நிழற்படம் இல்லை

ரவீந்திரன்.சி.ஆர்:

பெயர்:  சி.ஆர்.ரவீந்திரன்

 

படைப்பாற்றல்: கட்டுரை, சிறுகதை, நாவல்

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புகள்:

  • ஒரு புயலின் ஓய்வு
  • பசியின் நிறம்
  • வானம் பார்த்த வனம்
  • எதிரீடுகள்

கட்டுரைத் தொகுப்புகள்:

  • ரிவோல்ட்
  • தேயிலைக் கொழுந்து
  • சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் - 3 தொகுப்புகள்:
  • முகாகவியின் மயக்கம்

நாவல்கள்:

  • ஈரம் கசிந்த நிலம்
  • மஞ்சுவெளி
  • வெயில் மழை
  • மணிய பேரா
  • செந்தூரச் சாரல்

விருதுகள்:

  • ஈரம் கசிந்த நிலம் - கல்கத்தா பாரதிய பாஸா பரிசு
  • கோவை கஸ்தூரி சீனிவாசன் பரிசு
  • தமிழக அரசு பரிசு

இவர் பற்றி:

  • வானம்பாடிக் கவிதை இயக்கத்தில் இருந்த காலத்தில் கவிதைகளுடன் இவரின் இலக்கிய வாழ்க்கை தொடங்கியது. 50 க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அதில் 12 நாவல்களும், சில மொழிபெயர்ப்பு நூல்களும் அடங்கும். சாகித்ய அகாதமியின் மாநிலக் குழு உறுப்பினராக இருந்தவர். இவரது படைப்புக்களில் நிதானமும், படைப்பிலிருந்து விலகாமல் கதை மாந்தர்களுடன் ஒன்றி ரவீந்திரன் இயங்குவதும் படைப்பின் முழு யாதார்த்தை உள்ளீடாகக் கொண்டிருப்பதும் விளங்கும். இவரின் படைப்புகள் விளிம்பு நிலை மக்களைப்பற்றியவையேயாகும். விளிம்பு நிலை மக்களைப்பற்றி தலித் அடையாளங்களுடன் இன்றைக்குப் படைப்புகள் பிரஸ்தாபிக்கப்படுகிற போது இருபது ஆண்டுகளுக்கு மேலாக இவரின் படைப்புகள் தலித் மக்களின் வாழ்க்கையை பிரதிபலித்திருப்பதை அடையாளம் காண முடியும். கொங்கு பிரதேசத்தின் பல்வேறு இனக் குழு வாழ்க்கையைப் பிரதிபலிப்பவையாகவும், வட்டார சமூக வரலாறாகவும், சமூகத்தோடு உறவு கொண்ட மனிதர்களின் வாழ்க்கையை கூர்ந்து கவனித்து பதிவு செய்து வருபவர்.




Copyright© 2009, Tamilauthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).