|
|
|
ஆதவன்:
பெயர்:
கே.எஸ்.சுந்தரம்
புனை பெயர்: ஆதவன்
பிறப்பிடம் : கல்லிடைக்குறிச்சி, இந்தியா |
|
படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், நாடகம்.
வெளிவந்த படைப்புக்கள்:-
குறுநாவல்கள்:
- இரவுக்கு முன்பு வருவது மாலை
- சிறகுகள்
- மீட்சியைத் தேடி
- கணபதி ஒரு கீழ்மட்டத்து ஊழியன்
- நதியும் மலையம்
- பெண், தோழி, தலைவி
சிறுகதைகள்:
- கனவுக்குமிழிகள்
- கால் வலி
- ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்
- புதுமைப்பித்தனின் துரோகம்
- முதலில் இரவு வரும்
நாவல்கள்:
- காகித மலர்கள்
- என் பெயர் ராமசேஷன்
நாடகம்:
விருதுகள்:
- 'முதலில் இரவு வரும்' என்ற இவரது சிறுகதைக்காக 1987ஆம் ஆண்டிற்கான
சாகித்ய அகடெமி விருது கிடைத்தது.
இவரைப்பற்றி:
-
1942ம் வருடம்
கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர். அறுபதுகளில் எழுதத்தொடங்கி தமிழ்
சிறுகதை உலகில் பல குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியவர். இந்திய
இரயில்வேயில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறுகு, டெல்லியில் உள்ள 'நேஷனல்
புக் டிரஸ்உன்' தமிழ்ப் பிரிவின் துணையாசிரியராகப் பல ஆண்டுகள்
பணியாற்றியுள்ளார். பின்னர் பெங்களூருக்கு மாற்றலாகி வந்த ஆதவன்
1987 ஆம் ஆண்டு ஜீலை 19ஆம் தேதி சிருங்கேரி துங்கா நதியின் சுழலில்
சிக்கி மரணமடைந்தார். இவரது படைப்புக்கள் பல இந்திய மொழிகளிலும்,
ஆங்கிலம், பிரெஞ்சு உள்ளிட்ட உலக மொழிகளிலும்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
|
|
|
|
|