தைராய்டால் கசக்கும் திருமண வாழ்க்கை
முனைவர் செ.இராஜேஸ்வரி
கணவனை
அலட்சியப்படுத்துதல் புகுந்த வீட்டாரோடு எந்நேரமும் முகம் சுளித்தல்
வியர்த்து வழிதல் நெஞ்சில் படபடப்பு தன்னிலை இழந்து பைத்தியக்காரி போல
கத்துதல் என்று புதுமணப்பெண்கள் முறையின்றி நடந்து கொள்வதற்கு முக்கிய
காரணம் மனிதர்கள் அல்ல. அப்பெண்களுக்கு இருக்கும் தைராய்டு பிரச்சனை
என்பது பலருக்கும் தெரிவதில்லை. பெண்ணின் தாய்வீட்டாரும் தன் பெண்ணை
மாப்பிள்ளை வீட்டார் பாடாய் படுத்துகிறார்களே என்று புலம்பி தவித்து
பிரச்சனையை விஸ்வரூபமாக்கி விவாகரத்து வரை வந்துவிடுகிறார்கள். இனறைக்கு
விவாகரத்து குறித்து வக்கீல்களை கேட்டால் தந்தையை விட தாய்மாரே தம்
பெண்களுக்கு விவாகரத்து வாங்கித் தருவதில்மும்முரமாக இருக்கின்றனர்
என்று தெரிவிக்கின்றனர். திருமணமாகி மூன்று மாதங்களுக்குள் பலர்
விவாகரத்து பெறுவதில் முனைப்பாக செயல்படுகின்றனர். இத்ற்கு காரணமாக்
உள்ள தைராய்டு பிரச்சனை குறித்து விளக்கமாக காண்போம்.
வயதுக்கு வரும்போது
தைராய்டு
பிரச்சனை பெண்கள் வயதுக்கு வரும்போதே தலை காட்ட ஆரம்பித்துவிடுகிறது.
மாதாமதம் ஒழுங்காக இவ்பர்களுக்கு மாதவிடாய் வராது. அதை இப்பெண்களின்
தாய்மார் சாப்பிடாமல் இருப்பதால் சத்தில்லாமல் இருக்கிறாள் என்று காரணம்
காட்டி பிரச்சனையை அறியாமல் இருந்துவிடுகின்றனர். தாய்மாரின் இந்த
அறியாமையே மகள்களின் திருமணவாழ்க்கைக்கு யமனாக் வந்துவிடுகிறது.
ஒழுங்கற்ற மாதவிலக்கு ஒர் உடலியல் பிரச்சனை அதற்கு தக்க மருத்துவரிடம்
காட்டி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
சில இளம்பெண்களுக்கு வெள்ளைபடுதல் பெரிய பிரச்சனையாக் இருக்கிறது.
இதற்கும் தாய்மார் உடலில் உஷ்ணம் அதிகரித்துவிட்டது என்று காரணம் சொல்லி
மருத்துவரிடம் காட்டாமல் தவிர்த்துவிடுகின்றனர். கைமருந்து கொடுத்து
சுகமாக்க முயன்று தோற்று போகின்ற்னர். இது பின்னர் பெரிய பிரச்சனையாகி
கருப்பை அகற்றுதல் கருப்பைவாய் புற்று நோய் என்றளவிற்கு
கொண்டுவந்துவிடுகிறது. பள்ளிகளிலும் பெண்களுக்கு வரும் நோய்கள் குறித்து
சரிவர கற்றுத் தருவதும் இல்லை.
தைராய்டு சுரப்பி
இனி இந்த மணப்பிரச்சனைகளுக்கு காரனமான தைராய்டு சுருப்பு பற்றி சற்று
விரிவாக காண்போம். தைராய்டு சுரப்பி அள்வுக்கு அதிகமாக சுரந்தால் அதை
ஹைப்பர் தைராய்டு என்பர் குறைவாக சுரந்தால் ஹய்ப்போ தைராய்டு என்பர்.
அலவுக்கு மிஞ்சினால் அமிர்தமே நஞ்சாகும் போதி தைராய்டு மட்டுமென்ன
விதிவிலக்கா?
தைராய்டு அதிகமாக சுரத்தலின் விளைவு
தைராய்டு அதிகமாக சுரந்தால் அந்தப் பெண்கள் எப்போது ஒரு வித படபடப்போடு
ரெஸ்ட்லெஸ்ஸாக இருப்பார்கள். அவர்களுக்கு அதிகமாக வியர்க்கும் சிலருக்கு
உள்ளங்கை உள்ளங்கால் கூட வியரக்கும். அவர்களின் தலைமுடி மெலிந்து போய்
வலுவின்றி இருக்கும். நகங்கள் அடிக்கடி உடைந்துவிடும் . மெலிவாக தட்டை
குச்சி போல தோன்றுவார்கள். சிலருக்கு [எல்லோருக்கும் அல்ல] கண்கள் சற்று
வெளியே துருத்திக் கொன்டிருக்கும்.
அப்போது பெற்றோருக்கு தன் மகளுக்கு தைராய்டு பிரச்சனை இருப்பது தெரியாது..
எதிலும் பிடிப்பின்றி இருப்பார்கள். எல்லோரையும் கடுமையாக விமர்சனம்
செய்வார்கள் அவ்வாறு பேசும்போது படபடப்பாக பேசுவார்கள். சில சமயம்
கைகால் நடுக்கமும் இருக்கும் இவற்றை பெற்றோர் சீரியசாக
எடுத்துக்கொள்வதில்லை. புகுந்த வீட்டில் இப்படி பேசினால் என்ன விளைவுகள்
ஏற்படும் என்று பெற்றோர் சிந்திப்பதில்லை. செல்லமாக வளர்ப்பதாக
நினைத்துக்கொண்டு பெண்களின் நோயாளித்தனத்தை வளர்த்துவிடுவார்கள்.
தைராய்டினால் கண்ணும் பல்லும் கூட பாதிக்கப்படும் இதையும் இவர்கள்
யாரும் புரிந்துகொள்வதில்லை.
தைராய்டு குறைவாக சுரப்பதன் விளைவு
ஹைராய்டு சுரப்பி சராசரி அளவுக்கும் குறைவாக சுரந்தால் அப்பெண்களுக்கு
அடிக்கடி சளி பிடிக்கும். ஃபேன் காற்றில் இருப்பதைக்கூட தவிர்ப்பார்கள்
குளிர் எடுக்கும். நினைவாற்றல் குறைந்துவிடும் எதையும் உடனுக்குடன்
மறந்துவிடுவார்கள். இவர்களின் குரல் கரகரப்பாக இருக்கும்.
திருமணத்துக்கு முன்பே இப்பெண்களுக்கு தலையில் பொடுகு தொல்லை அதிகம்
இருக்கும். முடி வறண்டு காணப்படும் கண்புருவம் அடர்த்தியாக இருக்காது
பாதத்தில் பித்த வெடிப்புகள் இருக்கும். முகப்பரு நிறைய வரும்.
பெரும்பாலும் தங்களை அழகுபடுத்தி கொள்வதில் அதிக நேரம்
செலவ்ழித்திருப்பார்கள்
தைராய்டு சுரப்பு குறைவாயிருக்கும் பெண்களுக்கு மலச்சிக்கல் இருக்கும்.
இது ஒரு தொந்தரவு. எப்போதும் மலம் கழிக்க வேண்டும் போன்ற உணர்விருக்கும்
ஆனால் கழிவறைக்கு போனால் மலம் கழிக்க வராது. இதனால் இந்தப் பெண்கள்
எரிச்சலோடு பேசுவார்கள் எதையும் தூக்கி எறிவார்கள் மன அழுத்தம் அதிகமாகி
சில நேரம் ஓவென்று அழுது ஆர்ப்பாட்டம் செய்வார்கள். இந்த அழுகையின்
காரணம் புகுந்த வீட்டாருக்கும் புரியாது. இப்போது என்ன நடந்துவிட்டது
என்று இந்தப்பெண் இப்படி அழுது ஊரைக்கூட்டுகிறாள் என்று
கோப்பப்டுவார்கள். மன அழுத்தத்தால் இப்பெண் தவிக்கிறாள் என்பது
எவருக்கும் தெரியாது. இதயத் துடிப்பு குறைவாக இருக்கும். எடை
கூடிக்கொண்டே போகும். ஆனால் உடம்பில் எந்த வேலை செய்வதற்கும் தெம்பு
இருக்காது. சோர்வாக இருக்கிறது என்று இவர்கள் சொன்னால் யாரும் நம்ப
மாட்டார்கள். பார்க்க புஷ்டியாக தெரிவதால் இவர்கள் வேலை செய்யாமல்
இருக்க சோர்வை பொய்காரணம் காட்டி ஏமாற்றுவதாகவே மற்றவர் கருதுவர்.
இதனாலும் புகுந்த வீட்டில் பல பிரச்சனைகளை இவர்கள் சந்திப்பார்கள்.
கருவளத்தை பாதிக்கும் தைராய்டு
தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கு கருமுட்டை உற்பத்தி ஆகாது. அதனால்
மாதாமாதம் விலக்காக மாட்டார்கள்.மாத விலக்கின்போது சிலருக்கு பொறுக்க
இயலாத வயிற்று வலி இருக்கும் இதற்கு சிலை வலி நிவாரணிகளை பயன்படுத்தி
மேலும் பிரச்சனையை சிக்கலாக்கி கொள்வார்கள். பாலிசிஸ்ட் ஓவரி உண்டாகும்
அதாவது சினைப்பையில் சாக்லேட் கட்டிகள் உருவாகும்.சிறுநீர் பாதையில்
எப்போது அரிப்பும் வலியும் நோய்தொற்றும் இருக்கும். தாம்பத்ய வாழ்வில்
நாட்டம் இருக்காது இதனால் கணவரை பொய்க் காரணம் கூறி விலக்கி வைப்பார்கள்
கணவர் தன்னை இப்பெணணுக்கு பிடிக்கவில்லையோ என்று கருதி
சந்தேகப்படுவார்கள் இதுவும் விவாக ரத்து வரை கொண்டுவந்து விட்டுவிடும்.
தைராய்டு சிகிச்சை
பெண்களின் குடும்ப வாழ்க்கையில் பூகமபம் வீசச் செய்யும் இட்ந ஹைராடுக்கு
எளிய சிகிச்சை அல்லோபதியில் உண்டு. ஆரம்பத்திலேயே நோயின் அறிகுறியை
தெரிந்துகொண்டால் இதற்கு வலி தரும் ஊசியோ செலவு வைக்கும் அறுவை
சிகிச்சையோ தேவையில்லை. ரத்த பர்சிசோதனை செய்து தைராய்டின் [TSH]அளவை
மருத்துவர் அறிந்துகொள்வார். பின்பு தைராக்சின் என்ற மாத்திரையை
பரிந்துரைப்பார். இதை வெறும் வயிற்றில் காபி குடிப்பதற்கு முன்பு
போட்டுக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் இது தான் சிகிச்சை. தைராய்டு
பிரச்சனை அதிகமாகிவிட்டால் அறுவை சிகிச்சை செய்வதுண்டு.
ஹஷிமோதோ நோய்
தைராய்டு சுருப்பு கோளாறுகளில் ஹஷிமோதோ நோய் என்பது ஓர் அட்டோ இம்யூன்
நோய் ஆகும் இது பல வருடங்கள் வெளியே தெரியாமல் இருந்து நோய் முற்றிய
பிறகே வெளியே தெரியவரும். அதாவது தன் உறுப்பையே அயல் உறுப்பாக கருதி
அதனை வெளியேற்ற துடிக்கும் ஒரு வகை நோய். தன் உறுப்பை அழிக்க ஏராளமான
எதிர் உயிரிகளை [antibodies] உருவாக்கிவிடும். இவற்றை ரத்த பரிசோதனை
மூலமாக அறிந்து தைராய்டு சுரப்பியின் ஒரு பகுதியை அறுத்து
எடுத்துவிடுவதும் உண்டு. இதனால் தைராய்டு சுரப்பியின் சுரப்புத்தன்மை
குறையும். இது தவிர இதற்கு வேறு சிகிச்சை முறை எதுவும் இல்லை.
ஹஷிமோதோ நோயின் அறிகுறிகள்
ஹஷிமோதோ நோய் தாக்கினால் முகம் பலூன் மாதிரி ஊதிப்போய்விடும்
மலச்சிக்கல் இருக்கும். பெண்கள் மாதாமாதம் வீட்டுக்கு விலக்காக
மாட்டார்கள் இரண்டு மூன்று மாதம் கழித்து வில்க்காகும்போது அதிகளவில்
ரத்தப்போக்கு இருக்கும். கழுத்து வீங்கியிருப்பது போல தெரியும் தோலும்
தலைமுடியும் வறண்டு காணப்படும். மயக்கம் வரும். தீராத கவலை ஒன்று
மனத்தில் அழுத்திக் கொண்டிருப்பது போலவும் வாழ்க்கையில் நிம்மதி
இல்லாதது போலவும் தோன்றும். இதனால் இவர்களுக்கு சக மனிதர்கள் மீது
நம்பிக்கை வராது. யாரைப் பற்றியாவது புலம்பிக் கொண்டேயிருப்பார்கள்.
நிறுத்தாமல் பேசுவார்கள் பிறகு அசந்து போய் விடுவார்கள். இவர்களின் நோயை
தீர்க்காமல் பேசுவதை மட்டும் ஒரு பொருட்டாக கருதினால் குடும்பம்
இரண்டாகிவிடும்.
தைராய்டை குணமாக்க சில வழிகள்
மருத்துவரிடம் சென்று தைராய்டுக்கு சிகிச்சை எடுக்கும்போது மனித உறவுகள்
மேம்படும். பிறந்த வீட்டாருடன் புகுந்த வீட்டரும் சேர்ந்து உறவினர்கள்
எண்ணிக்கையிலும் பகிரும் அன்பிலும் பெருகிவிடுவார்கள் இத்துடன் வேறு
சில விஷ்யங்களிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் தைராய்டு சுரப்பை
மேம்படுத்த ஐயோடின் சிங்க்[zinc] செலெனியம் விட்டமின் டி மற்றும்
விட்டமின் பி சத்துக்கள் அதிகமாகும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். மன
அழுத்தத்தை தவிர்க்க அற்றீனல் சுரப்பை அதிகரிக்க வேண்டும் இத்ர்கு யோகா
கைகண்ட மருந்தாகும். தினமும் சுமார் ஒன்பது மணி நேரம் உறங்க வேண்டும்.
பல் ஓட்டைகளை உலோககலவைகளை வைத்து அடைத்திருந்தால் அதை நீக்கிவிட
வேண்டும் தைராய்டுக்கும் ஃப்லூராய்டு ப்ரோமைடு மற்றும் க்லோரின் ஆகியவை
ஆகவே ஆகாது. இதையும் நினைவில் வைத்துக்கொள்ளூங்கள். தினமும் மலம்
கழித்துவிட வேண்டும். இதை ஏதோ முக்கியமல்லாத விஷ்யமாகக் கருதக்கூடாது.
தைராய்டு பைத்தியம் [Thyroid Madness]
தைராய்டு பிரச்சனை சிலரை பைத்தியமாக்கிவிடுவதும் உண்டு. தைராடின் கோளாறு
அட்ரீனலின் சுரப்பையும் பாதிக்கும் இதனால் கார்டிசால் அதிகமாகவோ
குறைவாகவோ மாறும்போது மனம் பேதலித்துவிடும். இவர்களின் நடவடிக்கை
பைத்தியக்காரர் போல தோன்றும். ஏன் இந்தப்பெண் இப்படி செய்கிறாள் என்று
வெறுக்கும்படி ஆகிவிடும்.
என்ன செய்ய வேண்டும்?
பெண்கள் வயதுக்கு வந்த பின்பு மாதவிலக்கு பிரச்னைகள் தோன்றினால் உடனே
தைராய்டு பரிசோதனை செய்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்
இல்லையென்றால் பெற்றோரின் அறியாமையால் பெண்பிள்ளைகளின் வாழ்க்கை
பாதிக்கப்படும். தோல்வறட்சி முகம் முழுக்க பரு தலைமுடி எலிவால் போல
இருத்தல் அல்லது மிகவும் அடர்த்தியாக காடு போல வளர்ந்திருத்தல்
பொடுகுதொல்லை சீரணக்கோளாறு மலச்சிக்கல் படபடப்பு அதிகவியர்வை அசாதாரண
இதயத் துடிப்பு போன்றவற்றில் சில அறிகுறிகள் தென்பட்டால் உடனே இரத்த
பரிசோதனை செய்து தைராய்டின் அளவை அறிந்துதெளிய வேண்டும். திருமணத்துக்கு
முன்பே பெண்களை ஆரோக்கியமாக வளர்த்து நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாகக்
கருத வேண்டும். அதன்பின்பு திருமணம் செய்து கொடுத்தால் அவர்களின் மண
வாழ்க்கை உண்மையில் நறுமணம் வீசும் வாழ்க்கையாக அமையும்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|