தர்ப்பூசணி அல்லது வத்தகப்பழம் (Water melon)

கலாநிதி பால.சிவகடாட்சம்

ற்றைக்கு இருநூறு  வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருபாலை என்னும் இடத்தில் வாழ்ந்த ஆயுள்வேத மருத்துவ அறிஞர் ஒருவர் இருபாலைச் செட்டியார் என்று அறியப்பட்டார். இவர் ஆக்கிய தமிழ் மருத்துவ நூல்களுள் ஒன்றான ‘பதார்த்த சூடாமணி’ நாம் உணவாக உட்கொள்ளும் காய்கறிகள், கீரைகள் மற்றும் இறைச்சி வகைகளின் குணங்கள் பற்றிக் கூறுவதாகும். மேற்படி நூல் தர்ப்பூசணி அல்லது வத்தகப்பழத்தைப்பற்றி என்ன சொல்கிறது.......

வத்தகப் பழம் குளிர்ச்சி மன்னிடும் பைத்தியம்போம்
சத்திபோம் பித்தந் தீருந் தவறிலாக் கொடியீ தல்லால்
ஒத்த கக்கரியும் வெம்மை யொழித்துச் சீதளமுண்டாக்கும்

                                                                                               - பதார்த்த சூடாமணி

ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பூக்கும் தாவரம். இதன் பழம் தர்ப்பூசணி அல்லது வத்தகப்பழம் என அழைக்கப்படும். இது வெளிப்புறத்தோல் பகுதி பச்சை, மஞ்சள், சிலவேளை வெள்ளையாகவும், அதன் உட்புறம் சாறாகவும் இனிப்பான சதைப்பகுதியைக் கொண்டு, சிவப்பிலிருந்து மென்சிவப்பாகவும் சிலவேளை மஞ்சளாகவும், பழுக்காதபோது பச்சையாகவும் காணப்படும். கோடைகாலத்தில் சாப்பிடுவதற்கு நல்லது. தாகத்தைத் தணிக்கும். உடல் சூட்டைக் குறைக்கும்.

Watermelon என்பது தர்ப்பூசணியின் ஆங்கிலப்பெயர்.
 
Citrullus lanatus (THUNB.) MATSUMARA & NAKAI என்பது இதன் தாவரவியற்பெயர்.


 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்