முகவுரை

 

பழைய நகைக்குப் புதிய மெருகு கொடுப்பது வழக்கம். நகையின் மதிப்பு எப்போதும் மாறாமல் இருந்தாலும் அதைக் கண்ணிலே படும்படி செய்வது மெருகு. இலக்கியங்களிலும் உரைகளிலும் இலைமறை காய் போலவும் வெளிப்படையாகவும் அரிய நிகழ்ச்சிகள் பல உள்ளன. அவற்றை இந்தக் காலத்துக்கு ஏற்ற தோரணையில் சிறுகதையைப் போல ஆக்கினால் சுவையாக இருக்கும் என்ற கருத்தினால் எழுதி வந்தவை இத்தொகுதியிலே காணும் வரலாறுகள். இத்துறையில் என் ஆசிரியப் பிரானாகிய மகாமகோபாத்தியாய டாக்டர் .வே.சாமிநாதையரவர்கள் முன்பே வழி காட்டியிருக்கிறார்கள் என்பதைத் தமிழர் நன்கு அறிவார்கள்.

இதிலுள்ள வரலாறுகளை அப்படியே சரித்திரமாகக் கொள்ளல் கூடாது. சிறிய உருவத்திலே கண்ட மூலக்கருவைக் கற்பனை வண்ணம் கொண்டு பெரிது படுத்தியவையாதலால் இவை முழுச் சரித்திரமும் அல்ல; முழுக் கற்பனைக் கதைகளும் அல்ல.

அவ்வப்போது கலைமகளிலும் பிற பத்திரிகைகளிலும் வெளியானவை இவை.
 

கி.வா.ஜகந்நாதன்

----------------------

 

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)