்தையுடைய
விரலாலே
கண்ணைத்
தோண்டி
உண்ட
மிக்க
நாற்றத்தை
யுடைய
கரிய
தலையை
ஒள்ளிய
வளையை
அணிந்த
வளைந்த
கையால்
ஏந்திக்
கண்டார்
அஞ்சும்படியாக,
வென்று
அட்ட
போர்க்களத்தைப்
பாடித்
தோளை
வீசி
நிணத்தைத்
தின்னும்
வாயையுடைய
வளாய்த்துணங்கைக்
கூத்து
ஆடும்
படியாக,
இரண்டு
பெரிய
வடிவை
உடைய
ஒரு
பெரிய
சூரனது
உடம்பானது
அஞ்சும்படி
ஆறு
வேறு
உருவத்தோடு
சென்று,
அசுரர்களுடைய
நல்ல
வெற்றி
கெட்டுப்
போகும்படி,
தலைகீழாகக்
கவிழ்ந்த
பூங்கொத்துக்கக்ள
உடைய
மாமரத்தை
அழித்த,
குற்ற
மற்ற
வெற்றியையும்,
யாராலும்
அறிதற்கரிய
நல்ல
புகழையும்
உடைய
செவ்வேற்
சேய்
(ஆகிய
முருகனுனுடைய);
62-66
சிவந்த
திருவடியிலே
செல்லும்
பெருமையை
உடைய
உள்ளத்தோடும்,
நன்மை
செய்கின்ற
தீர்மானத்தோடும்,
உன்
நாட்டைப்
பிரிந்து
தங்குவதற்குரிய
பிரயாணத்தை
நீ
விரும்பினாயானால்,
நல்ல
நெஞ்சில்
எண்ணிய
இனிய
விருப்பங்கள்
யாவும்
ஒருங்கே
நிறைவேற,
நீ
நினைத்த
காரியம்
இப்போதே
கைகூடப்
பெறுவாய்
67-71.
போருக்கு
வருக
என்று
அறை
கூவிக்
கட்டிய,
நெடுந்தூரம்
உயர்ந்த
கொடிக்
கருகே,
வரிக்
து
புனையப்
பட்ட
பந்து
பாவையோடு
தொங்க,
யுத்தம்
செய்பவரை
ஒடுக்கிய
போர்
இல்லாத
வாயிலையும்,
திருமகள்
வீற்றிருந்த
குற்றமற்ற
அங்காடி
வீதியையும்,
மாடங்கள்
மலிக்க
வீதியையும்
உடைய
கூடல்மா
நகரத்துக்கு
மேற்கே;
72-77
கரிய
சேற்றையுடைய
அகன்ற
வயலில்
விரிந்து
மலர்ந்த
முள்ளையுடைய
தண்டைப்
பெற்ற
தாமரை
மலரில்
தூங்கி,
விடியற்
காலையில்
தேன்
பரந்த
செய்தல்
மலரை
ஊதி,
சூரியன்
உதயம்
ஆனவுடன்
கண்ணைப்போல
மலர்ந்த
அழகிய
சுனைகளில்
உள்ள
மலர்களிலே
சிறைகளையுடைய
வண்டினது
அழகிய
கூட்டம்
ரீங்காரம்
செய்யும்
திருப்பரங்
குன்றத்தில் (முருகன்)
வீற்றிருத்தலையும்
உடையவன்;
அது
மட்டும்
அன்று.
78-82.
அங்குசத்தின்
கூர்மையான
நுனி
பதிந்தமையால்
உண்டான
தழும்பு
உள்ள
வரிகளையுடைய
நெற்றியில்,
வாடாத
பொன்னரி
மாலை
பட்டத்தோடு
அசைய,
மணிகள்
மாறி
ஒலிக்கும்
பக்கங்களையும்,
வேகமாகிய
நடையையும்,
யமனப்போன்ற
தடுப்பதற்கரிய
வலிமையையும்
உடைய,
காற்று
எழுந்தாற்
போன்ற
யானையின்
மேலே
ஆரோகணித்து;
83-88.
ஐந்து
வேறு
உறுப்புக்களை
உடையதும்,
செய்யவேண்டிய
வேலைப்பாடுகள்
நிரம்பியதுமாகிய
கிரீடத்தில்,
விளங்கும்
நிறத்தால்
வெவ்வேறாக
மாறுபட்ட
அழகிய
மணிகள்
மின்னல்
விட்டு
விளங்கி
மின்னுவதைப்
போல
முடியிலே
பிரகாசிக்க,
ஒளி
தங்கி
அசையும்,
கூறுபாடுகள்
அமைந்த
பொன்னால்
ஆகிய
மகர
குண்டலங்கள்,
வானத்திலே
விளங்கும்
தன்மையையும்
ஒளியையும்
உடைய
சந்திரனைச்
சூழ்ந்து
அகலாத
நட்சத்திரங்களைப்போல
விளங்கி
மின்ன;
89-102.
கேடில்லாத
விரதத்தையுடைய
தம்
தவமாகிய
தொழிலை
நிறைவேற்றும்
ஆற்றல்
பெற்ற
முனிவர்களுடைய
மனத்திலே
பொருந்தித்
தோன்றுகின்ற
ஒளியும்
நிறமும்
பொருந்திய
முகங்களுக்குள்-பெரிய
இருள்
படைத்த
உலகம்
குற்றம்
இல்லாமல்
விளங்கும்
படியாகப்
பல
கிரணங்கள்
விரிந்து
விளங்குவது
ஒருமுகம்;
ஒருமுகம்,
அன்புடையவர்
துதிக்க,
அவர்களுக்கு
ஏற்கும்படியாகப்
பொருந்தி
இனிதாகச்
சென்று
விருப்பத்தோடு
மகிழ்ந்து
வரத்தைக்
கொடுத்தது;
ஒரு
முகம்,
வேதமந்திர
முறைப்படியே
சம்பிரதாயத்தினின்றும்
வழுவாத
அந்தணர்
களுடைய
யாகங்களை
நன்கு
நிறைவேற்றத்
திருவுள்ளங்
கொள்ளும்;
ஒருமுகம்,
நூல்களாலும்
ஆசிரியர்களாலும்
விளக்கமுறாமல்
எஞ்சிய
பொருள்களை,
அவற்றை
உணரப்புக்க
ஞான
வேட்கை
உடையார்
இன்பம்
அடையும்படியாக
ஆராய்ந்து,
சந்திரனைப்
போலத்
திசையெலாம்
விளக்கும்;
ஒருமுகம்
செறுகின்றவர்களை
அழித்து,
வந்தபோர்களைப்
போக்கிக்
கறுவுதல்
கொண்ட
உள்ளத்தோடே
கள
வேள்வியைச்
செய்தது;
ஒருமுகம்
குறவர்
மடமகளும்
கொடிபோன்ற
இடையையுடைய
மெல்லியலாளும்
ஆகிய
வள்ளி
நாச்சியாரோடு
இன்பம்
புணர்ந்து
மகிழ்ந்தது;
103-118.
அவ்வாறு
அந்த
ஆறு
திருமுகங்களும்
தமக்குரிய
கடமைகளைப்
பயின்று
செய்து
வருவதனாலே
(அவற்றிற்கு
ஏற்ப
அமைந்து)
பொன்னாரம்
தொங்கும்
அழகிய
பெருமையை
உடைய
மார்பிலே
உள்ள
சிவந்த
வரிகள்
தம்வரையில்
வர
அவற்றை
ஏற்றுக்
கொண்டனவும்,
வலியையுடையனவும்,
ஒளிவீசி,
கொடுத்தலால்
பெற்ற
புகழ்
நிரம்பி,
கண்டார்
உள்ளத்தை
வசமாக்கி,
உள்வாங்கி
மேலே
நிமிர்ந்தனவுமாகிய
தோள்களில்
-
ஆகாயத்திலே
சூரியனது
வெம்மையைத்
தாங்கிச்
செல்லுகின்ற
கடமையை
உடைய,
முனிவர்களைப்
பாதுகாக்கும்
பொருட்டு
உயர்த்தியது
ஒரு
கை:
இடையிலே
வைத்தது
ஒரு
கை;
ஒரு
கை
அங்குசத்தைச்
செலுத்த
மற்றொரு
கை
அழகைப்
பெற்ற
ஆடையை
உடுத்த
துடையின்
மீதே
கிடந்தது;
இரண்டு
கைகள்
வியப்பையும்
கருமையையும்
உடைய
கேடயத்தையும்
வேலாயுதத்தையும்
வலமாகச்
சுழற்ற,
ஒருகை
திருமார்பில் (மோனமுத்திரையோடு)
விளங்க,
மற்றொரு
கை
மாலையோடு
விளங்க,
ஒரு
திருக்கை
கீழே
கழுவுகின்ற
வளையோடே
மேலே
சுழல,
மற்றொரு
கை
இனிய
ஓசையை
உடையதாக
ஒலிக்கும்
மணியை
மாறி
மாறி
ஒலிக்கும்படி
செய்ய,
ஒரு
கை
நீலநிற
வானத்திலிருந்து
மிக்க
மழையைப்
பொழியும்படியாகச்
செய்ய,
மற்றொகை
தேவப்
பெண்களுக்கு
மண
மாலையைச்
சூட்ட
- அவ்வாறு
அந்தப்
பன்னிரண்டு
திருக்கரங்களும்
முகங்களுக்கு
ஏற்ற
வகையிலே
பொருந்தச்
செயல்களைச்
செய்து;
119-125.
வானத்து
இசைக்
கருவிகள்
முழங்க,
திண்ணிய
வயிரத்தையுடைய
கொம்புகள்
உச்ச
ஒலியோடு
ஒலிக்க,
வெண்சங்குகள்
சப்திக்க,
வன்மையைத்
தன்னிடத்திற்
கொண்ட
இடியைப்
போன்ற
முரசம்
ஒலிப்பதோடு
பல
பீலிகளையுடைய
மயிலாகிய
வெற்றிக்கொடி
அகவ,
ஆகாயமே
வழியாக
விரைந்து
செல்லுதலைத்
திருவுளத்தே
கொண்டு,
உலகம்
புகழ்கின்ற
மிக
உயர்ந்த
மேலான
சிறப்பையுடைய
அலை
வாய்க்குச்
சென்று
தங்குதல்
அவனுக்கு
நிலை
பெற்ற
இயல்பு;
அதுமாத்திரம்
அன்று.
126-137.
மரவுரியை
உடையாக
அணிந்தவர்,
அழகோடு
வலம்புரியை
ஒத்த
வெண்மையை
உடைய
நரைமுடியை
உடையோர்,
மாசு
இல்லாமல்
விளங்கும்
திருமேனியை
உடையோர்,
மான்
தோலைப்
போர்த்த
தசைகெட்ட
மார்பில்
எலும்புகள்
மேலே
தோன்றி
அசையும்
உடம்பை
உடையோர்,
நல்ல
நாட்
கள்
பலவற்றில்
ஒருங்கே
உணவை
உண்ணாது
விட்ட
வர்,
பகையும்
ஹிம்சையும்
நீக்கிய
மனத்தினர்,
கற்றவர்
சிறிதும்
அறியாத
பேரறிவினர்,
கற்றவர்களுக்கு
எல்லையாக
நிற்கும்
தலைமை-யுடையோர்,
காமமும்
மிக்க
சினமும்
நீத்த
அறிவுடையோர்,
சிறிதளவேனும்
இடும்பை
என்பதை
அறியாத
இயல்புடையோர்,
மனம்
பொருந்த
வெறுப்பில்லாத
ஞானம்
பெற்றவர்
ஆகிய
முனிவர்
முன்னாலே
புக;
138-142.
புகையை
முகந்தாற்
போன்ற
மெல்லிய
அழுக்கு
இல்லாத
தூய
உடையையும்,
மொட்டு
அவிழ்ந்த
மாலையை
அணித்த
மார்பையும்
உடையவர்களும்,
காதிலே
பொருத்தி
வைத்துப்
பார்த்துச்
சுருதி
கூட்டிய
நரம்புக்
கட்டையுடைய
கல்லயாழிலே
பயிற்சி
யுடையவர்களும்
அன்புடைய
நெஞ்சையும்
மெல்லிய
மொழிகளையும்
உடையவர்களும்
ஆகிய
கந்தருவர்
இனிய
நரம்பை
மீட்டிப்
பாட
;
143-147.
நோய்களே
இல்லாமல்
அமைந்த
உடம்பை
உடையோர்,
மாமரத்தின்
விளங்கும்
தளிரை
ஒத்த
மேனி
உடையோர்,
விளங்குக்தோறும்
பொன்னை
உரைத்தாற்போன்ற
தேமலை
உடையோர்,
இனிய
ஒளியை
உடைய
மேகலையைத்
தாங்கியதும்
தாழ்ந்தும்
உயர்ந்தும்
உள்ளதுமாகிய
அல்குலை
உடையோராகிய
குற்றமற்ற
மகளிரோடு,
அப்
பாடல்
குற்றம்
இல்லாமல்
விளங்க;
148-159.
விஷத்தோடே
உறைக்குள்ளே
கிடந்த
துவாரத்தையுடைய
வெண்மையான
பற்களையும்,
நெருப்பைப்போல
மூச்செறியும்
பயங்கரமான
மிக்க
வலிமையையும்
உடைய
பாம்பு
இறக்கும்படியாக
அடிக்கும்
பல
கோடுகளையுடைய
வளைந்த
சிறகைப்
பெற்ற
கருடனை
அணிந்த
உயர்ந்த
கொடியை
உடைய
திருமாலும்,
வெண்மையான
இடபத்தை
வலப்பக்கத்தே
துவசமாகத்
தூக்கியவனும்
பலர்
புகழும்
திண்ணிய
தோளை
உடையவனும்
உமாதேவியார்
ஒரு
பாகத்தே
தங்கி
விளங்குபவனும்
இமையாத
முக்கண்ணை
உடையவனும்
திரிபுரத்தை
அழித்த
வலிமை
மிக்கவனுமாகிய
சிவபிரானும்,
ஆயிரம்
கண்களையும்
நூறாகிய
பல
வேள்விகளை
முடித்து
அவற்றினிடையே
வந்த
பகையை
வென்று
கொன்ற
வெற்றியையும்
உடையவன்,
நான்காக
உயர்ந்த
கொம்பும்
அழகிய
நடையும்
உடையதும்
தாழ்ந்த
பெரிய
வளைந்த
கையை
உயர்த்தியதுமாகிய
ஐராவதத்தின்
பிடரியிலே
ஏறிய
ஐசுவரியம்
மிக்கவன்
ஆகிய
இந்திரனும்;
160-165.
நான்கு
பெரிய
தெய்வங்களின்
பாதுகாப்பை
உடையதும்,
நல்ல
நகரங்கள்
நிலை
பெற்றதுமாகிய
உலகத்தைப்
பாதுகாக்கும்
ஒன்று
பட்ட
சங்கற்பத்தை
உடையவர்களும்
பலராலும்
புகழப்
பெறுபவர்களும்
ஆகிய
அயன்
அரி
அரன்
என்னும்
மூவரும்
பழையபடியே
தலைவராகும்
பொருட்டு,
இன்பத்தை
மிகுதியாக
உடைய
பூவுலகத்திலே
தோன்றித்
தாமரையினும்
பெறப்
பெற்றவனும்
நான்முகனுமாகிய
ஒருவனைக்
குறித்து,
தன்னை
வந்து
தரிசனம்
செய்ய;
166-176.
சூரியனைப்
போலத்
தோன்றும்
மாறுபாடு
இல்லாத
தோற்றத்தையும்,
நான்காக
வேறு
பட்ட
இயல்பினையும்
உடைய
முப்பத்து
மூவரும்
பதினெண்
கணத்தினராகிய
உயர்ந்த
பதவியைப்
பெற்றவர்களும்
விண்மீன்கள்
தோன்றினாற்
போன்ற
தோற்றத்தை
உடையவர்களாய்,
காற்றிடத்தே
நெருப்பு
எழுந்தாற்போன்ற
வலிமையை
உடையவர்களாய்,
நெருப்பு
உண்டாகும்படி
இடி
இடித்தாற்
போன்ற
குரலை
உடையவர்களாய்,
மேலானதாகிய
தம்
வேண்டுகோளினால்
தாம்
பெறவேண்டிய
முறைமையினைக்
கொள்ளும்
பொருட்டு
ஆகாயத்தே
சுழற்சியை
உடையவர்களாய்,
வந்து
ஒருங்கே
தரிசிக்க,
கேடில்லாத
கற்பையுடைய
மடந்தையாகிய
தெய்வயானையுடன்
சில
காலம்
ஆவினன்குடியிலே
இருத்தலும்
உரிமையாக
உடையவன்;
அது
மட்டும்
அன்று.
177-189.
ஆறு
தொழில்களென்று
அமைந்த
இயல்பினின்றும்
பிறழாமல்,
தாய்
தந்தை
யென்னும்
இருவரைச்
சுட்டிய
பல்வேறு
பழைய
கோத்திரத்தை
உடையவர்களும்,
நாற்பத்தெட்டு
ஆகிய
நல்ல
இளமைப்
பருவத்து
ஆண்டுகளை
நிற்கவேண்டிய
நெறியிலே
நின்று
கழித்தவர்களும்,
தர்மத்தையே
சொல்லிக்
கொண்டிருக்கும்
விரதத்தை
உடையவர்களும்,
மூன்று
வகையாகச்
சொல்லப்பட்ட
மூன்று
வேள்வித்
தீயையே
செல்வமாக
உடைய
இரு
பிறப்பாளர்களும்
ஆகிய
அந்தணர்,
முருகனைத்
துதிக்கும்
சமயம்
அறிந்து
தோத்திரம்
கூறவும்,
ஒன்பது
நூலை
முறுக்கிய
மூன்று
புரிகளாகிய
நுண்ணிய
பூணூலை
அணிந்து,
உலராத
ஈர
ஆடையைக்
கிடந்தவாறே
உலரும்படி
உடுத்து,
தலைமேலே
கையைக்
குவித்துக்கொண்டு,
முருகனைப்
புகழ்ந்து,
ஆறெழுத்துக்களைத்
தன்
பாற்கொண்ட
அரிய
உடதேச
மந்திரத்தை
நாக்குபுரளும்
மாத்திரத்திலே
பலமுறை
கூறி,
மணம்
மிக்க
நறுமலர்களை
ஏந்தி
(வழிபடவும்),
அதற்கு
மிகவும்
மகிழ்ந்து
திருவேரகத்திலே
எழுந்தருளியிருப்பதற்கும்
உரியவன்;
அது
மாத்திரம்
அன்று.
190-217.
பச்சிலைக்
கொடியால்
நல்ல
மணத்தையுடைய
சாதிக்காயை
நடுவிலே
வைத்து,
பூசாரியானவன்,
அதனோடு
அழகையுடைய
பொருளைப்
பொதிந்து
வைக்கும்
புட்டிலைப்போன்ற
தக்கோலக்காயையும்
கலந்து,
காட்டு
மல்லிகையுடன்
வெண்
கூதாளம்
பூவையும்
தொடுத்துக்
கட்டிய
கண்ணியை
அணிந்தவனாகி,
வாசனை
வீசும்
சந்தனத்தை
அணிந்த,
நிறம்
எடுத்துக்
காட்டும்
மார்பையும்
கொடுமையான
செயலையும்
உடையவரும்,
வலிய
வில்லால்
கொலை
புரிகின்றவருமாகிய
கானவர்,
உயர்ந்த
புங்கிற்குழாயில்
முற்றி
விளைந்த
தேனால்
ஆகிய
கள்ளின்
தெளிவை
மலையில்
உள்ள
சிற்றூரில்
வாழும்
தம்
சுற்றத்
தாருடன்
உண்டு
மகிழ்ந்த,
தொண்டகம்
என்னும்
சிறிய
பறைக்கு
ஏற்பக்
குரவைக்கூத்து
ஆடவிரலால்
வலிய
மலர்த்துதனாலே
மலர்ந்தனவும்
வெவ்வேறு
வகையாக
இருப்பனவும்
காம்போடு
கூடியனவும்
மணம்
வீசுகின்றனவும்
ஆழமான
சுனைகளிலே
மலர்ந்தனவும்
வண்டுகள்
மொய்ப்பனவும்
ஆகிய
மலர்களால்
ஆன
கண்ணி,
இரட்டையாகக்
கட்டிய
மலர்மாலையில்
அனைத்துக்
கட்டிய
கூந்தல்,
முடித்திருக்கின்ற
கஞ்சாவின்
இலையோடு
கூடிய
மனமுடைய
பூ
இவற்றை
அணிந்து,
சிவந்த
அடிமரத்தை
உடைய
வெண்கடம்பின்
வெள்ளையான
பூங்கொத்துக்களை
இடையிலே
வைத்து
வண்டு
வந்து
உண்ணும்படியாக (மலர்களையும்
சேர்த்துத்)
தொடுத்ததும்
மிக்க
குளிர்ச்சியை
உடையதுமாகிய
பெரிய
தழையாடையைக்
குற்றமறத்
திருந்திய
வடங்களை
உடைய
ரகசிய
ஸ்தானத்தில்
அசையும்படியாக
உடுத்து,
மயிலைக்
கண்டாற்போன்ற
தோற்றத்தைப்
பெற்ற,
மெத்தென
நடக்கும்
நடையையுடைய
மகளிரோடு
: சிவந்த
சிறம்
உடை
யவன்,
சிவந்த
ஆடையை
அணிந்தவன்,
சிவந்த
அடி
மாத்தையுடைய
அசோகினது
குளிர்ந்த
தளிர்
அசைகின்ற
காதை
உடையவன்,
கச்சை
அணிந்தவன்,
கழலைக்
கட்டியவன்,
வெட்சிக்
கண்ணியைச்
சூடியவன்,
குழலை
ஊதுபவன்,
கொம்பை
வாசிப்பவன்,
வேறு
பல
சிறிய
வாத்தியங்களை
இசைப்பவன்,
ஆட்டுவாகனத்
தான்,
மயிலில்
ஏறுபவன்,
குற்றம்
இல்லாத
சேவம்
கொடியைப்
பிடித்தவன்,
செடிய
உருவம்
படைத்தவன்,
வளையணிக்க
தோளேயுடையவனாக,
யாழ்தரம்பு
ஒலித்தாற்
போன்ற
இனிய
குரலையுடைய
மகளிர்
கூட்டத்தோடு,
சிறிய
புள்ளிகளை
உடையதாய்
மனமும்
தண்மையும்
மென்மையும்
உடையதாய்
இடுப்பிலே
கட்டிய,
நிலத்திலே
புரளும்
துகிலை
உடையவனாகி
முழவைப்
போலப்
பெருத்த
விசாலமான
கைகளால்
ஏற்ற
வண்ணம்
ஏந்திக்கொண்டு
மெல்லிய
தோரளையுடைய
மான்
போன்ற
பல
மகளிரைத்
தழுவி,
அவர்களுக்கு
முதற்கை
கொடுத்து,
மலேகள்
தோறும்
விளையாடுதலும்
நிலைபெற்ற
அவனது
குணமாகும்;
அது
மட்டும்
அன்று.
218-226
சிறிய
தினையரிசியைப்
பூக்களோடு
கலந்து
வைத்து,
ஆட்டை
அறுத்து,
விழாவுக்குரிய
களத்தை
நிறுவி,
ஒவ்வோர்
ஊரிலும்
கடத்த
மேற்கொண்ட
சிறப்புப்
பொருந்திய
விழாக்களிலும்;
அன்பர்கள்
துதித்து
வழி
விரும்பிச்
செல்லும்
அவ்விடங்களிலும்;
பூசாரி
அமைத்த
வெறியாடுகின்ற
இடத்திலும்
காட்டிலும்
சோலையிலும்
அழகுடைய
ஆற்றிடையிலுள்ள
தீவிலும்
ஆம்விலும்
குளத்திலும்
வேறு
பல
இடங்களிஆம்;
நான்கு
தெருக்
கூடும்
சதுக்கத்திலும்
வேறு
சந்திகளிலும்
புதிய
பூக்களையுடைய
கடம்ப
மரத்திலும்,
மன்றத்திலும்
பொதியிலிலும்
கந்தை
உடைய
இடங்களிலும்;
227 249.
மாட்சிமைப்பட்ட
தலையையுடைய
கோழிக்கொடியோடு
பிற
அலங்காரங்களையும்
செய்து
பொருத்தமாக
அமையும்ஆடி
நெய்யோடு
கலந்து
வெள்ளைக்
கடுகை
அப்பி,
மந்திரங்களை
மெல்லச்
சொல்லிக்
கும்பிட்டுக்
கொழுவிய
மலர்களைத்
தூவி,
ஒன்றேடு
ஒன்று
மாறுபட்ட
நிறத்தையுடைய
இரண்டு
ஆடைகளை
ஒருங்கே
உடுத்து,
சிவந்த
நூலைக்
கையிலே
கட்டிக்கொண்டு,வெண்மையான
பொரியைத்
தெளித்து,
மிக்க
வலிமை
நிலைபெற்ற
பெரிய
காலையுடைய
கொழுத்த
ஆட்டுக்கிடாயின்
ரத்தத்தோடு
கலந்த
தூய
வெள்ளை
யரிசியைச்
சிறு
பலியாக
இட்டு,
பல
கூடை
நிறையப்
பிரப்பரிசி
வைத்து
சிறிய
பசு
மஞ்சளோடு
குறிய
வாசனைப்
பொருள்களைத்
தெளித்து
பெரிய
குளிர்ந்த
செவ்வலரியினது
குறிய
குளிர்ந்த
மாலையை
ஒரே
அளவாக
அறுத்து
அங்கங்கே
தொங்கும்படி
கட்டி,
செறிந்த
மலைச்சாரலில்
உள்ள
நல்ல
நகர்களை
வாழ்த்தி,
நறிய
தூபத்தைக்
காட்டி,
குறிஞ்சிப்
பண்ணைப்
பாடி,
ஒலிக்கின்ற
இன்னொலியை
உடைய
அருவியோடு
இனிய
வாத்தியங்கள்
சேர்ந்து
முழங்க,
பல
நிறங்களையுடைய
மலர்களைத்
தூவி,
கண்டோர்
அஞ்சும்படியாக
ரத்தத்தோடு
கலந்த
சிவந்த
தினையைப்
பரப்பி,
குறமகளானவள்
முருகனுக்கு
உவக்க
வாத்தியங்களை
வாசிக்கச்
செய்து,
தெய்வம்
இல்லையென்ற
முரண்பட்ட
கொள்கையை
உடையவர்களும்
அஞ்சும்படியாக,
முருகனை
வரும்படி
செய்த
அழகு
மிக்க
அகன்ற
திருக்கோயிலில்,
வெறியாடுகின்ற
இடத்தில்
சிலையோடும்
படியாகப்
பாடி,
பல
கொம்புகளை
ஒன்றாக
ஊதி,
ஒலியாற்
கொடுமை
யையுடைய
மணிகளே
ஒலித்து,
புறங்காட்டி
ஓடாத
வலிமையையுடைய
பிணிமுகம்
என்னும்
யானையை
வாழ்த்தி,
தமக்கு
விருப்பமானவற்றை
வேண்டும்
அடியவர்
வேண்டியபடியே
அடைந்து
வழிபட்டுக்
கொண்டிருக்க (முருகன்)
அங்கங்கே
தங்கியிருத்தலும்
நான்
அறிந்ததே
யாகும்:
250-277.
நான்
கூறிய
அவ்விடங்களானாலும் (பிற
இடங்களானாலும்)
தரிசனத்துக்குப்
பொருத்தமாக
முந்தி
நீ
கண்ட
இடத்தில்
முகம்
விரும்பித்
துதித்து
கை
குவித்துப்
புகழ்ந்து
காலில்
விழுந்து
நமஸ்காரம்
செய்து,
'உயர்ந்த
பெரிய
இமாசலத்தின்
உச்சியில்
நீல
நிறமுடைய
தருப்பை
வளர்ந்த
பசிய
சுனையிலே,
ஐம்பூதத்
தலைவருள்
ஒருவன்
தன்
கையிலே
ஏற்றுக்
கொடுக்க,
ஆறு
முனிவருடைய
மனைவியர்
பெற்றெடுத்த
ஆறு
திருவுருவத்தோடு
அமர்ந்த
செல்வனே!
ஆலமரத்தின்
அடியிலே
வீற்றிருக்கும்
தக்ஷ்ணாமூர்த்தியின்
திருமகனே!
பெருமையையும்
பக்க
மலைகளையும்
உடைய
இமாசலத்தின்
மகளுக்கு
மகனே!
பகைவர்களுக்கு
யமனப்
போன்றவனே!
வெற்றியையும்
வெல்லும்
போரையும்
உடைய
துர்க்கையின்
புதல்வனே!
ஆபரணங்களை
அணிந்த
பெருமையையுடைய
பழையவளாகிய
பராசக்தியின்
குழந்தையே!
தேவர்கள்
வணங்குகின்ற
வில்லைக்
கையிலே
பிடித்த
படைத்தலைவனே!
போகத்துக்குரிய
மாலையை
அணிந்த
திருமார்டை
உடையவனே!
எல்லா
நூல்களையும்
அறியும்
பேரறி
வுடையவனே!
போரில்
ஒப்பில்லாத
ஒருவனாக
விளங்குபவனே!
பொருகின்ற
வெற்றியினையும்
இளமையையும்
உடை
வனே!
அந்தணர்களுடைய
செல்வமாக
இருப்பவனே!
மெய்யை
உணர்ந்தவர்களுடைய
சொற்களெல்லாம்
தொக்க
தொகுதியாக
விளங்குபவனே!
தெய்வயானை
வள்ளியாகிய
மங்கையர்தம்
கணவனே!
வீரம்
மிக்காருள்
ஆண்
சிங்கம்
போன்றவனே!
வேல்
பொருந்திய
பெரிய
கைகளால்
அமைந்த
பெரிய
செல்வத்தை
உடையவனே!
கிரவுஞ்ச
மலையை
அழித்த,
என்றும்
குறையாத
வெற்றியையுடைய,
வானத்தை
முட்டும்
உயர்ந்த
மலைகளையுடைய
குறிஞ்சி
நிலத்துக்கு
உரிமை
பூண்டவனே!
சாதியாலும்
சமயத்தாலும்
வேறுபட்ட
பலரும்
புகழும்
நல்ல
மொழிகளையுடைய,
புலவர்களுக்குள்
ஆண்சிங்கம்
போன்ற
தலைவனே!
அருமையாகப்
பெறுதலாகிய
முறையையுண்டய
பெரிய
பொருளாகிய
முக்திச்
செல்வத்தையுடைய
முருகனே!
தன்பால்
விரும்பி
வந்தவர்களுக்கு
அவர்
விரும்பியதைத்
தந்து
நிரம்ப
நுகரச்
செய்யும்
பெரிய
புகழை
உடையவனே!
துணையின்றி
வருந்தியவர்களுக்கு
அருள்
புரியும்,
பொன்
ஆபரணங்களை
அணிந்த
சேயே!
மேல்
நெருங்குகின்ற
போர்களை
முடித்து
உன்னுடைய
வென்று
அடுகின்ற
மார்பினாலே
பரிசிலர்களை
ரக்ஷக்கின்ற,
பயங்கரமான
நெடிய
வேளே!
தேவரும்
முனிவருமாகிய
பெரியவர்கள்
துதிக்கின்ற
திரு
நாமத்தை
உடைய
தலைவனே!
சூரனது
குலத்தை
அழித்த
வீரம்
பொருந்திய
மார்பத்தையும்
மிக்க
வலிமையையும்
உடையவனே!
போரிலே
சிறந்து
நிற்கும்
வீரனே!
தலைவனே!'
என்று
பலவகையாக
நான்
அறிந்த
அளவிலே
சொல்வனவற்றை
விடாமற்
சொல்லி
278-317. ”உன்
பெருமைகளை
அளவிட்டு
அறிதல்
உலகத்தில்
உள்ள
உயிர்களுக்கு
அருமையாக
இருத்தவின்,
நான்
நின்
திருவடி
தரிசனத்தின்
பொருட்டு
அதை
நினைந்து
வந்தேன்.
நின்னேடு
ஒப்பார்
இல்லாத
ஞானமுடையவனே!"
என்று
தொடங்கி,
நீ
உள்ளத்தே
கொண்ட
எண்ணத்தைச்
சொல்வதற்கு
முன்னே
நீ
நினைத்ததை
உணர்ந்து
உடனே
வேறு
பல
உருவங்களை
யுடைய
குறிய
பல
ஏவலாளர்,
விழா
நடத்தும்
களத்தில்
சிறப்புண்டாகும்படியாகத்
தோன்றி,
”இவன்
இரங்கத்
தக்கான்,
அறிவு
வாய்ந்த
யாசகன்;
ஈகையால்
வந்த
நின்
புகழைக்
கேட்டு
விரும்பி
இனி
யனவும்
நல்லனவுமாகிய
திரு
நாமங்களை
நன்றாகப்
பலபலவாகச்
சொல்லித்
துதித்து
வந்தான்,
பெருமானே!"
என்று
சொல்ல,
தெய்வத்தன்மை
அமைந்த
வலிமை
விளங்கும்
திருவுருவத்தோடு
ஆகாயத்தை
அளாவிய
உயரத்தையுடைய
அப்
பெருமான்,
உனக்கு
அருள்
செய்யும்பொருட்டு
அங்கே
வந்து,
காண்பாருக்கு
வருத்தத்தைத்
தரும்
அந்த
நெடிய
உருவத்தை
மறைத்துப்
பழையதாக
உள்ள
தன்
மணம்
கமழும்
தெய்வத்
தன்மையும்
இளமையும்
அழகும்
உடைய
வடிவத்தைக்
காட்டி,
"அஞ்சுவதை
விட்டுவிடு:
உன்
வரவை
முன்பே
அறிவேன்’
என்று
அன்புடைய
நல்ல
வார்த்தைகளைச்
சொல்லி,
என்றும்
அழிவில்லாமல்
இருக்கும்படியாக,
இருண்ட
கரிய
நிறம்பெற்ற
உலகத்தில்
நீ
ஒருவனே
தலைவனாகத்
தோன்றும்படி,
யாவற்றினும்
சிறந்த,
பெறுவதற்கரிய
பரிசிலாகிய
வீடுபேற்றை
வழங்குவான்;
பல
சிற்றருவிகள்
ஒருங்கே
பல
வெவ்வேறு
துகிற்கொடிகளைப்போல
வளைந்து
அசைந்து,
அகிலைச்
சுமந்து,
சந்தன
மரத்தை
உருட்டி,
சிறு
மூங்கிலின்
பூவுடைய
அசைகின்ற
கொம்பு
பூவில்லாமல்
தனிப்பு
அதன்
வேரைப்
பிளந்து,
வானுலகத்தைத்
தொடுகின்ற
உயர்ந்த
மலையில்
சூரிய
மண்டலத்தைப்போல
ஈயால்
வைக்கப்பட்ட
தண்ணியவாய்
மணக்கின்ற
பரந்த
தேன்
கூடுகள்
சிதைய,
நல்ல
பல
வேர்ப்பலாவின்
முற்றிய
சுளை
விழுந்து
கலக்க,மேலே
உள்ள
சுரபுன்னை
மரத்தின்
வாசனை
மிக்க
மலர்கள்
உதிர,
கருங்
குரங்குகளோடு
கரிய
முகத்தையுடைய
முசுக்கலைகள்
நடுங்கவும்
பூவைப்போன்ற
புள்ளிகளையுடைய
மத்தகத்தைப்
பெற்றகரிய
பெண்யானைகள்
குளிர்ச்சி
அடையவும்
வீசி,
பெரிய
களிற்றினது
முத்தையுடைய
வெள்ளிய
தந்தங்
களை
வாரிக்கொண்டு,
குதித்து,
நல்ல
பொன்னும்
மணியும்
தம்
நிறம்
வெளிப்படத்
தோன்றுமாறு
செய்து,
பொன்னைக்
கொழித்து,
வாழையின்
அடிமரம்
முறியவும்,
தென்னையின்
பெரிய
இளநீர்க்
குலைகள்
உதிரவும்
தாக்கி,
மிளகு
கொடியின்
கறிய
காய்க்கொத்தானது
சாயும்படியாக,
பொறிகளை
மேலே
உடையனவும்,
மெல்ல
நடக்கும்
நடையை
உடையனவுமாகிய
மயில்கள்
பல
ஒருங்கே
அஞ்சவும்,
காட்டுக்
கோழியின்
வலிமையையுடைய
பெடை
ஓடிப்
போகவும்,
காட்டுப்
பன்றியோடு
கரிய
புனையின்
உள்ளிட்டில்
உள்ள
மெல்லிய
சிலாம்பைப்
போன்ற
நிறம்
பெற்ற
மயிரையுடைய
உடம்போடு
கூடிய
வளைந்த
அடியைப்
பெற்ற
கரடிகள்
பெரிய
பாறையின்
பிளப்பிலே
உள்ள
குகையிலே
புகுந்து
அடங்கவும்,
கரிய
கொம்பையுடைய
காட்டுப்
பசுவின்
நல்ல
காளை
முழங்கவும்
மலையின்
உச்சியிலிருந்து
இழுமென்ற
ஓசையோடு
இறங்கி
வருகின்ற
அருவியை-யுடைய
பழமுதிர்சோலை
மலைக்கு
உரியவனாகிய
முருகன்.
------------
வெண்பாக்கள்
குன்றம்
எறிந்தாய்
குரைகடலில்
சூர்தடிந்தாய்
புள்தலைய
பூதப்
பொருபடையாய்-என்றும்
இளையாய்
அழகியாய்
ஏறுர்ந்தான்
ஏறே
உளையாய்என்
உள்ளத்து
உறை.
கிரவுஞ்ச
மலையை
வேலால்
எறிந்து
அழித்தவனே,
முழங்கும்
கடலிலே
புகுந்து
ஒளித்த
சூரபதுமனைச்
சங்காரம்
செய்தவனே,
சிவந்த
தலையையுடைய
பூதங்களாகிய
போர்
புரியும்
சேனையை
உடையவனே,
என்றும்
இளமையை
உடையவனே,
என்றும்
அழகாக
இருப்பவனே,
இடபத்தை
வாகனமாகக்
கொண்டு
உலாவரும்
பரமசிவனுடைய
ஆண்
சிங்கம்
போள்ற
குமாரனே,
நீ
என்றும்
என்
உள்ளத்திலே
தங்கியிருப்பவனாக
வாசம்
செய்வாயாக.
(1)
குன்றம்
எறிந்ததுவும்
குன்றப்போர்
செய்ததுவும்
அன்றங்கு
அமரர்இடர்
தீர்த்ததுவும்-இன்றென்னைக்
கைவிடா
நின்றதுவும்
கற்பொதும்பிற்
காத்ததுவும்
மெய்லிடா
வீரன்கை
வேல்.
கிரவுஞ்ச
மலையை
எறிந்து
பொடிபடுத்தியதும்,
பகை
வரது
வலிமை
குன்றும்படியாகப்
போர்
செய்ததும்,
சூரனால்
துன்புற்ற
அக்காலத்தில்
தேவலோகத்தில்
இருந்த
தேவர்களின்
துன்பத்தைப்
போக்கியதும்,
இன்று
என்னைக்
கைவிடாமல்
நின்றதும்,
நக்கீரர்
முதலியவர்களை
மலைக்குகையிலே
பாதுகாத்ததும்
சத்தியத்தை
நீங்காமல்
இருக்கும்
வீரனாகிய
முருகனது
திருக்கரத்தில்
உள்ள
வேலே
யாகும்.
(2)
வீரவேல்
தாரைவேல்
விண்ணோர்
சிறைமீட்ட
தீரவேல்
செவ்வேள்
திருக்கைவேல்-
வாரி
குளித்தவேல்
கொற்றவேல்
சூர்மார்பும்
குன்றும்
துளைத்தவேல்
உண்டே
துணை.
வீரத்தையுடைய
வேல்;
நீளமான
வேல்;
தேவர்களைச்
சிறையினின்றும்
விடுவித்த
தீரம்
பொருந்திய
வேல்:
செவ்வேளின்
திருக்கரத்திலுள்ள
வேல்;
சமுத்திரத்திலே
புகுந்து
மூழ்கிய
வேல்;
வெற்றியைத்
தரும்
வேல்;
சூரனுடைய
மார்பையும்
கிரவுஞ்ச
மலையையும்
துளைத்த
வேல்
எனக்குத்
துணையாக
உள்ளது.
. (3),
இன்னம்
ஒருகால்
எனதிடும்பைக்
குன்றுக்குக்
கொன்ன
வில்வேற்
சூர்தடிந்த
கொற்றவா-முன்னம்
பணிவேய்
நெடுங்குன்றம்
பட்டுருவத்
தொட்ட
தனிவேலை
வாங்கத்
தகும்.
கொலைத்
தொழிலிலே
பயின்ற
வேலையுடைய
சூரனைச்
சங்காரம்
செய்த
தலைவனே,
முன்பு
பனியால்
மூடப்
பட்ட
உயர்ந்த
கிரவுஞ்சகிரியின்மேல்
பட்டு
ஊடுருவும்
படியாகப்
பிரயோகம்
செய்த
ஒப்பற்ற
நினது
வேலாயுதத்தை
இன்னும்
ஒருமுறை
என்னுடைய
துன்பமாகிய
மலை
பட்டுருவும்
படியாகவும்
பிரயோகம்
செய்வது
பொருத்தமாக
இருக்கும்.
(4)
உன்னே
ஒழிய
ஒருவரையும்
நம்புகிலேன்
பின்ன
ஒருவரையான்
பின்செல்லேன்-பன்னிருகைக்
கோலப்பா
வானோர்
கொடியவினை
தீர்த்தருளும்
வேலப்பா
செந்தி
வாழ்வே.
பன்னிரண்டு
திருக்கைகளோடு
கோலங்கொண்ட
அப்பனே,
தேவர்களுடைய
கொடிய
பாவங்களைப்
போக்கி
அருள்
செய்யும்
வேலாயுதக்
கடவுளே,
செந்தூரில்
எழுந்தருளியிருக்கும்
பெருமானே,
அடியேன்
உன்னேயன்றி
வேறு
ஒருவரையும்
எனக்குத்
துணையாக
நம்பமாட்டேன்:
வேறு
ஒருவரையும்
வழிபடமாட்டேன். (5).
அஞ்சு
முகம்
தோன்றின்
ஆறு
முகம்தோன்றும்
வெஞ்சமரில்
அஞ்சல்என
வேல்தோன்றும்-நெஞ்சில்
ஒருகல்
நினைக்கின்
இருகாலும்
தோன்றும்
முருகாவென்று
ஒதுவார்
முன்.
முருகா
என்று
எப்போதும்
ஒதுகின்ற
அடியார்களுக்கு
முன்னலே,
அவர்கள்பால்
பயப்படுகின்ற
முகம்
காணப்படின்
முருகனுடைய
ஆறுமுகமும்
அதனைப்
போக்கத்
தோன்றும்;
கொடிய
போரில்
பயப்படாதே
என்று
வேலாயுதம்
தோன்றும்;
மனத்தில்
ஒரு
முறை
தியானித்தாலும்
முருகனுடைய
இரண்டு
திருவடிகளும்
தோன்றும்.
(6).
முருகனே
செந்தி
முதல்வனே
மாயோன்
மருகனே
ஈசன்
மகனே-ஒருகைமுகன்
தம்பியே
நின்னுடைய
தண்டைக்கால்
எப்பொழுதும்
நம்பியே
கைதொழுவேன்
நான்.
முருகா,
திருச்செந்தூர்
ஆண்டவனே,
திருமால்
மருகனே,
சிவகுமாரனே,
துதிக்கையை
முகத்திலே
உடைய
விநாயகருக்கு
இளவலே,
அடியேன்
உன்னுடைய
தண்டையை
அணிந்த
திருவடியையே
பற்றுக்கோடாக
நம்பி
எப்பொழுதும்
கும்பிடுவேன். (7)
காக்கக்
கடவியனீ
காவாது
இருந்தக்கால்
ஆர்க்குப்
பரமாம்
அறுமுகவா
-
பூக்கும்
கடம்பர்
முருக
கதிர்வேலா
நல்ல
இடங்காண்
இரங்காய்
இனி.
ஷண்முகா,
மலர்ந்த
கடம்ப
மாலையை
அணிந்தவனே,
முருகா,
சுடர்
விடும்
வேலாயுதக்
கடவுளே,
என்னைக்
காப்பாற்றும்
கடமையையுடைய
நீயே
காவாமல்
இருந்து
விட்டால்,
என்னைக்
காக்கும்
பொறுப்பு
யாருக்கு
உரியதாகும்?
நீ
இரங்கி
அருளுவதற்கு
ஏற்ற
பாத்திரமாகிய
நல்ல
இடம்
இது.
இனிமேல்
கருணைபுரிவாயாக. (8)
பரங்குன்றிற்
பன்னிருகைக்
கோமான்றன்
பாதம்
கரங்கூப்பிக்
கண்குளிரக்
கண்டு
-
சுருங்காமல்
ஆசையால்
நெஞ்சே
அணிமுருகாற்
றுப்படையைப்
பூசையாக்
கொண்டே
புகல்.
நெஞ்சே,
திருப்பரங்குன்றத்தில்
எழுந்தருளியிருக்கும்
பன்னிருகைப்
பெருமாளாகிய
முருகன்
திருவடிகளைக்
கரங்குவித்துக்
கும்பிட்டுக்
கண்
குளிரும்படியாகத்
தரிசித்து,
குறைவில்லாமல்
பெருகிய
ஆர்வத்தோடு
அழகையுடைய
திருமுருகாற்றுப்படையை
பூசையாக
எண்ணிக்
கொண்டு
பாராயணம்
செய்வாயாக.
(9)
நக்கீரர்
தாம்உரைத்த
நன்முருகாற்றுப்படையைத்
தற்கோல
நாள்தோறும்
சாற்றினால் -முற்கோல
மாமுருகன்
வந்து
மனக்கவலை
தீர்த்தருளித்
தான்நினத்த
எல்லாம்
தரும்.
நக்கீரர்
திருவாய்மலர்ந்த
நல்ல
திருமுருகாற்றுப்
படையைத்
தன்னைப்
பாதுகாக்கும்
பொருட்டுத்
தினந்தோறும்
ஒருவன்
பாராயணம்
செய்தால்,
பெருமையையுடைய
முருகக்கடவுள்
முன்னாலே
பாதுகாக்க
எழுந்தருளி
வந்து
உள்ளத்
துயரத்தைப்
போக்கியருளி,
அவன்
கருதிய
எல்லாவற்றையும்
வழங்கியருள்வான். (10)
-----------
|