கொத்தமல்லி
கலாநிதி பால.சிவகடாட்சம்
கொத்தமல்லிவெட்டைகுளிர்காய்ச்சல்வாய்வுடனே
இத்தனையும்போக்கும் இதங்கொடுக்கும்-உத்தமமாம்
கண்ணுக்குக்காந்தியாம் கடுகியரோசியம்போம்
மண்ணுக்குமேல் நல்ல மருந்து
இதன் பொருள்: கொத்தமல்லிக்கு
குளிர்காய்ச்சல் வாய்வு, என்பன தீரும். கண்ணுக்கும் ஒளியைக்கொடுக்கும்.
மண்ணில் கிடைக்கக்கூடிய நல்ல மருந்துஇது.
கொத்தமல்லிக்கு வெப்புக்குலையும் பழசுரம்போம்
சத்திவிக்கல்தாகம் தனைப்போக்கும்-பித்தமறும்
மந்தம்தனைப்போக்கும் வாயுவிகாரம்போக்கும்
செந்திருவே இக்குணத்தைச் செப்பு
இதன் பொருள்: கொத்தமல்லிக்கு
உடற்சூடு காய்ச்சல், சத்தி, விக்கல், தாகம் என்பன தீரும். பித்தம்
இல்லாதொழிந்துவிடும். மந்தம் மற்றும் வாய்வினால் ஏற்படும் பிரச்சனைகளைக்
குறைக்கும்.
Coriander
(கொத்தமல்லி)
Cilantro
(கொத்தமல்லிக்கீரை)
மேலதிக விபரம்: வைட்டமின்
K, வைட்டமின்
A, மற்றும் வைட்டமின்
C சத்துக்கள் நிறைந்த தாவர
உணவுகளில் கொத்தமல்லிக் கீரையும் ஒன்று.
இரசவர்க்கத்தில் கொத்தமல்லி கண்ணுக்கும் காந்தி (ஒளி) தரும் என்று
கூறப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். வைட்டமின்
A கண்களின் விழிவெண்படலத்தைப்
(cornea) பாதுகாப்பதன் மூலம்
கண்களின் பாதுகாப்பை உறுதிசெய்கிறது. ஆரோக்கியமான சளியமென்
சவ்வுகளினதும் சருமத்தோலினதும் ஆரோக்கியத்துக்கும் வைட்டமின்
A அவசியமாகும்.
எலும்பின் அடர்த்திக் குறைவினால் ஏற்படும் ஒஸ்ரியோபொறோசிஸ்
(osteoporosis)ஐக்
கட்டுப்படுத்தும் வைட்டமின்
K கொத்தமல்லிக் கீரையில் அதிக
அளவில் காணப்படுகிறது. முதியவர்களுக்கு எலும்பின் அடர்த்தி
படிப்படியாகக் குறைவதனால் கூன் விழுதல். எலும்பு நோவு, எலும்புமுறிவு
போன்ற பிரச்சனைகளுக்கு இவர்கள் உள்ளாக நேரிடுகின்றது மாதவிடாய்
நின்றுவிட்ட பெண்களுக்கு, குறிப்பாக ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
இது ஒரு பிரச்சனையாக உருவெடுக்கலாம். இவர்கள் தமது உணவில் சேர்த்துக்
கொள்ள வேண்டிய கீரைவகைகளுள் கொத்தமல்லிக்கீரையும் ஒன்று.
பொது ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு எமக்குத்தேவையான வைட்டமின்
C அளவின்
30 சதவீதத்தை
100 கிராம் கொத்தமல்லிக்கீரையில்
இருந்து பெற்றுக்கொள்ளமுடியும்.
செமியாக்குணம், பித்தத்தினால் ஏற்படும் வாந்தி, தலைச்சுற்று
என்பவற்றுக்கும் கொத்தமல்லிக்கீரை மருந்தாகும். இதன் வலுவான
ஒட்சிஎதிர்ப்புக்
(antioxidant) குணங்கள் ஈரலின்
செயற்பாட்டை ஊக்குவிக்கும் என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன.
நல்ல கொலெஸ்ரறோலைப்
(HDL cholesterol)
பாதிக்காது கெட்ட கொலெஸ்ர றோலை
(LDL cholesterol)
மாத்திரம் குறைக்கும் குணம்
கொத்தமல்லிக்கு உள்ளது.
கொத்தமல்லி விதையை 'தானியா' என்று குறிப்பிடுவது இந்தியர்களின் வழக்கம்.
குளிர்காய்ச்சலுக்கு அல்லது தடுமலுடன் கூடிய காய்ச்சலுக்கு
கொத்தமல்லியும் (தானியா) இஞ்சியும் சேர்த்துக் காய்ச்சிய குடிநீர்
மருந்தாகும். சரக்குத்தூளில்
(curry powder) கொத்தமல்லியும்
தவறாமல் சேர்க்கப் படுவதுண்டு. இந்தியர்கள் தமது சமையலின் முடிவில்
கறிகளில் கொத்தமல்லிக் கீரையைச் சுவையூட்டியாகச் சேர்த்துக்கொள்ளத்
தவறுவதில்லை.
கொத்தமல்லிக் கீரையை சிலன்ரோ
(cilantro) என்னும் பெயரில் கனடா
உட்பட மேலைத்தேய நாடுகளில் அனைத்து பலசரக்கு மற்றும் காய்கறிக்
கடைகளிலும் பெற்றுக்கொள்ளமுடியும்.
Coriandar
மற்றும்
Cilantro
என்பவை கொத்தமல்லியின் ஆங்கிலப்பெயர்கள்.
Dhanaiya
என்பது இதன் வர்த்தகப் பெயர்
Coriandrum sativum L.
என்பது இதன் இலத்தீன்
விஞ்ஞானப்பெயர்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|