கோவை, சுகுணா கலை மற்றும் அறிவியல்
கல்லூரிகள் நடத்திய 'சிகரம் தொடு' நிகழ்ச்சி
கோவை,
சுகுணா கலை மற்றும் அறிவியல்
கல்லூரியின் சார்பாக
“சிகரம் தொடு”
என்ற நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் காலை
11.00.மணிக்கு நடந்தது. நிகழ்வுக்கு சுகுணா
கல்வி நிறுவனங்களின் தலைவர் திருமிகு வி. லட்சுமிநாராயணன் அவர்கள்
தலைமைதாங்கினார். கலை அறிவியல் முதல்வர் முனைவர் ஆர். கே. வைத்தியநாதன்
அவர்கள் அனைவரையும் வரவேற்றார். இயக்குநர் முனைவர் சேகர் அனைவரையும்
அறிமுகம் செய்து வைத்தார்.
முனைவர் ஸ்ரீகாந்கண்ணன் மைய உறையாற்றினார்
கோவை
மாவட்ட
முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி ப. உஷா அவர்கள் சிறப்பு விருந்தினராக
கலந்து கொண்டு இந்தாண்டுக்கான சிறந்த மாணவர்களுக்கு
“நாளைய நாயகர்கள்”
என்ற விருதை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் கூறும்போது விவேகானந்தர்,
அப்துல்கலாம்,
பாரதி
போன்றோர்களை மேற்கோள் காட்டி நல்ல மாணவர்களை உருவாக்குவது நல்ல
ஆசிரியர்கள் தான் என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். சிகரத்தை தொட
கடுமையாக உழகை;க
வேண்டும். பெற்றோர்களை மதிக்க வேண்டும் என்பதையும்,
தான் படிக்கும் காலத்தில் எவ்வளவு
கஷ்டங்களை அனுபவித்தேன் என்பதையும் எடுத்து கூறினார்.
60க்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும்
ஆசிரியர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். வணிகவியல்
துறைத்தலைவர் முனைவர் நாகலட்சுமி நன்றிரையாற்றனார்.
தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் பூ.மு.அன்புசிவா மற்றும் மேலாண்மைத்
துறைத்தலைவர் முனைவர் எல். இலட்சுமணன்
நிகழ்வை
ஒருங்கிணைத்தனர். பேரா. சுகன்யா,
பேரா.வித்யா,
பேரா.
பிரபாவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
படம்:
முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி ப.உஷா அவர்களுக்கு சுகுணா கல்வி
நிறுவனங்களின் தலைவர் திருமிகு வி. லட்சுமிநாராயணன் அவர்கள் சிறப்பு
செய்த போது எடுத்த படம். அருகில் முனைவர் சேகர்,
முனைவர் ஸ்ரீகாந்கண்ணன்,
கல்லூரி முதல்வர் வைத்தியநாதன்,
முனைவர் அன்புசிவா ஆகியோர் உள்ளனர்.
|