குழந்தைகள்
மனம் மாசுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
கூட்டுறவு
இணைப் பதிவாளர் ரேணுகாம்பாள் வலியுறுத்தல்.
ஜவ்வாது
மலைவாழ் சிறுவர்களுக்கான கோடைக் கால பயிற்சி முகாம்கள் திருவண்ணாமலை
மாவட்டம் ஜவ்வாதுமலையில் ஜமுனாமரத்தூர், நிம்மியம்பட்டு, அத்திப்பட்டு,
கோவிலூர், கல்யாணமந்தை, வீரப்பனூர் பகுதிகளில் 08.05.2017 அன்று தொடங்கி
தொடர்ந்து ஆறுநாட்கள் 13.05.2017 வரை நடைப்பெற்றது. இந்த முகாம்களை
தொன்போஸ்கோ பழங்குடியினர் வளர்ச்சி சமூகம் ஜமுனாமரத்தூர், வேலூர்
சி.எம்.சி ஆஸ்பத்திரியின் சமூக சுகாதாரத்துறை, வேலூர் ஸ்ரீபுற்று மகரிஷி
சமூக மருத்துவ சேவை மையம், வேலூர் ஸ்ரீபுற்று மகரிஷி நேர்மறை செயலாக்க
சேவை மையம் ஆகியன இணைந்து நடத்தியது.
மூன்றாம் நாள் முகாம் ஜமுனாமரத்துரில் நடைப்பெற்றது. இதில் திருவண்ணாமலை
மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளர் பா.ரேணுகாம்பாள் கலந்து பேசியதாவது.
இன்றைய சுற்றுச்சுழல் மாசுப்பட்டுள்ளது. உறவுச் சூழலும்
மாசுப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் வளரும் குழந்தைகள் தங்கள் உடலையும்
மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள போராட வேண்டியுள்ளது. சுயநலம்,
பொறாமை, அலட்சியம் ஆகியவை இயல்பாகி விட்டன. குழந்தைகளுக்கு இளம் வயதில்
சுயநலமே இருக்காது. அவர்கள் மனம் தெளிந்த நீரோடைப் போல இருக்கும்.
சுற்றி இருப்பவர்கள்தான் குழந்தைகளுக்கு தேவையற்ற குணநலன்களை
வலியுறுத்தி கற்றுத்தருகின்றனர். தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில்
சந்தோஷமாக வாழ வேண்டுமானால் பெற்றோர்கள் அக்குழந்தைகளின் மனங்களில்
மாசுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என இணைப்பதிவாளர் பா.ரேணுகாம்பாள்
பேசினார்.
நிகழ்ச்சிக்கு புதுச்சேரி களவிளம்பர துறை உதவி இயக்குனர் டாக்டர்
தி.சிவக்குமார் இந்த முகாமிற்கு தலைமை தாங்கினார். தொன்போஸ்கோ இயக்குனர்
அருட்தந்தை அமலவினோத் கோடை முகாமின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார்.
முன்னதாக ஜமுனாமரத்தூர் பயிற்சி மையத்தில் காகிதக்கலை வல்லுநர் எ.ஆனந்தி
குழந்தைகளுக்கு காகிதத்தில் தொப்பி, தவளை, பந்து முதலான உருவங்கள்
செய்வதற்கு பயிற்சி அளித்தார். பிற்கு பிற்பகலில் கோவிலூர் பயிற்சி
மையத்திலும் இதே காகிதக்கலை பயிற்சியை காகிதக்கலை வல்லுநர் எ.ஆனந்தி
அளித்தார்.
புதுச்சேரி நாடகக் கலைஞர் எ.அருணா அத்திப்பட்டு பயிற்சி மையத்தில்
குழந்தைகளுக்கு நாடகப் பயிற்சியை அளித்தார். ஓவியர் ப.பாரதிதாசன்
கல்யாணமந்தை கிராமத்தில் நடந்த பயிற்சி மையத்தில் குழந்தைகளுக்கு ஓவியப்
பயிற்சியை அளித்தார். மத்திய அரசின் புதுச்சேரி களவிளம்பர அலுவலகத்தின்
உதவி இயக்குனர் டாக்டர் தி.சிவக்குமார் அவர்கள், வீரப்பனூர் பயிற்சி
மையத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லல், விடுகதை, புதிர்கணக்கு, மூலம்
கற்பனை வளத்தை மேம்படுத்துவது குறித்து பயிற்சி அளித்தார் நிகழ்ச்சியில்
தொன்போஸ்கோ மையத்தின் ஒருங்கினைப்பாளர்கள் மற்றும் இரவுப் பள்ளி
ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் ஒவ்வொரு
பயிற்சி முகாமிலும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|