கோவை சங்கரா கல்லூரி தமிழ்த்துறைத்தலைவருக்கு கேரளாவில் வானமாமலையார்
விருது...

கோவை சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி தமிழ்த்துறைத்தலைவர்
முனைவர் பூ.மு.அன்புசிவா அவர்களுக்கு கேரளாவில் உள்ள திருவனந்தபுரம்
தமிழ்ச்சங்கம் மூலம் 12.01.2020
காலை 10.00
மணிக்கு வனமாமலையார் விருது வழங்கப்பட்டது. இவரது சிறப்பான கல்விப்
பணியை பாராட்டி வானமாமலையார் விருது வழங்கப்பட்டுள்ளது. திருச்சியில்
அமைந்துள்ள இந்திய கல்விசார் ஆய்வு மையம்,
மற்றும் திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் ஏற்பாட்டில் பன்னாட்டுக்
கருத்தரங்கம் நடந்தது. திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்தில் நடந்த
கருத்தரங்க நிகழ்வில் பாலபிரஜாபதி அடிகள் சிறப்பு விருந்தினராக
பங்கேற்றார். இலங்கை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தமிழ்ப்
பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். கோவை சங்கரா
அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி தமிழ்த்துறைத்தலைவர் முனைவர்
பூ.மு.அன்புசிவா அவர்களுக்கு கேரளப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர்
பிரசாத் விருதினை வழங்கி பாராட்டி பேசினார். அருகில் இந்திய கல்விசார்
ஆய்வு மைய தலைவர் முனைவர் செ. பரமசிவம்,
கேரளப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஜெயகிருஷ்ணன்,
அழகப்பா பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு. பாண்டி,
மற்றும் நெல்லை சு. முத்து ஆகியோர் உள்ளனர்.
|