தான்றிக்காய்

கலாநிதி பால. சிவகடாட்சம் Ph.D (London)



மாணிக்காமாம் மேனி மந்தம் போம் வாதம் போம்
பேணிக்குணம் பேணுவார்பிணி போக்கும் - தாணிக்காய்
தாரணியிலுள்ளோர்க்குத் தாதுபெலனுண்டாக்கும்
சீரணியு மாதே சிறந்து


இதன் பொருள்: உடலுக்கு அழகையும் ஒளியையும் கொடுக்கும். மந்தம், வாதம் என்பவற்றை போக்கும். விந்து நட்டத்தைப்போக்கி வீர்யத்தைக் கொடுக்கும்.

மேலதிகவிபரம்: தான்றிக்காயும் அதன் பருப்பும் பல்வேறு ஆயுர்வேதத் தயாரிப்புகளில் இடம்பெறுகின்றன. கண்வியாதிகள் சிலவற்றுக்குப் பயன்படுத்தப்பெறும் மருந்துத் தயாரிப்புக்களில் தான்றிக்காய் முக்கிய இடம்பெறுகின்றது. விதையில் இருந்துபெறப்படும் எண்ணெய் கூந்தலைச் செழிக்கவைக்கின்றது. மூட்டுவாதத்துக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.



Figure 2 Belleric myrobalan (தான்றிக்காய்)

Belleric myrobalan என்பது தான்றிக்காயின் ஆங்கிலப்பெயர்.

Bahera என்பது இதன் வர்த்தகப் பெயர்
(trade name).

Terminalia bellerica ROXB. என்பது இதன் இலத்தீன் விஞ்ஞானப் பெயர்.
 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்