புடலங்காய்
கலாநிதி பால. சிவகடாட்சம் Ph.D (London)
இற்றைக்கு
இருநூறு வருடங்களுக்கு
முன்னர் யாழ்ப்பாணத்தில் இருபாலை என்னும் இடத்தில் வாழ்ந்த ஆயுள்வேத
மருத்துவ அறிஞர் ஒருவர் இருபாலைச் செட்டியார் என்று அறியப்பட்டார். இவர்
ஆக்கிய தமிழ் மருத்துவ நூல்களுள் ஒன்றான ‘பதார்த்த சூடாமணி’ நாம்
உணவாக உட்கொள்ளும் காய்கறிகள், கீரைகள் மற்றும் இறைச்சி வகைகளின்
குணங்கள் பற்றிக் கூறுவதாகும். மேற்படி நூல்
புடலங்காயைப்பற்றி
என்ன சொல்கிறது.......
போகம்விளையும் பொருந்திவளரும் ஐயம்
ஆகமதிற் பித்தம் அணுகுங்காண் - மேக
புடலங் கவியகப் பாவாய் கேள் நாளும்
புடலங்காய்க் குள்ள புகழ்.
- பதார்த்தகுணசிந்தாமணி
நீரிழிவு நோயாளர் தாராளமாகச்
சாப்பிடக்கூடிய மற்றுமொரு காய்கறி புடலங்காய். மிகவும் குறைந்த கலோரி
பெறுமானமுடைய இந்தக்காய்கறி போதுமான ஊட்டச்சத்துக்கள் கொண்டது.
நார்ச்சத்துடன் கூடவே வைட்டமின் A, B, C
என்பனவும் மங்கனீஸ், பொட்டாசியம் இரும்பு அயோடைன் என்னும் கனிமங்களும்
இந்தக்காய்கறியில் உள்ளன.
தலையில் பொடுகு உள்ளவர்கள் புடலங்காய்ச் சாற்றைத் தலையில்
தேய்த்துக்கொள்வதன் மூலம் தலையில் பொடுகை நீக்குவதுடன் மீண்டும் பொடுகு
வராமலும் தடுக்கமுடியும்.
Snake gourd
என்பது புடலங்காயின் ஆங்கிலப்பெயர்.
Trichosanthes anguina
L. என்பது இதன் தாவரவியற்பெயர்.
|